குற்றச்சாட்டு 63-07-07 1. நன்றி, சகோ. நெவில் அவர்களே, ஜெபத்திற்காக நாம் சற்று நேரம் நிற்போம். நாம் தலை வணங்குவோம். விண்ணப்பங்களை உங்கள் கைகளை உயர்த்து-வதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறீர்களா-? தேவனிடம், ''நான்... நான்...'' அவரிடம் நீங்கள் கேட்க விரும்புவதை உங்கள் மனதில் கொண்டவர்களாய், இப்பொழுது உங்களுக்காக நான் ஜெபத்தை ஏறெடுக்கப்போகும் இந்நேரத்தில், அதைப் பெற்றுக் கொண்டதாக உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 2. பரலோகப் பிதாவே, மந்தாரமான இந்த நாளில், தேவனுடைய வீட்டிற்கு வந்து உள்ளதை ஒரு பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறோம். இங்கு தேவனுடைய சூரிய வெளிச்சம் பிரகாசிப்பதையும், பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் மூலம் பாடுவதையும் பேசுவதையும், நாங்கள் காண்கிறோம்- உள்ளே சிறு சூரிய வெளிச்சம் பிரகாசிக்கின்றது. எங்கள் இருதயங்களைச் சுற்றிலும் பரலோக சூரிய வெளிச்சம் பிரகாசிப்பதனால், நாங்கள் உமக்கு எவ்வளவு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம்-! 3. இந்த சபையிலுள்ள ஜனங்கள் கைகளை உயர்த்தியுள்ளனர். இக்காலை வேளையில் அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு நீர் உத்தரவு அருளவேண்டு- மென்று அவர்கள் விரும்புகின்றனர். பிதாவே அவர்களுடைய ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் நீர் உத்தரவு அருளுமாறு வேண்டிக்கொள்கிறேன். மேசை மேல் அநேக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. எல்லா இடங்களிலும் விண்ணப் பங்கள் மயமாய் உள்ளன. ஜனங்கள் வியாதிப்பட்டு அவதியுறுகின்றனர். தூர இடங்களிலிருந்து சுமார் 50-தொலைபேசி அழைப்புகள் தினமும் வருகின்றன. ஓ, தேவனே, நாங்கள் என்ன செய்வோம்-? ஆண்டவரே எங்களை வழி நடத்தும். நாங்கள் எவ்வழியில் செல்ல வேண்டுமென்றோ, என்ன செய்ய வேண்டும் என்றோ எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நீர் எங்களை சரியான விதத்தில் வழி நடத்தமுடியும். இவைகளை அருளுமாறு உம்மை வேண்டிக் கொள்கிறோம். ஏனெனில் எங்கள் எண்ணங்கள் இங்கே பூமியிலே நாங்கள் கொண்டிருக்கின்ற இந்த ஜீவனானது உம்மாலே தான் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை உமது கனத்திற்காக உபயோகிக்க நாங்கள் விரும்புகிறோம். பிதாவே, இந்த காரியங்களில் நீர் எங்களை வழி நடத்தும். 4. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதற்கும், பாடல்களைப் பாடுவதற்கும், ஜெபத்தை ஏறெடுப்பதற்கும் நாங்கள் கூடி வந்துள்ள இந்நாளில் எங்களை ஆசீர்வதியும். எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். எங்கள் பாடல்களில் எங்கள் உடன் மகிழ்ச்சி கொண்டு உம்முடைய வார்த்தையின் மூலம் எங்களுடன் பேசும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். (அமருங்கள்). 5. பசி, தாகம், கொண்டவர்களாய் காத்துக் கொண்டிருக்கிற மக்களுக்கு, பிரசங்க பீடத்தில் நான் நின்று கொண்டு பசிதாகமுள்ள ஆத்துமாக்களுக்கு ஜீவ அப்பத்தைப் பிட்டுக் கொடுப்பது போன்ற மற்றொரு சிலாக்கியம் உள்ள ஸ்தலத்தை நான் அறிந்திருக்கவில்லை. இது பெரிதான சிலாக்கியம். 6. ரைட் குடும்பத்தினர் யாராகிலும் இங்குள்ளனரா எனக்கேட்க விரும்புகிறேன் ஹாட்டி அல்லது ஆர்வில். ஹாட்டி, ஆர்வில் உங்களுடன் இருக்கிறாரா-? வீட்டிற்கு வர முடியுமா என்று அவரிடம் கேளுங்கள். நான் அவரிடம் ஒன்றைக் கூறியிருந்தேன். அவருக்கு நேரமுள்ள போது வீட்டிற்கு வரட்டும். இன்று காலை அதை என்னுடன் கொண்டு வர மறந்து விட்டேன். அது அவர்களுடைய வீட்டிலுள்ள நாய்க்காக. ஆராதனைக்கு பிறகு வீட்டுக்கு வர முடியுமானால்... 7. இப்பொழுது, ஹாட்டியின் சகோதரி ஈடித், குழந்தை பருவம் முதற்கொண்டு ஊனமுற்றிருக்கிறாள். அவள் இப்பொழுது வாலிபப் பெண்ணாக வளர்ந்து விட்டாள். தற்பொழுது அவள் மிகவும் மோசமான நிலையிலிருக்கிறாள். ஒரு ஆண்டிற்கு முன்பு நான் அங்கு சென்றிருந்தேன். அப்பொழுது தான் அவளுக்கு முதல் வலிப்பு ஏற்பட்டது. தேவனுடைய கிருபையினாலும் ஒத்தாசையினா லும் அவளுடைய கோளாறு என்னவென்பதை நான் உடனடியாகக் கண்டு கொள்ள முடிந்தது. 8. அவளுடைய கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு, அவளால் அவைகளைப் பிரிக்கவும் இயலவில்லை. அவளுடைய நரம்புகள் அதிக தளர்ச்சியுற்றிருப்பதால் இப்படி ஏற்பட்டுள்ளது. குழந்தை பருவத்தில் அவளுக்கு ஆறு மாதம் வயதாயிருந்த போது நேர்ந்த - இளம்பிள்ளை வாதம் தவிர வேறெந்த சரீரக் கோளாறும் இல்லை. அவள் வாழ்நாள் பூராவும் அழுது கொண்டிருந்தாள். அநேக ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அவளுக்காக ஜெபித்தோம். அன்று முதல் ஒரு ஆண்டு காலம், முன்பு வரைக்கும் அவள் சந்தோஷமாகவே இருந்து வந்தாள். 9. இப்பொழுதோ அவளுக்கு ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நிற்கும் சமயமாய் உள்ளது. வேறு விதமாகக் கூறினால், அவளுடைய வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்படும் சமயம் இது. அவளுடைய நரம்புகள் மோசமான நிலையில் உள்ளன. அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள் என்னும் எண்ணம் அவள் மனதில் புகுந்து விட்டது. அவள் இனி உயிர் வாழப் போவதில்லை என்று ஒவ்வொரு மணி நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். திடகாத்திரமும் ஆரோக்கியமுமுள்ள பெண்களும் கூட இப்படிப்பட்ட சமயத்தில் அதிக கஷ்டப் படுவார்கள். அவர்கள் ஹார்மோன் ஊசிகளைப் போட்டுக்கொண்டு மருத்துவ மனைகளுக்குச் சென்று அதிர்ச்சி சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். மானிடர்களுக்கு வாழ்க்கையில் இரு மாறுதல்கள் ஏற்படுகின்றன. 10. ஒரு பையன் மனிதனாக மாறுகிறான். ஒரு சிறு பெண்ணும் ஸ்திரீ ஆகின்றாள். அவர்களுக்குப் 16, 17 வயதாகும் போது, ஒரு வினோதமான உணர்ச்சி அவர்களில் ஏற்படுகின்றது. அந்த வயதில் நீங்களும் அவர்களுடன் கஷ்டப்பட்டால் ... இப்பொழுது அந்த வயதில் எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் ரெபேக்கா. அவளுக்காக ஜெபியுங்கள். பில்லியும். ஓ, நாம் ஒவ்வொருவரும் அந்த கட்டுமீறிய (frantic) வயதைக் கடந்து வந்திருக்கிறோம். எனவே அவர்களும் அதைக் கடக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், நாமும் அவர்களுடன் கஷ்டப்பட வேண்டும். 11. ஈடித்துக்கு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் வாழ்க்கையில் ஒரு மாறுதல் உண்டாகிறது. எனவே ஏழு முறை ஏழு - அது மிகவும் கடினமாயுள்ளது. ஒரு முழுமையான மாறுதல் அப்போது ஏற்படுகின்றது. அது ஸ்திரீகளைத் தொல்லைப்படுத்துகின்றது. ஆண்களுக்கு அது ஒரு விந்தை யான விளக்குவதற்கு கடினமான, குழப்பம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அந்நேரங்களில் அவர்கள் மனைவிகளை விட்டுப் போய்வி டுகின்றனர். அதன் பின்பு ஸ்திரீகள் கருத்தரிப்பதில்லை. நாம் எல்லோரும் அதைக் கடக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அந்நேரங்களில் நாம் ஒருவரையொருவர் பொறுத்துக் கொண்டு, இவைகளைப் புரிந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். 12. ஈடித் இந்த நிலையையடைந்திருக்கிறாள். அவளுடைய எடை குறைந்து விட்டது. காண்பதற்கு அவள் மிகவும் மோசமாயிருக்கிறாள். சில இரவுகளில் நீங்கள் (எல்லோரும் ஒருமித்து அல்லது) அங்கு சென்று... அவர்கள் இரவும் பகலும் அவளுடன் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த கூடாரத்திலிருந்து சிலர் அங்கு சென்றால் நம்முடன் இணைந்துள்ள வெவ்வேறு கூடாரங்களில் இருந்து சிலர் அங்கு சென்று ரைட் குடும்பத்தினரைக் கண்டால், அவர்கள் அதைப் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். அங்கு சென்று சற்று நேரம் அவர்களுடன் அமர்ந்து விட்டு அவர்களுடன் கைகுலுக்கினால்... நண்பர்கள் என்ற முறையில் அவர்களைச் சென்று காணுதல். 13. அதை நாம் எளிதில் மறந்துவிடுகிறோம். ஆனால் நம் வீட்டில் அப்படிப் பட்ட ஒன்று நிகழும் போது, மற்றவர்களுடைய செயல்களை நாம் பாராட்டு கிறோம். மற்றவர்களும் அத்தகைய செயல்களை பாராட்டுவார்கள் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். ரைட் குடும்பத்தினர் அதைப் பாராட்டுவார்கள் என்று நிச்சயம் எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட நிலை அங்குள்ளது என்று நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் சென்றிருப்பீர்கள். ஆனால் உங்களுக்குத் தெரியாது. எனவே இதை உங்களுக்கு அறிவிக்கிறேன். 14. நீங்கள் ரைட் குடும்பத்தினரை சந்தித்து, ஈடித்துக்கு உற்சாக மூட்டுங்கள். அவள் நிலை மோசமாயுள்ளது என்று அவளிடம் கூற வேண்டாம். அவள் தேறி வருகிறாள் என்று அவளிடம் சொல்லுங்கள். நீங்கள் அவளுக்காக ஜெபம் செய்தால் அவள் நிச்சயம் குணமாகிவிடுவாள். அதற்காகதான் நாம் இங்கு இருக்கிறோம். அவள் நமது சகோதரி. இப்படிப்பட்ட சமயங்களில் ஜெபிப்பதற்-காகவே நாம் இங்கிருக்கிறோம். என் சோதனைகளினூடே நானும் கடந்து சென்று கொண்டிருந்த போது, யாராகிலும் எனக்காக ஜெபம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அது போல உங்களுக்காக யாராகிலும் ஜெபம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். 15. இந்த கூட்டத்திற்கு வருபவர்களில் ரைட் குடும்பத்தினர் மிகவும் பழமை-யான அங்கத்தினர். சகோ.ராய்-ஸ்லாட்டர், சகோதரி ஸ்லாட்டரும் கூட. அவர்களை சற்று முன்பு கண்டேன். அவர்கள் உள்ளே நுழைந்த போது அவர்களைப்பார்த்து கையாட்டினேன். எத்தனை ஆண்டுகளாக, அவர்களுடைய சோதனையின் மத்தியிலும் சகோதரன் ஸ்லாட்டரும் சகோதரி ஸ்லாட்டரும் இந்த சபைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்-!" என்று எண்ணினேன். அவ்வாறே ரைட் குடும்பத்தினரும்... அவர்களை நாம் பாராட்ட வேண்டும். பாருங்கள்-? நமது பாராட்டுதலை அவர்களுக்குத் தெரிவிப்போம். 16. இன்றைக்காக நீண்ட செய்தியை நான் வைத்திருக்கிறேன். அது குற்றச் சாட்டைக் குறித்தது. 17. இன்றிரவு அப்பம் பிட்குதலும் கால் கழுவுதலும் இருக்குமென்று கேள்விப் படுகிறேன். போதகர் அப்பொழுது செய்தியளிப்பார். நீங்கள் இங்கிருக்க நேர்ந்தால், போதகர் மூலமாக கர்த்தர் அளிக்கும் செய்தியைக் கேட்டு அனுபவியுங்கள். இன்றிரவு அப்பம் பிட்குதலும் கால் கழுவுதலும். ஜன நெருக்கம் இன்றிரவு அதிகமாக இருக்கும். வேறெங்கும் செல்லாமலிருந்தால், நீங்கள் இங்கு வர நாங்கள் விரும்புவோம். 18. டான்-ரட்டல் சகோ.ஜாக்ஸன் (இவர்களெல்லாரும் நம்முடன் ஐக்கியங் கொண்டு உள்ள சபைகளின் போதகர்கள்) ஜார்ஜியாவிலுள்ள சபையின் போதகரான சகோ.ஜாக்-பாமர் இவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். இங்கு நான் ஆராதனைகளுக்கு வரும் போது, அவர்கள் இங்கு வந்து நம்மைச் சந்திக்கின்றனர். அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 19. இன்று காலை என் நல்நண்பர் டாக்டர்-லீ-வேயிலையும் அவருடைய மனைவியையும் காண்கிறேன். நான் முதலில் சகோதரி வேயிலைத் தான் பார்த்தேன். சகோதரன் லீ வந்திருக்கிறாரா என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அவருடன் சற்று சண்டையிட வேண்டும். அந்த கன்வென்ஷனுக்கு அவர், வந்து உதவிசெய்வாரென்று அவருடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ''லீ, வந்தால் அவரை பிரசங்கம் செய்ய விட்டு விட்டு, நான் வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்யலாம்,'' என்று மனதில் எண்ணியிருந்தேன். நாங்கள் அவருக்கு செய்தி அனுப்பினோம், எவ்வளவோ தேடியும் அங்கு காணவில்லை. எனவே அவருடன் சற்று சண்டையிடவேண்டும். இன்று காலை சகோதரன், சகோதரி-வேயில் வந்து இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. 20. எங்களுக்குத் தெரியாத அநேகர் இங்கு வந்துள்ளனர். இங்கு ஒரு சகோதரியைக் காண்கிறேன். அவள் சிக்காகோவிலிருந்து வந்திருக்கிறாள் என்று நினைக்கிறேன். இங்கு வந்திருக்கும் அந்த குழுவை எனக்குத் தெரியும். ஆனால் அவர்களுடைய பெயர்கள் எனக்கு சரிவர ஞாபகமில்லை. எனவே எல்லாவிடங்களிலுமிருந்து இங்கு வந்துள்ளவர்களுக்கு - அவர்கள் எங்கிருந்து வந்தாலும் - எங்கள் பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறோம். 21. ஊழியத்திற்காக அபிஷேகம் பெறுவதற்காக இங்கு வந்துள்ள இரு வாலிபரை (ஊழியத்தைப் பொறுத்தவரை அவர்கள் வாலிபர் தாம்) காண்கி-றேன். அவர்கள் நியூயார்க்கிலிருந்து வந்திருக்கும் இரு கறுப்பு சகோதரர்கள். பிலதெல்பியா சபையிலிருந்து அவர்கள் நற்சாட்சி பத்திரம் கொண்டு வந்து நமது சபையிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் மேல் நாம் கைகளை வைத்து, நியூயார்க்கில் அவர்கள் நடத்தும் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிக்குமாறு கேட்டுக் கொள்ளப் போகிறோம். நமக்கு அங்கு இரண்டு, மூன்று சிறிய சபைகள் உள்ளன. ஒரு சபையை சகோதரன்.மிலானோ கண்காணிக்கிறார் என்று நினைக்கிறேன். அவரை நாம் பாராட்டுகிறோம். இப்பொழுது இன்னும் இரண்டு பேர் சென்று அங்குள்ள ஜனங்களுக்கு ஆராதனைகளை நடத்தப் போகிறார்கள். இப்படிப்பட்ட காரியங்களை நாங்கள் பாராட்டுகிறோம். 22. கர்த்தர் உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக. நான் சுற்று முற்றும் பார்த்து, புதிதாய் வந்துள்ள அநேகரைக்காண்கிறேன். அவர்களுடைய பெயர்கள் எனக்கு ஞாபகம் வரவில்லை. ஆனால் தேவன் அவர்களை அறிந்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். 23. பியானோ வாசிக்கும் சகோதரி அல்லது வேறு யாராகிலும் இங்கு வந்து இந்த பாடலை வாசிக்கவும். நெருப்புத் தழல் தீர்க்கதரிசியைத் தொட்டு அவனை முழுவதும் பரிசுத்தமாக்கின பின்பு தேவனுடைய சத்தம் "யார் நமது காரியமாகப் போவான்" என்று கேட்டது அப்பொழுது அவன், ''இதோ, அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்'' என்றான். 24. நமது கைகளை இந்த போதகர்கள் மீது வைத்து ஊழியத்திற்காக அபிஷேகிக்கும் போது... கைகளை வைத்து ஒருவரைப் போதகராக அபிஷேகம் செய்வது என்பது வேதப்பூர்வமான முறையாகும். அங்கு தான் பின்மாரி ஸ்தாபன சகோதரர்கள் பாட்டில்ஃபோர்ட் மக்கள் போன்றவர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். கைகளை ஒருவர் மீது வைப்பதனால் அவருக்கு ஆவிக் குரிய வரங்களைப் புதிதாக அளிப்பதாக அவர்கள் எண்ணியுள்ளனர். ஏற்கனவே அவர்களுக்குள் இருப்பதை நாம் அடையாளம் கண்டு கொண்டதை ஆமோதிக்கும் ஒன்றாகவே கைகளை வைக்குதல் அமைந்துள்ளது என்று நாம் நம்புகிறோம். பாருங்கள்-? அது 'ஆமென்னாக உள்ளது. பாருங்கள்-? 25. தீமோத்தேயுவின் மேலும் மற்ற சகோதரர் மேலும் அவர்கள் கைகளை வைத்த போது, அவர்களுக்குள் வரங்கள் இருப்பதை அவர்கள் கவனித்து வந்தனர். ''உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல் மூட்டி எழுப்பி விடு. அது முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள் இருந்தது.'' அவர்கள் அந்த வரத்தை தீமோத்தேயுவுக்குள் கண்டார்கள். ஆகவே, மூப்பர்கள் அவன் மேல் கைகளை வைத்து ஊழியத்திற்கென்று அவனை அபிஷேகம் செய்தனர். தேவனுடைய வரம் வெளிப்படையாகாத ஒரு மனிதன் மேல் அவர்கள் கைகளை வைக்கவில்லை. பார்த்தீர்களா-? அவர்கள் தேவனுடைய ஆசீர்வாத-ங்களுக்காக மாத்திரம் வேண்டிக் கொண்டனர். அப்படித்தான் நாமும் விசுவாசிக்கிறோம். நாம் அவர்களுக்கு ஆவிக்குரிய வரங்களை அளிப்பது இல்லை. அவர்களுக்குள் இருக்கும் வரங்களை நாம் அடையாளம் கண்டு கொண்டு, கைகளை அவர்கள் மேல் வைத்து, தேவன் இப்படிப்பட்ட காரியங்களை ஜனங்களுக்கு செய்து வந்திருக்கிறார் என்று விசுவாசித்து, அவைகள் கிரியை செய்ய நாம் அனுமதி தருகிறோம். 26. பின்னால் சகோ.மக்கின்னி (கின்னியா அல்லது மக்கின்னியா-?) உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அவர் மெதோடிஸ்டு போதகராய் இருந்தார். அண்மையில் ஊழியத்திற்காக இங்கு அபிஷேகம் பண்ணப்பட்டார். (அது சரியென்று நினைக்கிறேன். இந்த மேடையின் மேல்). ஓஹையோவில் உள்ள சகோ.டாஷ், சகோதரி டாஷ், அங்குள்ள குழுவுக்கு இவர் உதவியாக இருப்பார். 27. இந்த சிறு சிறு இடங்களிலிருந்து ஜனங்கள் வந்து இங்கு ஒன்று கூடுவது, ஓ, அது எவ்வளவு அற்புதமாயுள்ளது-! நமக்கு ஸ்தாபனமோ, எந்தவித கட்டுப்பாடோ கிடையாது. இயேசு கிறிஸ்து மாத்திரமே நமக்கிருக்கிறார். அவ்வளவு தான் (பாருங்கள்-?). நாம் ஒன்று கூடி உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். 28. சரி, சகோதரியே... "நெருப்புத் தழல் தீர்க்கதரிசியைத் தொட்ட போது'' என்னும் பாடலின் முதலாம் சரணத்தை பாடுவோம். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடுவோம்: நெருப்புத் தழல் தீர்க்கதரிசியைத் தொட்டு அவனை முழுவதும் பரிசுத்தமாக்கின பின்பு தேவனுடைய சத்தம், யார் நமது காரியமாகப் போவான்'' என்று கேட்டது அப்பொழுது அவன், "இதோ, அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்'' என்றான். என் ஆண்டவரே பேசும்; என் ஆண்டவரே, பேசும்; (சகோதரர்கள் முன்னால் வரவும்) பேசும், நான் உடனே உமக்கு உத்தரவு அருளுவேன் (சபையோர் தொடர்ந்து பாடுகின்றனர் - ஆசி ) 29. மற்ற போதகர் சகோதரர்களும் இந்த கூடாரத்துடன் ஐக்கியங் கொண்டு உள்ளவர்கள் முன்னால் வந்து உங்கள் கைகளை அவர்கள் மேல் வையுங்கள்: சகோ.ரட்டல், சகோ.லாம்ப், மற்றோர். பேசும், அப்பொழுது, 'ஆண்டவரே என்னை அனுப்பும்'' என்பேன். ஓ, கோடிக்கணக்கானோர் பாவத்திலும் அவமானத்திலும் மரித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுடைய பரிதாபமான கசப்பான கூக்குரலைக் கேளுங்கள் சகோதரரே, துரிதமாகச் சென்று அவர்களைக் காப்பாற்றுங்கள் உடனே, "எஜமானே, இங்கே இருக்கிறேன்'' என்று உத்தரவு அருளுங்கள் என் ஆண்டவரே, பேசும்; என் ஆண்டவரே, பேசும்; பேசும், நான் உடனே உமக்கு உத்தரவு அருளுவேன் என் ஆண்டவரே பேசும், என் ஆண்டவரே பேசும், பேசும், "ஆண்டவரே, என்னை அனுப்பும்'' என்று உத்தரவு அருளுவேன். 30. சகோ. பிரன்ஹாம் : சகோதரனே, உங்கள் பெயர் என்ன-? சகோ.ஹண்ட் : ஆர்லண்டோ ஹண்ட் சகோ.பிரன்ஹாம் : நியூயார்க் பட்டணத்தைச் சார்ந்த சகோ.ஆர்லண்டோ ஹண்ட். அது சரி தானே-? சகோதரனே..... சகோ.கோல்மன்: ஜோசப் கோல்மன் சகோ.பிரன்ஹாம்: ஜோசப் கோல்மன் சகோதரரே, திரும்பி சபையோரைப் பாருங்கள். 31. சகோ.ஹண்ட்சகோ. கோல்மன். தேவனுடைய அழைப்பை அவர்கள் தங்கள் இருதயங்களில் பெற்றுள்ளனர். இப்பொழுது நாம் பாடின விதமாக, ''கோடிக் கணக்கானோர் பாவத்திலும் அவமானத்திலும் மரித்துக் கொண்டிருக்கின்றனர்.'' அவர்களுடைய பரிதாபமான, கசப்பான கூக்குரலை இவர்கள் கேட்டனர். எனவே நாம் அவர்களிடம் ''சகோதரரே, துரிதமாகச் சென்று அவர்களைக் காப்பாற்றுங்கள்,'' என்று கேட்டுக்கொள்கிறோம். பாருங்கள்-? நீங்களும் உடனடியாக, ''எஜமானே, இங்கே இருக்கிறேன்,'' என்று உத்தரவு அருளுகிறீர்கள். அப்படித் தான் அவர்கள் இன்று காலை உத்தரவு அருளுகிறார்கள். 32. இச்சபையின் சகோதரர் என்னும் முறையில் நாம் அவர்கள் மேல் கைகளை வைத்து, இதை அனுமதித்து, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக அவர்களுக்கு வலது கை கொடுத்து, எங்கள் ஆதரவுடன் அவர்களை இயேசுகிறிஸ்துவின் சாட்சிகளாக நியமிக்கிறோம். சுவிசேஷத்தில் கனம்மிக்கதும், சரியானதுமான எல்லாவற்றிற்கும் அவர்களுக்கு எங்கள் ஆதரவை அளிப்போம். தேவன் அவருடைய மகிமைக்காக அவர்களை உபயோகிக்க வேண்டுமென்று, இவர்களுக்காக நாங்கள் எப்பொழுதும் எங்கள் ஜெபங்களை ஏறெடுத்து கொண்டிருப்போம். அவர்களுடைய ஊழியங்கள் நியூயார்க்கில் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படுவதாக-! அவர்களுடைய வாழ்க்கை அவருடைய சேவையால் நிறைந்ததாய், அநேக விலையேறப்பெற்ற அரிக்கட்டுகளை அவருடைய இராஜ்யத்தில் கொண்டு வருவார்களாக-! அவர்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ்வார்களாக-! தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை தமது நித்திய பிரசன்னத்தினால் இடைக்கட்டி, அவர்களுக்கு ஆரோக்கியமும் பெலனும் அருளி, இளைப்பாறுதலுக்கென அவர்களை இயேசு கிறிஸ்து தமது நித்திய வீட்டிற்கு அழைத்துக்கொள்ளும் நாள் வரைக்கும், அவர்களைத் தமது ஊழியத்தில் வைத்துக்கொள்வாராக-! 33. ஊழியக்காரராகிய நாங்கள் முன்னால் சென்று அவர்கள் மேல் கைகளை வைக்கும்போது, சபையோர் தலை வணங்கியிருக்கவும் (இரு சகோதரர்களின் மேலும் கைகளை வைக்க சகோ.பிரன்ஹாம் ஒலி பெருக்கியிலிருந்து தள்ளி வருகிறார்- ஆசி ) 34. எங்கள் பரலோகப் பிதாவே, இந்த சகோதரன் மேல் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் கைகளை வைக்கிறோம். ஆண்டவரே, எங்களுக்குத் தெரிந்தவரையிலும், அவர் நீதிமானாயிருந்து வந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையில், ஊழியத்திற்காக ஏற்பட்டுள்ள இந்த அழைப்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவரே, இந்த சகோதரனின் மூலம் நீர் பேசி, ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி, வியாதியாலும், ஆவிக்குரிய விதமாகவும் கட்டுண்டவர்களுக்கு விடுதலையைத் தாரும். ஆண்டவரே, அவருக்கு உண்மையான ஊழியத்தைத் தாரும். அவருடைய வாழ்க்கை பாதையின் முடிவில், அவர் கடந்து வந்த அந்த நீண்ட பாதையை திரும்பிப் பார்த்து, தேவ கிருபையினால் எல்லா சத்துருக்களையும் அவரால் மேற் கொள்ள முடிந்தது என்று அறிந்து கொள்ள கிருபையருளும். எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் இதை கேட்கிறோம். ஆமென். 35. சகோ.கோல்மனின் மேலும் நாங்கள் சாட்சிகளாக எங்கள் கைகளை வைத்து, அவருடைய அழைப்புக்கு அனுமதியளித்து, சபையாகிய நாங்கள் இந்த குழு- அவர் தேவனுடைய ஊழியன் என்பதை நம்புகிறோம். அவரை ஆசீர்வதித்து அவருக்கு மகத்தான ஊழியத்தையளித்து, அவர் தம் ஆண்டவரு-க்காக அநேக ஆத்துமாக்களை வெல்லவும் கட்டுண்டவர்களை விடுதலையாக்-கவும், அவர் தொடர்பு கொள்பவர்களின் வாழ்க்கையைச் சுற்றிலும் காணப்படும் சாத்தானின் வல்லமைகளை முறியடிக்கவும் கிருபை அருளும். அவருக்கு பலனுள்ள வாழ்க்கையை தாரும். அவரும் தம் வாழ்க்கை பாதையின் முடிவை அடையும்போது, அவர் பின் நோக்கி அந்த நீண்டபாதையைக் கண்டு, இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் சத்துருவின் எல்லா விலங்குகளையும் அவர் தேவனுடைய மகிமைக்காக உடைத்தெறிய முடிந்தது என்னும் திருப்தி கொள்ள கிருபையருளும். 36. பரலோகப் பிதாவே, இம் மனிதர் இருவரும் தேவனுடைய அறுவடையில் பணிபுரிவார்களாக-! எங்கள் எஜமானுடைய பாதங்களின் கீழ் நாங்கள் ஒன்று கூடும் அந்நேரம் வரைக்கும் உம்முடைய ஆசீர்வாதம் அவர்கள் மேல் தங்கி இருப்பதாக-! இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். 37. சகோ.ஹண்ட், தேவன் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்கு பலன் மிகுந்த ஊழியத்தை தருவாராக-! சகோதரனே, உங்களையும் தேவன் ஆசீர்வதித்து, பலன் மிகுந்த ஊழியத்தை, தருவாராக-! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக-! மறுபடியுமாக. நெருப்புத்தழல் தீர்க்கதரிசியைத் தொட்டு அவனை முழுவதும் பரிசுத்தமாக்கின பின்பு தேவனுடைய சத்தம், 'யார் நமது காரியமாகப் போவான்'' என்று கேட்டது அப்பொழுது அவன், "இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்'' என்றான். ஓ, என் ஆண்டவரே, பேசும் (அவர் அநேக இருதயங்களுடன் பேசட்டும்) என் ஆண்டவரே பேசும் (தேவனால் அழைக்கப்படுதல்) பேசும், நான் உடனே உமக்கு உத்தரவு அருளுவேன் என் ஆண்டவரே, பேசும்; என் ஆண்டவரே, பேசும்; பேசும், ''ஆண்டவரே என்னை அனுப்பும்'' என்று உத்தரவு அருளுவேன். 38. இக்கடைசி நாட்களில் மிஷினரி வேலைக்காக இப்போதகர்களை அனுப்புவதை சபைக்கு காணக் கிடைத்த இந்த மகத்தான கனத்திற்காக இன்று காலை நாம் எவ்வளவு நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம்-! என் சகோதரரே, தேவனுடைய கிருபை உங்களுடன் செல்வதாக. உங்களை அவர் அயல் நாடுகளுக்கும் உலகம் முழுவதற்கும் அனுப்பி, அவருடைய ஆராய்ந்து முடியாத ஐசுவரியத்தை பிரசங்கம் பண்ணும்படி செய்வார் என்று நம்புகிறேன். உலகத்திற்கு இன்று அது மிகவும் தேவையாயுள்ளது. 39. அநேக நல்ல காரியங்கள் இருக்கின்றன. எனவே இன்று காலையில் இங்கு கொஞ்சமும் அங்கு கொஞ்சமும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். இன்றைக்கு ஒரு பொருளின் பேரில் நான் பேச எத்தனித்து உள்ளேன்... இந்த பயங்கரமான நேரங்களைக் குறித்து பேச சில சமயங்களில் எனக்கு விருப்பமில்லை. 40. கடந்த ஞாயிறன்று சிலர் இங்கு வராமலிருந்து, ''மூன்றாம் யாத்திரை'' என்னும் செய்தியை கேட்கத் தவறியிருந்தால் உங்களுக்கு விருப்பமானால் அந்த ஒலிநாடாவை வாங்கிக் கேளுங்கள். அதைக் கேட்டு களிகூர்வீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன், ''மூன்றாம் யாத்திரை.'' 41. இங்கிருப்பது யார்-? வியாதியுள்ள சிறுவனா-? முடவனான சிறுவன். ஆம்-! தேவன் அவனை ஆசீர்வதிப்பாராக... சரி, முடிவில் நாம் எப்படியும் வியாதிய-ஸ்தருக்கு ஜெபிக்கப்போகிறோம். பாருங்கள்-? எனவே நாம் இப்பொழுது... 42. கூடுமானால் ''மூன்றாம் யாத்திரை'' செய்தியின் ஒலி நாடாவை வாங்கிக் கேளுங்கள். மூன்றாம் முறையாக அந்த ஒளி - கர்த்தருடைய தூதனானவர்-தம்மை பூமியில் வெளிப்படையாகக் காண்பித்து, ஜனங்களை யாத்திரை க்கு அழைக்கிறார். அது மிகவும் சிறந்ததாக எனக்குத் தோன்றுகிறது- மூன்றாம் யாத்திரை. 43. என் கோட்டை நான் கழற்றலாமா-? இக்கூடாரம் இன்று மிகவும் வெப்பமா-யுள்ளது. இங்குள்ள ஒரே ஏர்கண்டிஷன் நமது விசிறி ஆகும். நமது மின்சாரத்தை நாமே மின்விசிறியின் மூலம் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். ஏற்பாடுகள் செய்து முடித்த பின் ஒரு குளுமையாக்கும் இயந்திரத்தை நிறுவ நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 44. “மூன்றாம் யாத்திரை'' என்னும் செய்தியை நீங்கள் கேட்பீர்களானால் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருப்போம். அநேக யாத்திரைகள் இருந்திருக்கின் றன. ஆனால் குறிப்பாக மூன்று யாத்திரைகள். அது நிகழ்ந்த இடங்களையும் நேரங்களையும் நாம் கூறமுடியும். தேவன் அக்கினி ஸ்தம்ப வடிவில் இறங்கி வந்து ஜனங்களை அழைத்து, அவர்களைப் பிரித்தெடுத்தார். ஆகவே இப்பொழுது ஜனங்களைப் பிரித்தெடுக்கும் நேரமாயுள்ளது. 45. முதலாம் யாத்திரையை அழைத்த போது, அவர் அவர்களுக்கு முன்பாக அக்கினி ஸ்தம்பத்தில் சென்று, அவர்களை ஒரு தேசத்திற்கு வழி நடத்தினார். பின்னர் அவர் அவர்களுக்கு முன்பாக இயேசுகிறிஸ்து என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனின் ரூபத்தில் பிரத்தியட்சமானார் (அவர் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்து தேவனிடத்திற்கு மறுபடியும் சென்றார்). அவர் புறக்கணிக்கப் பட்டார். முதலாவதாக, எகிப்தில் அவர்கள் குளிர்ந்த நிலையை அடைந்து, எகிப்தியரின் பாவங்களிலும் வழிமுறைகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது, தேவன் அவர்களை வெளியே அழைத்தார். 46. இரண்டாம் முறை அவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் கீழ் அடிமைகளாயி ருந்தனர். அவர்கள் உண்மையான வழிபாட்டை விட்டகன்று, கோட்பாடுகளுக்கு சென்று விட்டிருந்தனர். அப்பொழுது தேவன் மறுபடியும் மற்றொரு யாத்திரை யை நியமித்தார். அச்சமயம் அவர் மனிதர்களை வழி நடத்தின ஒரு மனிதனின் உருவத்தில் தோன்றினார். 47. முதலாம் யாத்திரையின் போது அவர் அக்கினி ஸ்தம்பமாக இருந்தார். பின்னர் அவர் ஆட்டுக்குட்டியாக இவ்வுலகில் தோன்றி அவர்களை அங்கு வழிநடத்தினார்.... ஆயிரம் வருட அரசாட்சிக்கு இது எவ்வளவு அழகான முன்னடையாளமாயுள்ளது-! இப்பொழுது அவர் சபையை அங்கு தான் வழி நடத்தி கொண்டிருக்கிறார். அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தாசிப்போம் - அவருடைய மகிமையின் சரீரத்தைப் போலவே நாமும் ஒரு சரீரத்தைப் பெற்றுக்கொள்வோம். 48. ஆகவே இன்று, ஒரு வெளிச்சத்திலிருந்து பிரதிபலித்துக் கொண்டிருக்கிற சுவிசேஷ ஒளியானது, நம்மத்தியில் பிரத்தியட்சமாக காணப்படுகின்ற அக்கினி ஸ்தம்பம். விஞ்ஞானம் அதைக் கண்டு இருக்கிறது. அது பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு உலகம் முழுவதும் சென்று உள்ளது. விஞ்ஞானத்தின் மூலமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் அது அதே அக்கினி ஸ்தம்பம் என்று அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு அதே அடையாளங்களையும் அற்புதங்களையும் எப்பொழுதும் போலவே செய்து கொண்டு வருகிறது. அநேக மூடத்தனமான காரியங்கள் இந்நாட்களில் நடந்து கொண்டிருக்கின்றன. அவைகளின் மத்தியில் தேவன் தம்மை அடையாளம் காண்பித்து வருகிறார். 49. ஒரு நாளில் பூமிக்குரிய இந்தக் கூடாரம்- பலவீனமான, வியாதியுள்ள இச்சரீரம்- அவருடைய மகிமையின் சரீரத்திற்கு ஒப்பாக மாற்றப்படும் என்று நாம் அறிந்திருப்பது எவ்வளவு மகிமையுள்ளதாயிருக்கிறது-! அப்பொழுது நாம் அவர் இருக்கிற வண்ணமாகவே அவரைத் தரிசித்து, நாம் பிரயாணப்பட்டுக் கொண்டு இருக்கும் அந்த தேசத்தில் அவருடன் என்றென்றும் வாழுவோம். ஓ, நான் எழுந்து நின்று, "வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கும் தேசத்திற்கு நான் சென்று கொண்டிருக்கிறேன்'' என்னும் பாடலைப் பாடவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. ஒருக்கால் நமது ஞானஸ்நான ஆராதனையின் போது அப்பாடலைப் பாடலாம். ஏனெனில் அது நமது ஞானஸ்நான பாடலாய் உள்ளது. 50. இப்பொழுது நமது சகோதரருக்கும், இந்த ஒலிநாடா செல்லவிருக்கும் உலக முழுவதிலுமுள்ள மக்களுக்கும் இதை கூற விரும்புகிறேன். இந்த செய்தி எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கி பேசப்படும் ஒன்றல்ல. நாங்கள் மூட பக்தி வைராக்கியம் பொருந்திய குழுவென்றும், நாங்கள் தேவனுக்கு விரோத-மாகவும் சபைக்கு விரோதமாகவும் எங்களை வேறு பிரித்துக் கொண்டு ஒன்று குழுமியுள்ளோம் என்று யாரும் எண்ண வேண்டாம். நாங்கள் எப்பொழுதும் சபையையே ஆதரிக்கிறோம். இன்று நாங்கள் இவ்வாறு பிரிந்திருக்கும் காரணம் என்னவென்று பரிசுத்த ஆவியின் உதவியினால் உங்களுக்குச் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறோம். அவ்விதம் எங்களைப் பிரித்துக் கொள்வதில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. 51. சபைகள் அனைத்தும் ஒருமித்து ஐக்கியம் கொள்ள வேண்டுமென்றும், அவர்கள் தங்களை மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், ஒருத்துவக்காரர், திருத்து-வக்காரர் என்று வெவ்வேறு குழுக்களாக வேறு பிரித்துக் கொள்ளக் கூடாது என்பதும் எங்கள் கருத்தாகும். அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, ஒரே பெரிய இயேசு கிறிஸ்துவின் சரீரமாக அமைந்து, அவருடைய மகத்தான வருகையை எதிர் நோக்கினவர்களாக இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் பிரிந்திருக்கக் கூடாது. 52. அவர்கள் அவ்விதம் ஒன்றாக இணைந்திராமல் வெவ்வேறாக பிரிந்து இருப்பதற்கு ஏதாவது அடிப்படையான காரணம் இருக்க வேண்டும். அதை ஆராய்ந்து பார்ப்போமானால், அது சரும நிற வித்தியாசத்தின் காரணமாக அல்ல. ஏனெனில் வெவ்வேறு ஸ்தாபனங்களில் மஞ்சள், கறுப்பு, பழுப்பு வெள்ளை நிறத்தவர் கலந்திருக்கின்றனர். நாம் உண்ணும் உணவு அதற்கு காரணமல்ல. ஏனெனில் நாமெல்லோரும் ஒரே விதமான உணவை உண்டு, ஒரே விதமான உடைகளை உடுக்கிறோம். அதற்கு அடிப்படையான காரணம் என்னவெனில் மனிதன் இருக்கின்ற நிலையான பாதையாகிய சுவிசேஷ போதகத்தின் பாதையை விட்டு வழி தவறிச் சென்று விட்டான், ஒவ்வொரு மனிதனும்..... 53. எது சரியென்றும் எது தவறென்றும் காண்பிப்பதற்கு ஏதாவது ஒரு வழி இருக்கத் தான் வேண்டும். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் சொந்த விளக்கங்களை அளிக்காமல், அது எழுதி உள்ளபடியே அதை வாசித்து, அப்படியே விசுவாசித்தலாகும். 54. ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த வியாக்கியானத்தை அதற்களிக்கும் போது, அது வித்தியாசமாகி விடுகிறது. நீங்கள் மூல ஸ்தாபனமாகிய கத்தோலிக்க சபைக்குச் செல்வீர்களானால், தேவன் சபையில் மாத்திரமே இருக்கிறாரென்றும், அதற்கும் தேவனுடைய வார்த்தைக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்றும் கத்தோலிக்க சபை நம்புகிறது 55. வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரத்தின்படி, பிராடெஸ்டெண்டுகளாகிய நாம் இனைவரும் குவியலாக குவிக்கப்பட்டிருக்கிறோம். எல்லா ஸ்தாபனங்களுக் கும் கத்தோலிக்க சபை தாயாக விளங்குகிறாள். பிராடெஸ்டெண்டு ஸ்தாபன மானது, இன்னுமாக குருடாக, குருடாக கத்தோலிக்க சபையின் அதே தன்மையைக் கொண்டதாக இருக்கிறது என்று நாம் பார்க்கிறோம். வேதம் பிராடெஸ்டெண்டு சபைகளை வேசிகள் என்றும், கத்தோலிக்க சபையை மகாவேசி - வேசிகளுக்குத் தாய் - என்றழைக்கிறது. அதற்கு அர்த்தம், அவள் தான் செய்த விவாகப் பொருத்தனைக்கு உண்மையாக வாழாத அபகீர்த்தி உள்ள பெயரைக் கொண்ட ஸ்திரீ என்பதாம். 56. நாமனைவரும் கிறிஸ்துவின் மணவாட்டி என்று கூறிக் கொண்டு, அதே சமயத்தில் அதற்கு உண்மையற்றவர்களாக இருக்கிறோம், அந்த உண்மையற்ற தன்மைக்கு காரணம் என்ன-? தேவன் தமது மணவாட்டிக்கென அளித்துள்ள வழிமுறைகளுக்கு - வேதத்துக்கு - முரணாக வாழ்வதால் (அது என் சொந்த அபிப்பிராயம்). ஆகவே அது தான் தவறாத நிலையிலுள்ள பிழையற்ற தேவனுடைய வார்த்தை என்று நான் விசுவாசிக்கிறேன். 57. எனவே பிராடெஸ்டெண்டு சபை, தனக்கென்று ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொள்ள, வேதவாக்கியங்களிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்கிறது. 58. ஸ்தாபனங்களில் போதகராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் சொந்த கருத்துக்களை... ஆ, அவர்களில் நூற்றுக்கணக்கானோர் என் அறைக்கு வந்து, "சகோ.பிரன்ஹாமே, ஜனங்களுக்கு நீர் சவால் விடுகிறீர். அதற்கு உத்தரவு சொல்ல அவர்களால் முடியாது. அது தான் சத்தியம் என்று அவர்களுக்கு தெரியும்'' என்கின்றனர். "அப்படியானால், நீங்கள் ஏன் அதைக் கைக்கொள்ளக்கூடாது-?'' என்று அவர்-களைக் கேட்டால், 59. "பாருங்கள், நான் அப்படி செய்தால், ஆகாரத்திற்காக பிச்சையெடுக்க நேரிடும். எனக்கு ஒரு ஊழியம் அளிக்கப்பட்டுள்ளது. நான் தேவனை அணுக வேண்டும், ஜனங்களையும் அணுக வேண்டும், நீங்கள் கூறுவது போன்று செய்தால் எனக்கு எந்த ஆதரவும் இராது,'' என்கின்றனர். 60. கிறிஸ்து தான் நமது ஆதரவாயிருக்க வேண்டுமென்றும், வேதம் தான் நம்மை ஆதரிக்க வேண்டுமென்றும் நீங்கள் உணருவதில்லையா-? பாருங்கள்-? 61. அப்படியானால் பிராடெஸ்டெண்டு சபையும் கத்தோலிக்க சபையைப் போன்று சரியாக அதே விதமாகவே இருக்கின்றது. 62. கத்தோலிக்க சபை எதற்கும் கவலைப்படுவதில்லை. வேதம் கூறுவதைக் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை என்று அவ்வளவு கடூரமான சொற்கள் உபயோகிக்க நான் விரும்பவில்லை, அவர்கள் வேதத்தை விசுவாசிக் கின்றனர். ஆனால் அவர்கள் அப்போஸ்தல வாரிசு, (Apostolic Succession) என்பதில் விசுவாசம் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் தான் கத்தோலிக்க சபை அமைக்கப்பட்டு உள்ளது. போப்பாண்டவர்கள் வழிவழியாக வருவதாகவும், பேதுரு தான் அவர்களுடைய முதலாம் போப்பாண்டவர் என்றும் அவர்கள் ஆணித்தரமாக விசுவாசிக்கின்றனர். 63. பிராடெஸ்டெண்டுகளும் ஒன்று கூடி (பாருங்கள்-?) ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் அவர்கள் செய்ததுபோலவே, இவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்கின்றனர். நிசாயா ஆலோசனை சங்கத்தில் தான் கத்தோலிக்க சபையை அவர்கள் ஸ்தாபித்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் ஒன்று போலவே இருக்கின்றனர். இருவரும் தேவனுடைய வார்த்தையை விட்டு விலகி, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். இன்றைக்கு வினோதமாகக் காணப்படு கின்ற அநேக மகத்தான சத்தியங்களை எடுத்துக்கொண்டால், அது அவர்களு க்கு ஒரு அன்னிய காரியமாக காணப்படுகிறது, ஏனெனில் அவர்களுக்கு சமயச் சடங்குகள் மாத்திரமே கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 64. நமக்கு வேதாகமத்தைத் தவிர வேறெந்த சமயச் சடங்கும் கிடையாது. தேவனுடைய பரிசுத்த வார்த்தையைத் தவிர வேறெதுவும் நமக்கு கிடையாது. அதில் தான் நாம் நிலைத்திருக்கிறோம். 65. தேவனுடைய பரிசுத்த புத்தகத்திலிருந்து ஒரு வேத வாக்கியத்தைப் வாசிக்க விரும்புகிறேன். அது பரி.லூக்கா சுவிசேஷம் 23-ம் அதிகாரத்தில் உள்ளது. இன்றைய பிரசங்கத்திற்கும் இதை அடிப்படையாகக் கொள்ள விரும்புகிறேன். பரி.லூக்கா 23-ம் அதிகாரத்திற்கு வேதத்தைத் திருப்புங்கள். அதிலிருந்து ஒரு வாக்கியத்தைப் வாசிக்க விரும்புகிறேன். இதுவே இன்றைய பிரசங்கத்தின் அடிப்படையாக இருக்கும். இப்பொழுது, நாம் 20-வது.... 23-வது அதிகாரம் 33-ம் வசனத்தைப் வாசிப்போம். ''கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது, அங்கே அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது பக்கத்தில் ஒரு குற்றவாளி யையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.'' லூக்கா 23:33. 66. இன்று பேசுவதற்கு அடிப்படையாக இவ்வசனத்திலிருந்து நான்கு வார்த்தை களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்: அங்கே அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள் - நான்கு வார்த்தைகள். என் பொருள்.... இயேசு கிறிஸ்துவை இந்நாளில் மறுபடியும் சிலுவையிலறைகின்றனர் என்ற குற்றச் சாட்டை இன்றைய ஸ்தாபன சபைகளின் மேலும் மற்றும் அநேக தனிப்பட்ட சபைகளின் மீதும் சுமத்துகிறேன். அவர்களை குற்றம் சாட்டுகிறேன். இன்றைய காலை பிரசங்கம் "குற்றச்சாட்டு," என்று அழைக்கப்படும். 67. ஒரு நீதிமன்ற அறையை நான் உபயோகிக்க விரும்புகிறேன். பிரசங்க பீடமும் சபையும் ஒரு விதத்தில் நீதிமன்றம் தான். வேதம் அதை "நியாயத் தீர்ப்பு ஆசனம்,'' என்றழைக்கிறது. நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்கும் காலமாயிருக்கிறது. அது ஒரு சிம்மாசனமாயுள்ளது. நீதிபதி குழுவினர், சாட்சிகள் அனைவரும் அங்கிருக்கின்றனர். இன்றைக்கு எனக்கு சாட்சியாக தேவனுடைய வார்த்தை இருக்கிறது. 68. என் குற்றச்சாட்டு இன்றைய ஸ்தாபனங்களுக்கு விரோதமாய் கூறப் படுகின்றது. இங்கு நான் பாவியைக்கொண்டு வரவில்லை. இதை நான் ஸ்தாப னங்களுக்காக பேசுகிறேன். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகின்றது, ஆகவே என்னால் கூடுமானவரை வேகமாக நான் கடந்து செல்ல முயற்சிக்கி றேன். இயேசுகிறிஸ்துவை 2-ம் முறையாக சிலுவையில் அறைந்ததற்காக இந்த சந்ததியைக் குற்றஞ்சாட்டுகிறேன். 69. நாம் வாழும் இக்காலத்தில் இதை நான் செய்யவேண்டுமானால் அதற்க் ஏற்ற சாட்சிகள் எனக்கு அவசியம். அவர்களை நான் குற்றம் சாட்ட வேண்டுமானால், அவர்கள் புரிந்த இக்குற்றத்தை நிரூபிக்க எனக்கு சாட்சிகள் வேண்டும். அப்பொழுது தான் நான் கூறுவதை தலைமை தாங்கும் நீதிபதி ஏற்றுக்கொள்ள முடியும். இந்தக் குற்றச்சாட்டில் என்னை ஒரு வழக்கறிஞராக பாவித்துக் கொள்கிறேன். தேவனுடைய வார்த்தையை என் சாட்சியாகக் கொண்டு சிலுவையிலறைந்த குற்றம் புரிந்ததாக இந்தச் சந்ததியைக் குற்றஞ்சாட்டுகிறேன். 70. முதலாம் சிலுவை மரணத்திற்கு காரணமாயிருந்த அதே ஆவி தான் இன்றைய மக்களின் மேலிருந்து கொண்டு அதே செயலைச் செய்யத் தூண்டுகிறது என்பதை நான் காண்பிப்பேன். அன்று சரீரத்திற்கு செய்யப்பட்ட அதே போக்கு இன்றைய மக்களில் இருந்து கொண்டு அதையே ஆவிக்குரிய பிரகாரம் செய்யத் தூண்டுகிறது என்பதை நான் ஜனங்களுக்கு எடுத்துக் காண்பிக்க வேண்டும். அன்று தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து-வின் சரீரத்தை அவர்கள் சிலுவையிலறைந்தார்கள். இன்று அதே வார்த்தையின் மூலமாகவும், அதே பரிசுத்தாவியின் மூலமாக-வும், அதே வார்த்தையின் மூலமாகவும் இன்றைய சபைகளின் நிலை என்னவென்பதைக் காண்பிக்க விரும்புகிறேன். அவர்கள் அதே செயலை இன்றும் செய்து வருகின்றனர். அவர்கள் அப்படி செய்வார்களென்று வேதம் கூறியுள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாள் தான் அது என்பதை நிரூபிப்போம். 71. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அப்படி செய்திருக்க முடியாது. 50-ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அப்படி செய்திருக்க முடியாது. ஆனால் இன்றைக்கு அப்படி செய்யவேண்டிய நேரம் வந்து விட்டது. 10-ஆண்டுகளுக்கு முன்பு கூட அவர்கள் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆனால் இன்று அவர்கள் அவ்விதம் செய்ய முடியும். ஏனெனில் காலம் கடந்து விட்டது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். அவருடைய ஊழியக்காரன் என்னும் முறையில், நாம் இந்த தேசத்தை விட்டு வேறொன்றிற்கு போகும் காலத்தை அடைந்திருக்கிறோம் என்று நம்புகிறேன். 72. தேசம் மனந்திரும்ப வேண்டிய காலம் கடந்து விட்டது. இந்த தேசம் இனி மனந்திரும்ப முடியாது என்று நம்புகிறேன். அது இரக்கத்திற்கும் நியாயத் தீர்ப்புக்கும் இடையேயுள்ள கோட்டை கடந்து விட்டது என்று நம்புகிறேன். அது தராசில் இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். 73. "சகோ.பிரன்ஹாமே, நீங்கள் வழக்கைத் தொடங்குவதற்கு முன்பு, அதை எப்படி உங்களால் நிரூபிக்க முடியும் என்று கேட்க விரும்புகிறேன்.'' 74. ஜலப்பிரளயத்துக்கு முன்னால் காணப்பட்ட எந்த பாவத்தின் நிமித்தமாக தேவன் உலகத்தை அழித்தாரோ, அதே பாவத்தைச் செய்த குற்றம் நம் மேல் உள்ளது. சோதோம் கொமோராவை அவர் எந்த பாவத்தின் நிமித்தம் அழித்தாரோ அதே பாவத்தைச் செய்த குற்றவாளிகளாக நாம் இருக்கிறோம். அதற்கான ஆவிக்குரிய எல்லா அத்தாட்சிகளும் நம்மிடையே உள்ளன. தேவனுடைய கிருபை அந்த சந்ததிகளின் மேல் தங்கியிருந்தது. அதைப் புறக்கணித்த காரணத்தால் நியாயத்தீர்ப்பு அவர்கள் மேல் விழுந்தது. அக்காலத்தவர் செய்தது போன்று இந்த சந்ததியும் அவருடைய கிருபையைப் புறக்கணிக்குமானால், நியாயத்தீர்ப்பின்றி இவர்களை விட்டுவிட தேவன் அநீதி உள்ளவராயிருப்பார். 75. என் நண்பர் ஜாக் மூர் "இந்த தேசம் தேவனுடைய தண்டனையினின்று தப்புமானால், தேவன் சோதோம் கொமோராவை எழுப்பி, அதை நெருப்பினால் அழித்ததற்காக அதனிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டவராயிருப்பார்'' என்று ஒருமுறை கூறினார். 76. இன்று ஆவிக்குரிய பிரகாரமாக அவர்கள் அதையே செய்து வருகின்றனர் என்று நாமறிவோம். இயேசு கிறிஸ்துவை சரீரப்பிரகாரமாய் அக்காலத்தில் அறைந்த அதே நோக்கத்தை இவர்கள் கொண்டவர்களாய், அதே வழிமுறை களைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் பொறாமையினால் இவைகளைச் செய்கின்றனர். இவர்கள் ஆவிக்குரிய பிரகாரம் குருடராயிருந்து, எதையும் காணமறுக்கின்றனர். இவர்கள் எதற்கும் செவி சாய்க்க மறுக்கின்றனர். 77. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது, “நீங்கள் கண்களிருந்தும் காணாமலும், காதுகளிருந்தும் கேளாமலும் இருக்கிறீர்கள் என்று ஏசாயா உங்களைக் குறித்து நன்றாய் சொன்னான்,'' என்றார். பாருங்கள்-? 78. அதே காரணத்திற்காகவும், நோக்கத்திற்காகவும் இவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுபடியும் சிலுவையில் அறைகிறார்கள் (அதற்கு சற்று பின்பு நாம் வருவோம்). 79. அதற்கு எதிராக அவர்களால் ஒரு காரியத்தையுமே கண்டு பிடிக்க முடியவில்லை. அதை எதிர்க்க கூட அவர்களுக்கு தைரியம் இல்லாதிருந்தது. மேலும் அந்த நிச்சயமான அத்தாட்சியானது அங்கே இருக்கிறதென்று அவர்கள் அறிந்திருந்தனர். வேதாகமம் அவ்வாறு கூறுகிறதென்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே அவர்களால் செய்ய முடிந்த ஒரே ஒரு காரியம் அதை தூஷிப்பது மாத்திரம் தான். அது உண்மை... அதே காரணத்தினால். 80. இப்பொழுது இதை அடிப்படையாகக் கொண்டு, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த குற்றத்தை இந்த சந்ததி புரிந்துள்ளது என்று நான் சவால் விடுகிறேன். அசுத்தமுள்ள, அக்கிரமமான, சுய நலமுள்ள ஸ்தாபன கைகளினால் தம்மை ஜனங்களுக்கு வெளிப்படுத்த விரும்பின ஜீவாதிபதியை அவர்கள் கொலை செய்தார்கள். "அதே நபரையா-?'' என்று நீங்கள் கேட்கலாம். 81. ''ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி'' தம்மை வெளிப்படுத்தினார். வார்த்தை மாம்சமாகி வெளிப்பட்ட போது, அவர்கள் அந்த மாம்சத்தின் மேல் குற்றஞ் சுமத்தி அதைக் கொன்று போட்டார்கள் - ஏனெனில் வார்த்தை வெளிப்பட்ட காரணத்தால், ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்'' என்று எபிரெயர்-13:8 உரைக்கிறது. அதே வார்த்தை தான். பாருங்கள்-? அதே காரணத்தால் வார்த்தையை சிலுவையில் அறைய அவர்கள் முயல்கின்றனர். 82. இன்றைக்கு நான் பேச விரும்பும் பொருள்: நான்கு வார்த்தைகள். அதை சற்று விளக்கமாகக் கூறுகிறேன். ''அங்கே,'' அங்கே, உலகிலேயே மிகவும் பரிசுத்த பட்டினமாகிய எருசலேமில்; உலகிலேயே மிகவும் பக்தி வாய்ந்த பட்டினத்தில்; ''அங்கே,'' அவர்கள், உலகிலேயே மிகவும் பக்தியுள்ள ஜனங்கள், மதசம்பந்தமான பஸ்கா பண்டிகையின் போது. ''அங்கே,'' அது மிகவும் பக்தி வாய்ந்த ஸ்தலம், மிகவும் புனிதமான பட்டினம். எல்லா ஸ்தாபனங்களைக் காட்டிலும் மிகப்பெரியது. அவைகள் அனைத்திற்கும் இது தலைமையாய் இருந்தது. அவர்கள், உலகிலேயே மிகவும் பக்தி வாய்ந்தவர்கள், உலகின் எல்லா பாகங்களிலும் இருந்து அங்கு குழுமி இருந்தவர்கள். அவர்கள் சிலுவையில் அறைந்தனர், இருப்பதிலேயே மிகவும் வெட்கக்கேடான ஒரு மரணம், கொல்லப்படுதல், ஒரு மனிதன் கொல்லப்படுகின்ற ஒரு காரியத்தில் அவமானகரமான ஒன்று; நிர்வாணமாக்கப்படுதல், அவர் மேலிருந்த வஸ்திரங்களை அகற்றிப் போட்டனர். அவர் நிந்தையை சகித்தார். அவரைச் சுற்றி ஒரு கந்தை மாத்திரம் சுற்றப்பட்டிருந்தது; ஆனால் அவர்கள் அவருடைய வஸ்திரங்களை அவரிடமிருந்து களைந்து அகற்றிப் போட்டனர். மிகவும் நிந்தையான மரணம்.... 83. 'அங்கே,'' (மிகவும் பக்தி வாய்ந்த அந்த பட்டினத்தில்) ''அவர்கள்,'' (மிகவும் பக்தி வாய்ந்த ஜனங்கள்) ''அவரை,'' (மிகவும் விலையேறப் பெற்ற நபரை) ''சிலுவையில் அறைந்தார்கள்'' (மிகவும் நிந்தையான மரணம்) அந்த சந்ததியை குற்றப்படுத்த இது போதாதா என்ன-? 84. அங்கே, மிகவும் பக்தி வாய்ந்த ஸ்தாபனம், எல்லா சபைகளிலும் மிகப் பெரியது; ஓரிடத்தில் கூடியுள்ளது. அவர்கள், எல்லா ஜாதிகளைக் காட்டிலும் மிகவும் பக்தி வாய்ந்தவர்கள். தேவனை ஆராதிப்பதாக கருதப்பட்ட ஜனங்கள். அவர்கள் மிகவும் பரிசுத்தமான பண்டிகையாகிய பஸ்கா பண்டிகையின் போது ஒன்று கூடி இருந்தனர். அவர்கள் அடிமைத் தனத்தினின்று விடுதலை அடைந்ததை அந்த பண்டிகை குறிக்கிறது. ''அங்கே,'' அந்த சமயத்தில் அவர்கள் மிகவும் பக்தி வாய்ந்தவர்கள், மிகவும் முக்கியமான மதசம்பந்தமான பண்டிகையின் போது, மிகவும் பரிசுத்தமான அந்த ஸ்தலத்தில், ஜீவாதிபதியை இருப்பதிலேயே மிகவும் அவமானமான வெட்ககரமான செயலுக்கு உட்படுத்தினர். அவரை நிர்வாணமாக்கி மரத்தில் தூக்கி கொலை செய்தனர். ''ஏனெனில் மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்,'' என்று அவர்கள் பின்பற்றின நியாயப்பிரமாணம் கூறினது. அவர் நமக்காக சாபம் ஆனார். பரலோகத்தின் தேவனாகிய அவரை அவர்கள் நிர்வாணமாக்கி, அடித்து, பரியாசம் செய்து, அவருடைய ஆடைகளை களைந்து, அவரை சிலுவையில் ஆணியடித்தனர். அவரைத் தான், ரோம், மரண தண்டனைக்கு உட்படுத்தி, ''அங்கே, அவர்கள் அவரை சிலுவையிலறைந்தனர்.'' 85. இன்றைய மிகவும் அவமானமான மரணம் சுட்டுக் கொல்லப்படுதல் அல்ல. இன்றைய மிகவும் அவமானமான மரணம் கார் விபத்தில் மரணமடைவதோ, தண்ணீரில் மூழ்கி மரிப்பதோ, தீப்பற்றி எரிந்து சாவதோ அல்ல. இன்றைய மிகவும் அவமானமான மரணம் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுதலே, முழுஉலகமே அப்போது உன்னை குற்றவாளி என்று அழைக்கும். 86. ஆகவே முழு உலகமே தங்கள் கரங்களை இந்த மனிதனின் மீது இட்டு, அவர் குற்றமற்றவராக இருந்தபோது அவரை குற்றவாளி என்று அழைத்தது. அவர் விரோதிகளால் கொல்லப்பட்டார், நண்பர்களால் அல்ல. விரோதிகளால், தம்முடைய நண்பர்கள் அல்ல, தம்முடைய சட்டங்களின்படி அல்ல, ஆனால் விரோதியின் மரண தண்டனையான சிலுவையில் அறைப்படுதல் என்பதின் கீழாக அவர் மரித்தார். இது வரை வாழ்ந்ததில், அல்லது இனிமேலும் வாழப் போவதில், மிகவும் விலையேறப் பெற்ற நபராகிய ஜீவாதிபதி - இயேசு கிறிஸ்து. அவரை, மிகவும் விலையேறப் பெற்ற நபரை-! இப்பொழுது இந்த பொருளிற்கு அடித்தளமாக இன்றைக்கு நாம் பேசிக் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். 87. எருசலேமைப் போன்ற ஒரு ஸ்தலத்தில், 2500 ஆண்டுகளுக்கு மேலாக, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக... ஒருக்கால் நான் கூடுதலாக சொல்லிருக்கக் கூடும். அது 800 அல்லது 900 ஆண்டு காலம் தான் இருக்கும். சாலொமோன் ஆலயத்தை கட்டினது முதற்கொண்டு அது எவ்வளவு ஆண்டுகள் என்று சரியாக எனக்குத் தெரியவில்லை. சுமார் 800 ஆண்டுகள் இருக்கலாம். 88. அவர்கள் வரப்போகின்ற மேசியாவை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். பஸ்காவை ஆசரிக்க அவர்கள் அங்கு கூடினர். அதை இப்பொழுது யோசித்துப் பாருங்கள். பரிசேயர்களின் தலைவரும் சதுசேயர்களின் தலைவரும், இன்னும் மற்றெல்லாரும் அங்கு ஒரு பெரிய கூட்டமாக கூடி தேவனை ஆராதித்தனர். அது மிகவும் பரிசுத்தமான ஸ்தலம் - எருசலேம். தேவனுடைய ஆலயம் அங்கிருந்தது. கர்த்தருடைய ஜனங்கள் கர்த்தரைத் தாமே, அவர்கள் பிடித்து மரண தண்டனை விதித்து, அவரை சிலுவையில் அறைந்தனர். அப்படிப்பட்ட ஒரு செயல். 89. இப்பொழுது, அந்த நான்கு வார்த்தைகள்; ''அங்கே அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள்.'' பாருங்கள், அது 4 வார்த்தைகள் மாத்திரமே. இப்பொழுது, நீங்கள் இன்னுமாக வேதாகமத்தை காண்பித்துக் கொண்டு இருக்கிறீர்கள், பாருங்கள். அது 4 வார்த்தைகள் மாத்திரமே, ஆனால் வேதாகமம் தம்முடைய சத்தியங்களை சுருக்கிக் கூறுகிறது. 90. ஆனால் நான் ஒன்றை விவரிக்க வேண்டுமானால், அதை சுற்றி வளைத்து விவரிக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் வேதம் ஒன்றையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. அது முழுவதும் சத்தியமே. ஆகவே எதையுமே விளக்க வேண்டிய அவசியம் வேதாகமத்திற்கு இல்லை. எனவே எதையும் விவரிக்க வேதத்திற்கு அவசியமில்லை. ஏனெனில் எல்லாமே அதில் சத்தியமாய் உள்ளது. 91. இந்த நான்கு வார்த்தைகளும் சத்தியத்தின் மகத்தான சங்கிலியாக உள்ளது. அதை நான் விவரிக்க முயல்கிறேன். அதை விவரிக்க வேண்டுமானால், அது ஒரு முழு நூலகமாகவே ஆகிவிடும். இந்த நான்கு வார்த்தைகளை வேறு எவ்விதமாகவும் விவரிக்க எனக்குத் தெரியாது. ஆனால் இதை எழுதக் காரண மாயிருந்த அவருடைய உதவியைக் கொண்டு ஜனங்கள் புரிந்து கொள்ளத் தக்கதாக இந்த நான்கு வார்த்தைகளை விவரிக்க முயல்கிறேன். 92. நமக்கு முன்னால் இப்பொழுது என்ன உள்ளது-? முதலாம் சிலுவை மரணம். மிகவும் புனிதமான ஸ்தலத்தில், மிகுந்த பக்தியுள்ளவர்களின் மூலம், மிகுந்த விலையேறப் பெற்ற நபருக்கு மிகுந்த அவமானமுள்ள ஒரு மரணம் ஏற்பட்டது. ஓ, என்ன-? ஒரு முரண்பாடான காரியம். என்னே, , என்னே-? அது மிகவும் அவமானகரமான ஒரு செயல். 93. இப்பொழுது முதலாம் வார்த்தையை எடுத்துக் கொள்வோம். ''அங்கே.'' நாம் குற்றச்சாட்டைக் கொண்டு வரும் முன்பு இதைக் குறித்து சில நிமிடங்கள் பேசுவோம். இதை நாம் ஆராய்ந்து, அவர்கள் என்ன செய்தனர் என்று உங்களுக்குக் காண்பித்தால், என் குற்றச்சாட்டு சரியா இல்லையாவென்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ''அங்கே," எருசலேம், மிகவும் புனிதமான ஸ்தலம் ஏனெனில் தேவாலயம் அங்கே இருந்தது. மிகவும் பரிசுத்தமுள்ள ஒரே ஸ்தலம். ஏனெனில் அங்கு தேவாலயம் இருந்தது. உலகெங்கிலுமுள்ள யூதர்கள் இந்த ஸ்தலத்தில் ஒன்று கூடினர். ஆராதனைக்காக சந்திக்கும் ஒரு ஸ்தலமாக இது அமைந்திருந்தது. ஆராதனைக்கென நியமிக்கப்பட்ட மிக மகத்தான ஸ்தலமாக எருசலேம் இருந்தது. தேவாலயம் அங்கு கட்டப்பட்டு இருந்தது. ''எல்லோரும் எருசலேமில் ஆராதிக்க வேண்டும்'' என்று எழுதப்பட்டு இருந்தது. சரி, அது ஆராதனையின் மைய ஸ்தலமாக இருந்தது. 94. இன்றைக்கு இவ்வாறு கூறப்படுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்... ஒருவர், ''ஓ, நாங்கள் இந்த மகத்தான கன்வென்ஷன் கூட்டத்தில் பங்கு கொள்ள வந்திருக்கிறோம்'' என்கிறார். ஸ்தாபனங்கள் இக்கூட்டங்களை ஒழுங்கு செய்கின்றன. வாடிகன் நகரில் போப்பாண்டவர்களுக்கு பட்டமளிப்பு ஆராதனை நடக்கிறது. எல்லோரும், "நாங்கள் மெதோடிஸ்டுகளின் கூட்டங் களுக்குச் செல்ல வேண்டும், பாப்டிஸ்டுகளின் கன்வென்ஷன்களுக்குச் செல்ல வேண்டும்'' என்கின்றனர். ரோமாபுரிதான், கிறிஸ்தவ மார்க்கம் என்று அவர்கள் அழைக்கும் மார்க்கத்தின் மகத்தான மைய ஸ்தலமாகத் திகழ்கிறது. 95. கடந்த உலக மகா யுத்தத்தின்போது, ரோமாபுரி கைப்பற்றப்பட்ட போது, ஜெர்மன் இராணுவத்தினர் (உங்களில் அநேகருக்கு அது தெரியும்) ஜெர்மன் இராணுவத்தினர் வாடிகன் பட்டினத்தை அடைந்து, அமெரிக்கா இராணுவம் முன்னேறுவதைத் தடுக்க அவர்களை நோக்கி சுட்டனர். அந்த யுத்தத்தில் பங்கு கொண்ட சகோ.ஃபங்க், சகோ.ராபர்ஸன், சகோ.பீலர் போன்ற உங்களுக்கும், இன்னும் அநேக சகோதரருக்கும் அதைக் குறித்து தெரியும். உங்களுக்கு என்ன தெரியும்-? அந்த வாடிகன் பட்டினத்தை நோக்கி சுடக் கூடாது என்று நாம் அமெரிக்கர்களுக்கு ஆணை விடுத்தோம். நீங்கள் அங்கு நின்று கொண்டு ஜெர்மானியருக்கு இலக்காக ஆனீர்கள். ஆனால் அதே சமயத்தில் இங்கிலாந்திலுள்ள 'வெஸ்ட்மின்ஸ்டர் ஆபி' (Westminster Abbey)யை நோக்கி நீங்கள் சுட அனுமதியளிக்கப்பட்டது. அங்கு தான் பிராடெஸ்டெ-ண்டுகள் ஒன்று கூடுகின்றனர். அதை நோக்கி சுட்டால் தவறில்லை. ஆனால் வாடிகனை நோக்கி நீங்கள் சுடக்கூடாது. ஏனெனில் ஜனாதிபதி ரூஸ்வெல்ட்... அன்றிரவு வானொலியில் "நெருப்பினருகில் பேச்சு,'' (Fireside Talk) என்னும் நிகழ்ச்சி நிரலில் அவர் பேசினதை நான் கேட்டேன். அவர், 'ரோமாபுரி விழுந்தால் அது பெருத்த அவமானம். ஏனெனில் ரோமாபுரி கிறிஸ்தவ மார்க்கத்திற்கு தலையாக விளங்குகிறது,'' என்றார். ஒரு பிராடெஸ்டெண்டு அவ்விதம் பேசுகிறார் என்று உங்களால் நம்பமுடிகிறதா-? 96. எனவே கிறிஸ்தவ மார்க்கத்தின் மகத்தான மையஸ்தலம் நல்லது, நாம்- நாம் அதே விதமாக எருசலேமையும் பொருத்திப் பார்க்கப் போகிறோம். நீங்கள் விரும்பினால், அதே நிலையில் நாம் எருசலேமைக் கணக்கிடப் போகிறோம். சனகரீப், பரிசேயர், சதுசேயர் இவர்கள் அனைவருக்கும் தலையாக எருசலேம் விளங்கினது. இவர்கள் அனைவரும் எருசலேமுக்குச் சென்றனர். அது தான் அவர்கள் தலைமை ஸ்தலம். 97. அது போன்று ஸ்தாபன முறைமைகளில், ரோமன் கத்தோலிக்க சபை அவர்கள் எல்லோருக்கும் தாயாக விளங்குகிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். உண்மையில் அது அந்நிலையில் தான் உள்ளது. இது அனைத்தும் ஆதி பெந்தெகொஸ்தேவில் தொடங்கினது. அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட போது அப்படி ஆகிவிட்டார்கள். பிராடெஸ்டெண்டு- களாகிய நாம் அந்த சபைக்கு சிறிய தங்கைகளாக இருக்கிறோம். ஆகவே இப்பொழுது அது வாடிகனில் உள்ளது என்று, நாம் இன்று பார்ப்போம். 98. அல்லது, அந்நாளிலே அங்கே எருசலேமில் என்ன இருந்தது. ஆராதிப்பதற்கென அன்று எல்லா மனிதர்களுமே எருசலேமுக்கு வர வேண்டும். இயேசுவின் காலத்தில் ஏன் அவ்விதம் செய்தனர்-? தேவனை ஆராதிப்பதற்கென எல்லா மனிதர்களும் எருசலேமுக்கு வரவேண்டுமென்று ஏன் கூறப்பட்டது-? ஏனெனில் தேவன் மனிதனோடு ஐக்கியம் கொள்ளும், ஒரே ஒரு இடம் மாத்திரமே உண்டு, அது பலியின் இரத்தத்தின் கீழாக மாத்திரமே. அதன் காரணமாகத்தான் அவர்கள் எருசலேமுக்கு வரவேண்டியதாயிருந்தது. 99. இரத்தத்தின் கீழ் தவிர தேவன் மனிதனை வேறெங்கும் சந்திக்க மாட்டார். நீங்கள் இரத்தத்தைப் புறக்கணித்தால் நீங்கள் தேவனை சந்திக்கும் ஸ்தலம் எடுபடுகிறது. தேவன் தமது முதலாம் தீர்மானத்தை ஏதேன் தோட்டத்தில் செய்தார். அதாவது மனிதன் பலியினால் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் மாத்திரமே அவரை ஆராதிக்க வேண்டுமென்று. அந்த ஒரு இடத்தில் மாத்திரமே தேவன் அப்பொழுது மனிதனைச் சந்தித்தார். அந்த ஒரு இடத்தில் மாத்திரமே அவர் எப்பொழுதும் மனிதனைச் சந்தித்து வருகிறார். 100. இன்றைக்கும் அந்த ஒரே இடத்தில் தான் அவர் மனிதனைச் சந்திக்கிறார்- அதாவது, பலியினால் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் பாருங்கள்-? நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், ரோமன் கத்தோலிக்கர் யாராய் இருந்தாலும் சரி; உங்கள் வேறுபாடுகளை நீங்கள் மறந்து விட்டு சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் வருவீர்களானால், நம்மிருவரையும் தேவன் அங்கு சந்திப்பார். அங்கு தான் நாமெல்லாரும் ஒரே அடிப்படையில் நாம் சந்தித்து ஐக்கியங் கொள்ள முடியும், இல்லையென்றால் நீ மெதோடிஸ்டாயிருப்பதனால் அவர் உன்னை சந்திக்கமாட்டார். நீ பெந்தெகொஸ்தேயினனாக இருப்பதால் அவர் உன்னைச் சந்திக்கமாட்டார். ஒரு நிபந்தனையின் பேரில் மாத்திரமே அவர் உன்னைச் சந்திப்பார். அது தான் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ், உன்னுடைய பாவங்கள் எல்லாம் அறிக்கையிடப்பட்டு அவருடைய பிரசன்னத்தில் புறம்பாக்கப்படுகிறது, இரத்தத்தினால். அவருடைய இரத்தம் எப்பொழுதும் அவர் முன்னால் உள்ளது. எனவே சிந்தப்பட்ட அந்த இரத்தத்தின் மூலமாய் மாத்திரமே அவர் உன்னைக் காணமுடியும். உன் பாவங்களை நீ அறிக்கை இடும் போது நீ உறைந்த மழையைப்போல் வெண்மையாகிறாய் (பாருங்கள்-?). இல்லையென்றால், நீ அங்கிருக்க முடியாது, நீ ஐக்கியங்கொள்ள முடியாது. 101. அதனால் தான் சபைகளில் காரியங்கள் நிகழ்வதை உங்களால் காண முடிகிறதில்லை. அவர்கள் இரத்தத்தை விசுவாசிப்பதாக அறிக்கை இடுகின்றனர். ஆனால் அந்த வார்த்தையாகிய இரத்தத்திடம் செல்வதற்கான வழிமுறையை அவர்கள் புறக்கணிக்கின்றனர். பாருங்கள்-? ஒரே ஒரு வழியில் தான் தேவன் அந்த வார்த்தையைக் கனப்படுத்துவார். ''நான் ஒரு ரோமன் கத்தோலிக்கன். நான் இது செய்யப்படத்தான் வேண்டும் என்று கேட்கிறேன்,'' என்று கூறுவாயானால் நீ வார்த்தையை கனப்படுத்துவதில்லை. நீ அப்படி செய்யக்கூடாது. மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தேயினன் யாராய் இருந்தாலும் அப்படி செய்யக் கூடாது. 102. அதை செய்ய வேண்டிய ஒரே வழி என்னவெனில், தேவனுடைய இரக்கங்களின் கீழ், அவருடைய கிருபையின் மூலமாக, சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக வந்து, 'ஆண்டவரே, உமது வாக்குத் தத்தத்தை உரிமை கோருகின்றேன்'' என்று சொல்வதே. பாருங்கள்-? நீங்கள் உண்மையாகவே அந்த இரத்தத்தின் கீழிருந்தால், தேவன் அந்த வார்த்தைக்கு கடமைப்பட்டவராயிருக்கிறார். ஆனால் முதலாவதாக நீ இரத்தத்தின் கீழாக இருக்க வேண்டும். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா-? (சபையோர் 'ஆமென்,'' என்கின்றனர்-ஆசி). 103. அற்புதங்களை அவர்கள் விசுவாசிக்காததில் வியப்பொன்றுமில்லை. இயற்கைக்கு மேம்பட்டவைகளில் நீங்கள் விசுவாசம் கொள்ளாமலிருப்பதில் வியப்பொன்றுமில்லை. அதனால் தான் அவர்கள் அதற்கு விரோதமாய் பேசுகின்றார்கள். எந்த காரணத்தினால் அவர்கள் அன்று அதற்கு விரோதமாய் பேசினார்களோ, அதே காரணத்தினால் தான் இன்றும் அவர்கள் அதற்கு விரோதமாய் பேசுகின்றார்கள். அவர்கள் இருப்பதிலேயே அதிகமாக குற்றவாளியாக உள்ளனர். ஏனெனில் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் மாத்திரமே 104. யாராவது தைரியமாக, யாராகிலும் ஒரு சகோதரன் தாழ்மையாக தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளத் துணிந்து, தன் பாவங்களை அறிக்கையிட்டு, இந்த கோட்பாடுகள் அனைத்தும் மறந்தவனாய், இரத்தத்தின் கீழ் நின்று அதை விசுவாசிப்பானானால், அவனை மூடபக்தி வைராக்கியம் உள்ளவன் என்று அழைக்கின்றனர். அவனை வினோதமானவன் (Odd ball) என்கின்றனர். (அப்படிப்பட்ட வார்த்தையை (Odd ball) பிரசங்க பீடத்திலிருந்து உபயோகிக்க கூடாது. ஆனாலும் நீங்கள் புரிந்து கொள்வதற்காக அதை கூறுகின்றேன்) 105. நாமெல்லோரும் வினோதமானவர்கள் தானே-! அவிசுவாசிக்கு விசுவாசி வினோதமானவனாகத் தென்படுகிறான். அவ்வாறே விசுவாசிக்கு ஒரு அவிசுவாசி வினோதமானவனாகத் தென்படுகிறான். அப்படியானால் வினோத-மானவன் யார்-? பாருங்கள்-? வணிகனுக்கு விவசாயி வினோதமானவன். அவ்வாறே விவசாயிக்கு வணிகன் வினோதமானவன். பாருங்கள்-? அப்படி ஆனால் அவன் யார்-? 106. உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன். இரட்சிப்பு என்பது தனிப்பட்ட நபருக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள ஒரு விவகாரம். தனிப்பட்ட நபர் ஒருவர் மிகுந்த பயத்தோடும் நடுக்கத்தோடும் தன் சொந்த இரட்சிப்பைத் தேடுகிறார். கிறிஸ்துவின் போதகர் என்னும் முறையில், வேதத்தை போதிப்பவன் என்னும் முறையில், அதற்கு தேவனுடைய வார்த்தை என்னும் அடிப்படையைத் தவிர வேறொன்றையும் நான் அறியேன். வேறெதையும் என்னால் அடிப்படையாக நிர்ணயிக்க முடியாது. 107. இப்பொழுது இரத்தத்தின் கீழ் மாத்திரமே தேவன் ஆராதிப்பவரைச் சந்திக் கிறார் என்று பார்க்கிறோம். எனவே அவர்கள் எருசலேமில் கூடினார்கள். 108. கிறிஸ்து தான் தேவனால் அளிக்கப்பட்ட பலி ஆட்டுக்குட்டி. இன்றைக்கு தேவன் மனிதனைச் சந்திக்க ஒரே ஒரு இடம் மாத்திரமே உண்டு. அது தான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ். வேறெந்த இடமும் நிராகரிக்கப்படும். தேவன் அதைக் கேட்கவே மாட்டார். நீங்கள் எவ்வளவு தான் உணர்ச்சி வசப்பட்டு, தத்துவங்களைக் கொண்டவர்களாய், குலுக்கி, குதித்து, இரத்தமும், அக்கினியும், புகையும் வரப்பண்ணினாலும், உங்களுடைய வாழ்க்கை தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போகாமலிருந்தால்; தேவன் அந்த ஜீவியத்தோடு முழுவதுமாக அடையாளங்கண்டு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் எவ்வளவு பிரயாசப்பட்டாலும் பிரயோஜனமில்லை. ஏனெனில் நீங்கள் புறம்பே இருக்கிறீர்கள். அந்த இரத்தத்தின் பாதுகாப்பின் கீழ் நீங்கள் வராவிடில், தேவன் உங்களைச் சந்திக்கவே மாட்டார். அது உண்மை. 109. வேதத்தில் ஒரு எருசலேம் குறிப்பிடப்பட்டுள்ளது (சபைக்கு). அது பரலோகத்திலுள்ளது - பரம எருசலேம் அங்கு தேவன் தேவனாயிருக்கிறார். இன்றைக்கு ஒரு கோட்பாட்டின் கீழ் ஒரு எருசலேமை உருவாக்கிக் கொள்ள முயல்கிறோம். மெதோடிஸ்டுகள் தங்கள் தலைமை ஸ்தலத்தை எருசலேம் ஆக்கிக் கொள்ளப் பார்க்கின்றனர். கத்தோலிக்கர் ரோமாபுரியை எருசலேமாக்க நினைக்கின்றனர். வெவ்வேறு ஸ்தாபனங்களுக்கு வெவ்வேறு தலைமை ஸ்தலங்கள் உள்ளன. அவைகளை நாம் எருசலேமாக்க விரும்புகிறோம். ஆனால் வேதமோ பரம-எருசலேம் ஒன்று உண்டென்றும், அது விசுவாசிகள் எல்லாருக்கும் தாய் என்றும் கூறுகிறது. 110. கிறிஸ்து தேவனால் அளிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவர். எருசலேம் காட்சியிலிருந்து மறைந்து விடுகிறது என்று காண்பிப்பது இப்பொழுது எவ்வளவு பொருத்தமாயுள்ளது-! எப்பொழுது-? அந்த மணி நேரம் வரைக்கும் அது முக்கியம் வாய்ந்ததாயிருந்தது. அந்நாள் வரைக்கும் ஒரு ஆட்டுக் குட்டியின் இரத்தம் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, நிலைமை மாறிவிடுகிறது. பழைய முறை அகற்றப்பட்டு, புதிய முறை வருகிறது. ஆட்டுக்குட்டியானவர் அங்கு பலியாக செலுத்தப் பட்டார். அந்த ஆட்டுக்குட்டியானவர், பலி செலுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் அங்கிருந்தார். அவர்கள் செய்தாக வேண்டியிருந்த அதே காரியத்தை அவர்கள் செய்து கொண்டு, அவருக்கு தண்டனை அளித்துக் கொண்டிருந்தனர். அது உண்மை. 111. இந்த அருமையான பரலோக வெளிச்சத்தை இந்த கடைசி நாளில் நாம் காண கிருபையளித்ததற்காக தேவன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக-! ஏனெனில் ஸ்தாபனங்கள் இன்று அதையே செய்து வருகின்றன. ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தாபன மார்க்கமானது ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டதென்றும், கிறிஸ்துவின் வார்த்தையை அது பலி செலுத்திக் கொண்டு இருக்கிறதென்று நிரூபிக்கப்படுகின்ற அந்த மணி நேரம் வரை, அப்பொழுது அந்நேரத்திலிருந்து வார்த்தையானது வருகின்றது, அந்த வார்த்தை மாத்திரமே. பழைய பஸ்கா ஆட்டுக்குட்டி அகற்றப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட அந்த நாளிலே கிறிஸ்து நமது ஆட்டுக்குட்டியானார். அது போன்று ஸ்தாபனங்கள் தேவன் உடைய வார்த்தையை சிலுவையில் அறைந்து, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட அந்த நாள் முதற்கொண்டு வார்த்தையானது முழு செயல் தோற்றத்தில் வந்தது அந்த நாளிலிருந்து தான். அது அண்மையில் நிகழ்ந்தது. 112. கவனியுங்கள், இரண்டாவதாக. முதலாவதாக அங்கே, எருசலேமில்; இரண்டாவதாக, அவர்கள். அவர்கள்' என்றால் யார்-? யூதர்கள், அவரை ஆராதித்தவர்கள் தொழுதவர்கள். அதை யோசித்துப் பாருங்கள். அந்த தொழுகிறவர்கள், தாங்கள் யாரை தொழுகின்றோம் என்று உரிமை பாராட்டின அந்த அதே தேவனை, அவர்கள் கொலை செய்து கொண்டிருந்தனர். புத்தி கூர்மையுள்ள ஆசாரியர்கள், பயிற்சி பெற்றவர்கள் டாக்டர் பட்டம் பெற்றவர்கள், தேர்வு பெற்றவர்கள் இவ்விதம் செய்தனர் என்று உங்களால் நம்பமுடிகிறதா-? அவர்கள் ஆசாரியராக வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும். அவர்கள் லேவியராக இருத்தல் அவசியம். அவர்கள் தகப்பனார்கள் ஆசாரியர்களாயிருந்தனர்; அவர்கள் முப்பாட்டனார்களும் கூட ஆசாரியர்களாயிருந்தனர். அவர்களுடைய பெரிய பெரிய, பெரிய, பெரிய, பெரிய - பாட்டனாரும் ஆசாரியர்களாயிருந்தார்கள்- அவர்கள் பிரதிஷ்டையுள்ள ஜீவியம் செய்ய வேண்டியவராய் இருந்தனர். அவர்களுக்கு விரோதமாக ஒரு சிறு குற்றம் காணப்பட்டாலும் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள். அவர்களுக்கு எந்தவித இரக்கமும் காண்பிக்கப்பட மாட்டாது. அவர்கள் பரிசுத்தரா-? நிச்சயமாக, ஆனால் தாங்களே உருவாக்கிக் கொண்ட சுயபரிசுத்தம். தங்கள் சபைக்குக் காண்பிக்க அவர்கள் வெளிப்புறம் அவ்விதம் நடந்து கொண்டனர். ஆனால் அவர்கள் உள்ளிலோ-! "நீங்கள் மரித்தவனின் எலும்புகள் நிறைந்தவர்களாயிருக்கிறீர்கள்'' என்று இயேசு கூறினார். 113. சரியாக அங்கே என்னால் ஒரு குற்றச்சாட்டைக் கொண்டு வரமுடியும்-! இது சத்தியமென்றும், தேவனுடைய வார்த்தை சத்தியமென்றும் அறிந்து இருந்தும் ஒரு மனிதன் அதன் பேரில் சமரசம் செய்து தன் ஸ்தாபனத்திற்காக அதை விசுவாசியாதவன் போல் காண்பித்தால், தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவனை குற்றஞ்சாட்ட எனக்கு உரிமையுண்டு. 114. கவனியுங்கள்; அவர்கள், அவரை ஆராதிப்பவர்கள், அவருடைய வாக்குத் தத்தம் நிறைவேறக் காத்துக் கொண்டிருந்த மனிதர்கள். ஆண்டு தோறும், காலங்கள் தோறும். இதை எதிர் நோக்கியிருந்து ஒன்றும் செய்யாமல் வேத பள்ளிகளில் காலம் கழித்த மனிதர்கள் - வேத பள்ளிகளின் போதனைகளுக்கு ஏற்ப அவர்கள் வார்த்தையை கூறுபோட்டனர், ஆகையால் அதனுடைய சத்தியத்தை அவர்கள் காணத் தவறி இழந்து போயினர். அவர்கள், அந்த ஆசாரியர்கள், அக்காலத்து போதகர்கள் அங்கே, அவர்கள் தலைமை ஸ்தலத்தில்; அவர்கள் அக்காலத்து போதகர்கள் அந்த தேவனை; ஆட்டுக் குட்டியை கொன்றார்கள். அவர்கள் யாரை வழிபடுவதாக உரிமை பாராட்டி-னார்களோ அவரையே அவர்கள் கொன்று போட்டார்கள். 115. இன்றைக்கு போதகர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவை நான் குற்றஞ் சாட்டுகிறேன். அவர்கள் நேசித்து, ஆராதித்து வருவதாக உரிமை பாராட்டும் அதே தேவனை, அவர்களுடைய கோட்பாடுகள் மூலமாகவும், ஸ்தாபனங்களின் காரணமாகவும், மனிதர்களுக்கு முன்பாக அவர்கள் சிலுவையில் அறைகின்றனர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால், அவர்களுடைய போதகங்களின் நிமித்தம், இந்த போதகர்களைக் குற்றஞ் சாட்டுகிறேன். அற்புதங்களின் காலம் கடந்து விட்டதென்றும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் போதாது என்றும் அது தவறென்றும் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட காரணத்தால், அவர்கள் குற்றவாளிகள் என்று அவர்கள் பேரில் குற்றஞ்சாட்டுகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுபடியுமாக 2-ம் முறை அவர்கள் சிலுவையில் அறைந்ததால், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவர்கள் கைகளின் மேல் உள்ளது. அவர்கள் கிறிஸ்துவை பொது ஜனங்களுக்காக கிறிஸ்துவை சிலுவையிலறைகின்றனர், அந்த ஜனங்களுக்கு அவர்கள் எதைக் கொடுக்க வேண்டியதாயிருந்ததோ, அதை அந்த ஜனங்களிடமிருந்து எடுத்துப்போட்டனர், தங்களுக்கு செல்வாக்கை பெற்றுக் கொள்ள எண்ணி, அதினுடைய இடத்தில் வேறெதோ ஒரு பதிலீடான ஒன்றை, ஸ்தாபனக் கோட்பாடுகளை அவர்கள் நுழைத்துவிட்டனர். 116. அங்கே அவர்கள்: ''அவர்கள்,'' அவரைக் குறித்து அதிகம் அறிந்திருக்க வேண்டியவர்கள். யாராகிலும் அவரைக்குறித்து அதிகம் அறிந்திருக்கவேண்டும் ஆனால், அதை அறிந்தவர்கள் போதகர்கள் போன்றோர் தான். அதை யாராவது அதிகம் அறிந்திருக்க வேண்டுமென்றால் அவர்கள் இந்த நாளின் சபை குருமார்கள் தான். ஆனால் பேராயர்களும், தலைமை பேராயர்களும், போதகர்களும், டாக்டர் பட்டம் பெற்றவர்களும் வித்தியாசமான காரியங்களை அறிந்திருக்க வேண்டுமே-! அவர்களால் ஏன் அதை அறிந்து கொள்ள முடிய வில்லை-? ஓ, என்னே ஒரு முரண்பாடு-! முரண்பாடு அல்லாமல் வேறெதை நாம் காண்கிறோம்-? அவர்கள் தேவனை ஆராதிப்பதாக உரிமை பாராட்டிக் கொண்டு, அதே சமயத்தில் ஜீவாதிபதியைக் கொலை செய்கின்றனர். அவர்கள் ''அங்கே அவர்கள் அவரைச் சிலுவையிலறைந்தார்கள்.'' இங்கே அவர்கள் மறுபடியும் அதே செயலைப் புரிகின்றனர். ஏனெனில் அவர் வார்த்தையாய் இருக்கிறார். 117. அது தான்.... அவர் வார்த்தையின் பிரதிபலிப்பாக இருக்கிறார். அப்படித் தான் அவர் இன்று இருக்கிறார் - வார்த்தையின் பிரதிபலிப்பாக. யார் மூலமாவது தம்மை பிரதிபலித்துக் காண்பிக்க அவர் முயன்று வருகிறார். 118. இந்த ஜனங்கள் (போதகர்) சபையோரை தேவனிடமிருந்து அப்புறப்படுத்து கின்றனர். ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்ந்து, அது சபையோரின் மத்தியில் பேசப்பட்டால், அவர்கள் பிரசங்க மேடைமேல் நின்று கொண்டு அதற்கு கண்டனம் தெரிவித்து, ''அது பைத்தியக்காரத்தனம், அதினின்று விலகுங்கள்'' என்கின்றனர், அப்படி செய்வதனால் அவர்கள் 1963-ம் ஆண்டில் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து விட்டனர். அந்நாளில் இருந்த அந்த ஆட்களைப் போலவே இவர்களும் குற்றவாளிகள். இது பயங்கரமான சொற்களாகத் தென்படலாம். ஆனால் அது உண்மை. அதை தான் சரியாக இன்றும் அவர்கள் செய்கின்றனர். 119. தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்குப் புகட்டுவதாக அவர்கள் கூறிக் கொண்டு, ஆனால் அதை அவர்கள் நடுவிலிருந்து அறவே அகற்றி, கிறிஸ்துவை சிலுவையில் அறையும் செயலைப் புரிகின்றனர். சரியாக அதே காரியத்தைப் போன்று தான் அங்கே அவர்கள் செய்து கொண்டிருந்தனர். அது தான் என்பதை நிருபிக்கத்தக்கதாக தம்முடைய சொந்த குமாரனின் மூலமாக தேவன் பிரதிபலிப்பை காண்பித்துக் கொண்டிருந்த அந்த அதே வார்த்தையை, தாங்கள் நேசிப்பதாக உரிமை பாராட்டிக் கொண்டிருந்த அந்த ஒருவரை, வேத வாக்கியங்களின்படியே தம்மைத்தாமே வெளிப்படுத்தின அந்த யேகோவா அவர் என்னவெல்லாம் செய்வாரென்று தேவன் கூறினாரோ, அதையெல்லாம் அவர் அப்படியே செய்து ஜனங்களுக்கு முன்பாக பிரதிபலித்துக் காண்பித்தார். ஆனால் அவர்களோ, தங்கள் சபை குழுக்கள் மற்றும் அதைப் போன்ற ஸ்தாபனங்கள் மேலிருந்த அன்பின் காரணமாக ஜீவாதிபதியைக் குற்றவாளி யாகத் தீர்த்தனர். 120. இந்த குழுவை இன்று நான் குற்றவாளிகளாகத் தீர்த்து, இவர்கள் அதே காரியத்தைச் செய்கின்றனர் என்றும், இவர்கள் குற்றவாளிகளென்றும், தேவனுடைய வார்த்தையைக் கொண்டு தேவனுக்கு முன்பாக இவர்கள் மேல் குற்றஞ் சாட்டுகிறேன். இந்த சந்ததியின் மேல் குற்றஞ்சாட்டப்படுகிறது. எபிரெயர் 13:8-ஐ நினைவில் கொள்ளுங்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். 121. அவர்கள் ஏன் அவரைக் குற்றவாளியாகத் தீர்த்தனர்-? ஏனெனில் அவர்களுடைய கோட்பாடுகளால் அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்களுடைய இருதயங்களின் ஆழங்களில் அவர்கள் உண்மையை அறிந்திருந்தனர். பரிசுத்த யோவான் 3-ம் அதிகாரத்தில் நிக்கொதேமு அதை வெளிப்படையாகக் கூறவில்லையா-? ''ரபீ, பரிசேயர்களாகிய நாங்கள், போதகர்கள், வேதபாரகர்கள், நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்,'' என்றானல்லவா-? பாருங்கள்-? புகழ் பெற்ற அவர்களுடைய மனிதன் மூலம் அவர்கள் அதை பகிரங்கமாக அறிக்கை இட்டனர். ஆயினும் அவர்களுடைய கோட்பாடுகளின் நிமித்தம் அவர்கள் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தனர். 122. இன்றைக்கு அப். 2:38-ஐ படிக்கிறவன் எவனும் நான் படிப்பதைக் காட்டிலும் அதை வித்தியாசமாகப் படிப்பதில்லை. ஆயினும் ஏனெனில், - ஏனெனில், அவர்கள் உடைய பிரமாணங்களால், ஏனெனில் அவர்கள் தங்கள் சட்டைப் பைகளில், பாக்கெட்டுகளில் கொண்டுள்ள தங்களுடைய ஸ்தாபன நுழைவுச் சீட்டுகளால், ஐக்கிய அட்டைகள் என்று தாங்கள் கொண்டிருக்கிற அந்த மிருகத்தின் முத்திரையால்; அதைப்போன்ற காரியங்களைக் கொண்டு அவர்கள் இயேசுகிறிஸ்துவை பொது ஜனங்களுக்கு முன்பாக, மறுபடியும் சிலுவையில் அறைந்து, இதை செய்வதாக வாக்களித்துள்ள அதே தேவனின் பேரில் தேவ தூஷணம் உரைத்து, அவர்களுடைய சந்ததியின் மேல் ஆக்கினையை வருவித்துக் கொள்கின்றனர். 123. அங்கே... அங்கே, அவர்கள் பாவிகளல்ல. அவர்கள், அதாவது அந்த நாளின் சபை, அவர்கள் வார்த்தையாயிருந்த அந்த மனிதனின் பேரில் குற்றங்கண்டு பிடித்தனர். அது சரி தானே-? வார்த்தையாயிருந்த அந்த மனிதன் பேரில் அவர்கள் குற்றம் கண்டு பிடித்தனர். முன்பு செய்யப்பட்டதை அப்படியே அவர்கள் செய்கின்றனர். இக்காலத்திலும், ஒரு மனிதனின் மூலம் கிரியை செய்யும் அந்த வார்த்தையின் பேரில் அவர்கள் குற்றம் கண்டு பிடிக்கின்றனர். அது தான், இந்த பரிசுத்த ஆவியானவர் அந்த நபருக்குள், இவர் மூலமாக கிரியை நடப்பித்தல், அது தேவனுடைய உறுதிப்படுத்துதல். 124. அவர் கிறிஸ்துவென்று அவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள்-? அவர் உடைய கிரியைகள் அவர் யாரென்பதை நிரூபித்தன. அவர், "என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் சொல்லக் கூடும்-? வேதம் கூறியுள்ளவைகளை நான் அந்தப்படியே செய்யாமலிருந்தால்... நான் எங்கு தவறினேன் என்று யாராகிலும் கூறுங்கள் பார்க்கலாம். நான் தான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்பதை நிரூபிக்க எல்லா அடையாளங்களையும் காண்பிக்காமல் இருந்தேனா....'' என்றார். அவர்களோ, 'எங்களுக்கு மோசே இருக்கிறான். நாங்கள் மோசேயை விசுவாசிக்கிறோம்'' என்றனர். 125. அவர் நீங்கள் மோசேயை விசுவாசித்தால் என்னையும் விசுவாசிப்பீர்கள். மோசே என் நாளைக் கண்டான், இந்த நாளில் அவன் வாழவே விரும்பினான். மோசே, அதை முன்னரே கண்டான், தீர்க்கதரிசிகளும் கண்டனர். ஆனால் இதோ நீங்கள் சரியாக அதோடே வாழ்ந்து அதை குற்றப்படுத்துகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை உங்களால் நிதானிக்க முடிகிறதே. ஆனால் காலத்தின் அடையாளத்தை உங்களால் நிதானிக்க முடியவில்லை-யே-!" என்றார். 126. அதோ அது, காலத்தின் அடையாளம் அவரை என்ன என்று கருதினார்கள்-? மூடபக்தி வைராக்கியம் பொருந்திய பைத்தியக்காரன் என்று. ஆம், வார்த்தை ஆகிய அந்த மனிதனில் அவர்கள் குற்றம் கண்டு பிடித்தனர். 127. அவர் தான் அந்த வார்த்தை. பரிசுத்த யோவான் 1-ம் அதிகாரம் அதை நிரூபிக்கிறது. 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவன் இடத்திலிருந்தது... அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவரே ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தையாயிருந்தார். அவர் தமது மூலமாய் தேவனை வெளிப்படுத்தினார். அவரும் வார்த்தையும் ஒன்றான நிலைக்கு வரும் விதத்திலே அவர் தேவனுடைய வார்த்தைக்கு தம்மை முழுவதுமாக ஒப்புவித்தார். இன்றைக்கு சபையும் சரியாக அந்த விதமாகவேத்தான் இருக்க வேண்டும். அதுவும் தேவனுடைய வார்த்தையும் ஒன்றாய் இருக்க வேண்டும். 128. நீங்கள் ஏறக்குறைய எல்லா வார்த்தையையும் மறுதலிக்கும் போது, அந்த வார்த்தையின் ஒரு பாகமாக எப்படி இருக்க முடியும்-? அதற்கு காரணம் மக்கள் அல்ல. அதனால் தான் தேவன் அவர்களை "ரிக்கிகள்'' "ரிக்கெட்டாக்கள்'' என்று நாம் அழைக்கும் விஷயத்தில் என்னுடன் பேசினார் என்று நினைக்-கிறேன். சுயநலமுள்ள இந்த ஸ்தாபனங்கள் அவர்கள் அப்படியே வாழும்படி அனுமதிக்கிறது. அவர்கள் சத்தியத்தை சிலுவையில் அறைந்து விட்டனர். அதனால் தான் அவர்கள் சத்தியத்தை தேவ தூஷணமென்று அழைக்கின்றனர்; அப்படி செய்வதன் மூலம் அவர்களே தேவ தூஷணம் உரைப்பவர்களாகி விடுகின்றனர். அவர்கள் அதை அதிதீவிர மூடபக்தி வைராக்கியம் என்று கூறுவதனால் அவர்கள் யாரை ஆராதிக்க சபைகளுக்குச் செல்கின்றனரோ, அதே தேவனுக்கு விரோதமாக அவர்கள் தேவ தூஷணம் உரைக்கின்றனர் என்பதை அறியாமலிருக்கின்றனர். 129. எனவே, இந்த சபை குருமார்களின் கூட்டத்தின் மேல் நான் குற்றச் சாட்டைக்கொண்டு வருகிறேன். இந்த சந்ததியை, தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தின் பேரில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் குற்றஞ்சாட்டுகிறேன். நீங்கள் மறுபடியுமாக அவரை சிலுவையில் அறைகிறீர்கள். 130. கவனியுங்கள், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். தேவனுடைய வார்த்தை ஒரு மனிதனில் உறுதிப்படுத்தப்படுகிறது. 131. இந்த இரு கல்வாரிகளையும் அவர்கள் சாட்டின குற்றங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நினைவில் கொள்ளுங்கள், அவர் தம்மை தேவன் ஆக்கிக் கொண்டப்படியால், இவர் எங்கள் பேரில் ஆளுகை செய்யவிட மாட்டோம்''. அன்று அந்த காலை வேளையில் அவரை சிலுவையில் அறைந்த போது, அவர் மேல் என்ன குற்றத்தை அந்த சங்கம் கண்டு பிடிக்க முடிந்தது-? ''அவர் தம்மை தேவனாக்கிக் கொண்டார்'' அவர் தேவனாய் இருந்தார். ''அவர் ஓய்வுநாள் ஆசரிப்பை மீறினார்'' அவர் ஓய்வு நாளுக்கு ஆண்டவராயிருந்தார். அவர் தம்மை தேவனுக்குச் சமமாக்கிக் கொண்டப் படியால், அவர்கள், அவர் மேல் குற்றஞ்சாட்டினர். "அப்படி செய்ய உனக்கு அதிகாரமில்லை. எங்கள் பிரதான ஆசாரியர்கள். ஏதாவது வரவேண்டுமானால், எங்கள் ஆசாரியர்கள் மூலமாய்த் தான் வரவேண்டும்.'' இப்பொழுது அதை இன்றைக்கு கல்வாரியுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். 132. பிதாவாகிய தேவனுக்கு, அந்த ஆவியானவராகிய தேவனுக்கு தம்முடைய குமாரனைத் தோன்றச் செய்ய பிரியமாயிருந்தது. பரிசுத்த ஆவியை கொண்டு மரியாளை நிழலிட்டு, தமக்கு சேவை செய்யவும், தமது நோக்கத்தை நிறை வேற்றவும் ஒரு சரீரத்தை வருவித்துக்கொணர்ந்தார். "தேவன் கிறிஸ்து-வுக்குள் வாசமாயிருந்தார். தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது,'' தேவனை மக்களுக்குப் பிரதி பலித்துக் காண்பித்தது. ஒவ்வொரு நபரும் எப்படி இருக்கவேண்டுமென்று - அதாவது எப்படி குமாரரும் குமாரத்திகளுமாயிருக்க வேண்டுமென்று - அவர் முழு உலகத்திற்கு எடுத்துக் காண்பித்தார். ஒரு மனிதனை அவர் தெரிந்தெடுத்து இப்படி செய்தார். அவர் அவர்களுடைய ஸ்தாபனத்தில் சேராத காரணத்தால், அவர் மேல் குற்றஞ்சாட்டி அவரை சிலுவையில் அறைந்தார்கள். 133. அதை இந்நாளில் கல்வாரியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். (ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி) ஸ்தாபனங்களின் தவறான அபிப்பிராயங்களின் காரணத்தி-னாலும் தேவனுடைய வார்த்தையையும் திட்டத்தையும் சரிவர அறிந்திருக்க வேண்டிய வேதபண்டிதர்களிடையே காணப்படும் அலட்சியத்தினாலும் கவனம் இன்மையாலும்; இதன் காரணமாகத்தான், தேவன் கிரியை செய்து தம்மை பிரதிபலிப்பதற்காக, வார்த்தைக்கு தங்களைத் தாழ்த்தும் ஒரு சிறு கூட்ட ஜனங்களைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. இவர்கள், அது அப்படியல்ல' என்று ஒருக்காலும் கூறமாட்டார்கள். 134. அவர் அதை செய்யவில்லை என்று அவர்களால் கூறமுடியாது. ஏனெனில் அவர்களுடைய சபையோர் அதற்கு சாட்சிகளாயுள்ளனர். அவர்களால் அதை மறுக்கமுடியாது. அவர் கூறினவைகளை அவர்களால் அதை மறுக்கமுடியாது. ஏனெனில் அவர்கள் விசுவாசிப்பதாக உரிமை பாராட்டும் அதே வார்த்தை அவர் யாரென்பதை நிரூபித்துள்ளது. மேசியாவாகக் கருதப்படும் தேவனுடைய வார்த்தையை தேவன் எடுத்து, அதை ஒரு மனிதனின் மூலமாக காண்பித்தார். அவர்கள் அவரை ஒழிக்க முயன்றனர். அந்த மேசியாவை ஒழித்தால் தான் அவர்கள் நிலைத்து நிற்க முடியும். அவர்கள் கல்வியறிவு பெற்றவர்களாய் இருந்த போதிலும், அவர்களுடைய குருட்டுத்தனத்தினாலும் அறியாமையினா- லும் இச்செயலைப் புரிந்தனர். அவர்கள் - சாதுரிய மானவர்களாக, நுண்ணறிவு உள்ளவர்களாக. 135. அன்றிரவு நாம் ஒப்பிட்டது போல அந்த ஐசுவரியமுள்ள வாலிப அதிகாரியின் மேல் வெளிச்சம்பட்டபோது அவன் என்ன செய்தானென்று பாருங்கள். அவன் அதைப்புறக்கணித்தான் - அறிவாளி. பவுலும் அறிவாளியாக இருந்தான். ஆனால் ஒளி அவன் மேல்பட்டவுடன் அவன் என்ன செய்தான்-? அதை ஏற்றுக் கொண்டான். அவன் கிறிஸ்துவை அறிந்து கொள்ள, தான் கற்று அறிந்த அனைத்தையும் மறந்தான், அது தான் அவன் வாழ்க்கையை சுவிசேஷத்திற்கு தகுதியுள்ளதாக்கினது (சென்ற ஞாயிறன்று இரவு செய்தி) 136. இன்றைக்கும் அவ்வாறே சம்பவிக்கிறது. தேவனுடைய அழைப்பை பெற்று, ஆனால் வேத பள்ளியில் சேர்ந்து கொண்டு சில கோட்பாடுகளைக் கற்றுக் கொண்ட ஒரு மனிதனின் மேல் ஒருக்கால் இவ்வெளிச்சம் படலாம். அவன் கோட்பாடுகளின்படி நடக்க வேண்டியவனாயிருக்கிறான். இல்லையேல், அவனுடைய ஐக்கியச் சீட்டை அவன் இழந்து விட வேண்டும். அவன் கோட் பாடுகளை மீறினால், அவனுக்கு கறுப்புகுறி போடப்படும். அப்பொழுது யாருக்கும் அவன் வேண்டாம். ஏனெனில் ஒரு சமயம் அவன் அவர்களை சார்ந்து இருந்தான்; இப்பொழுதோ அவர்களுடன் அவன் இல்லை. ஏதோ அவனுக்கு கோளாறு ஏற்பட்டு விட்டதாக அவர்கள் எண்ணிக் கொண்டு அவர்களுடைய சபையில் அவனைச் சேர்க்க மாட்டார்கள். 137. அந்த சபைக்கு ஒரே ஒரு அடையாளம் தான் தேவை. அவர்கள் விசுவாசிப்பதையே அவனும் விசுவாசித்து, அவர்களுடைய ஐக்கியச் சீட்டை அவன் பெற்றிருக்க வேண்டும். அவன் மெதோடிஸ்டாக இருந்தால்... அல்லது ஒருத்துவம், திரித்துவம், தேவசபை, பெந்தெகொஸ்தே ஐக்கியம் இவைகளில் ஏதாவதொன்றில் அவன் சேர்ந்திருந்தால்... அவன் ஐக்கியச் சீட்டைப் பெற்று இருந்தால், தலைமை ஸ்தலம் அவனை நன்கு பரிசோதித்து, அவனுக்கு மனோதத்துவ பரீட்சையளித்து, சபைக்கு முன்பாக பேசக் கூடிய அளவுக்கு அனுப்பியிருக்கின்றனர் என்று அவர்கள் உணருகின்றனர். அவன் இந்த பரீட்சைகளில் தேறாவிட்டால் அவனைப் புறக்கணிக்கின்றனர். அது உண்மை. 138. ஆனால் உண்மையில் இந்த சபைகள் தேவனுடைய கரத்தை மாத்திரமே கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். தேவன் அவனை அபிஷேகித்து போதகராக நியமித்திருக்கிறாரா இல்லையா என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவேண்டும். அதைத்தான் இன்று நாம் பார்க்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் இன்று தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைகின்றனர். தேவ கிருபையினால் ஒரு மனிதன் தேவ அழைப்பைப் பெற்று, அவன் மூலம் தேவன் பிரதிபலிக்க அனுமதிக்கும் போது... ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்,'' என்றார் அவர். நாம் எப்படிப்பட்ட ஒரு நாளிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை கவனியுங்கள். 139. அவர்கள் அந்த அதே கல்வாரியை, அவர்கள் எடுத்துக் கொண்டு, அதே காரணத்தினால்... அது சாத்தியமென்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் பொறாமை, தவறான அபிப்பிராயம் (Prejudice) இவைகளின் காரணமாக.. இயேசு அவர்களைப் பார்த்து என்ன கூறினார்-? ''நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால், நீங்கள் யாராலே அவைகளை துரத்துகிறீர்கள்-? அவைகளே உங்களை நியாயந்தீர்க்கட்டும் (பாருங்கள்-?). நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் ...'' 140. அவர்கள், ''அது தேவனுடைய விரல் என்று உன்னால் நிரூபிக்கமுடியுமா-?'' என்று அவரைக் கேட்டிருக்க வேண்டும். அந்த கேள்வியை அவர்கள் அவரிடம் கேட்டதை நான் என் காதினால் கேட்டிருக்க எனக்கு விருப்பம். ஆனால் அதிகமாக சாதுரியம் கொண்டவர்களாக அவர்கள் இருந்ததினால் அதிகம் அறிந்து கொள்ள முடியாதிருந்தது. 141. கவனியுங்கள்-! அவர் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியால் (அவரே தேவன்)..... "அவர் எங்கள் மேல் ஆளுகை செய்யவிடமாட்டோம்.'' 142. இன்றைக்கும் அதே விதமான பழைய கூக்குரல் எழும்புகிறது: "வேதம் மனிதனால் எழுதப்பட்டது. எனவே அதன்படி வாழவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை அது தேவனுடைய வேதாகமம், தேவனுடைய வார்த்தை. அது தேவனே. அது அவர் தாமே... 143. நேற்று ஒரு மனிதனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன், ''சில மனிதர்கள் வேதாகமத்தை எழுதினார்கள்,'' என்றான். நான், "ஆம், அது உண்மை. ஆனால் அவர் நாமம்... அவரை நாங்கள் தேவன் என்று அறிந்திருக்கிறாம்.'' 144. யோபு தொடங்கி புதிய ஏற்பாடு வரை, நாலாயிரம் ஆண்டு காலமாக வேதாகமம் எழுதப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அது வெவ்வேறு மனிதர்களால் எழுதப்பட்டது. அவர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தனர். ஒருவர் மற்றவரை அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும் வேதத்தில் ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தைக்கு முரணாக இல்லையே. எவனாகிலும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ் வந்து, வேதத்தில் அடங்கி உள்ள வாக்குத்தத்தம் ஒன்றின் மேல் உரிமை கோரினால், அதை நிறைவேற்ற தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார். 145. ஆனால் அவர்களோ அப்படிச் செய்வதில்லை. அவர்கள், ''ஓ, தேவனே, நான் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். எனக்கு ஒரு பெரிய வரத்தை அளியும். ஆண்டவரே, அல்லேலூயா-! தேவனுக்கு மகிமை-! அந்த வரத்தை நான் பெற்றுக் கொண்டேன் என்று நினைக்கிறேன். அல்லேலூயா-!'' என்கின்றனர். அதனால் உபயோகமில்லை. நீங்கள் எவ்வளவு மனோதத்துவத்தை அதில் நுழைத்தாலும் அது கிரியை செய்யாது. 146. தேவன் உங்கள் மனந்திரும்புதலை அங்கீகரிக்க வேண்டும். தேவன் அதைச் செய்து தான் ஆகவேண்டும். இதைக் குறித்து அதிகம் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நம்புகிறேன். 147. கவனியுங்கள்-! வார்த்தை அவர்கள் மேல் ஆளுகை செய்ய அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். 'நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்புங்கள். நீங்கள் தவறாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் கத்தோலிக்க சபையில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள்'' என்று நான் கூறினால், ''நீ யார் எங்களுக்கு சொல்ல-?'' என்று அவர்கள் கேட்கின்றனர். நானல்ல, தேவனுடைய வார்த்தை தான் அவ்விதம் கூறுகிறது. ''நாங்கள் இப்படித் தான் விசுவாசிக்கிறோம்,'' என்கின்றனர். நீ எதை விசுவாசித்தாலும் எனக்குக் கவலையில்லை, வேதம் என்ன கூறுகிறதோ அது தான் முக்கியம் வாய்ந்தது. ''நாங்கள் அதன்படி வாழ வேண்டிய அவசியமில்லை.'' 148. நீ அதன்படிதான் வாழவேண்டும். இல்லையேல் இந்த வேதத்தின் நியாயத் தீர்ப்பின் கீழ் நீ கொண்டு வரப்படுவாய். ''ஒருவன் ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டால், அல்லது கூட்டினால், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவன் உடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார்.'' அது போதகர்கள், குருமார்கள் யாராயிருந்தாலும் சரி, நீங்கள் இந்த வார்த்தையின் ஆளுகையின் கீழ் வர வேண்டும். ஏனெனில் இது தேவனாயிருக்கிறது. வேதம் வார்த்தையை தேவன் என்று அழைக்கிறது. 149. "இது எங்களை ஆளுகை செய்யவிட மாட்டோம்.'' அவர்கள் கோட்பாடு-களையும், ஸ்தாபனங்களையும், அவர்களுடைய சிறுசிறு காரியங்களையும் ஏற்றுக்கொண்டு விசுவாசித்து, அது மனிதர்களின் சங்கங்களில் பின்பற்றப்பட்டு, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 150. அவர்கள் என்ன செய்தனர்-? முதலாம் சிலுவை மரணத்தின் போது, அவர்கள் தேவனுடைய குமாரனுக்குப் பதிலாக கொலைகாரனான பரபாஸை ஏற்றுக் கொண்டனர். 151. இன்றைக்கு அவர்கள் ஜீவவழியை ஏற்றுக்கொள்ள மறுத்து, அதற்கு பதிலாக, பொய்யாகவும் மரண வழியாகவும் அமைந்துள்ள மனிதனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கின்றனர். இந்த சந்ததியை நான் குற்றப்படுத்தி அவர்கள் தவறென்று தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறேன். அவர்கள் ஆவியை சிலுவையில் அறைய முயல்வதற்-காக குற்றவாளிகளாய் உள்ளனர். 152. எங்கும் எழுப்புதல் உண்டாக வேண்டுமென்று அவர்கள் அறிவிக்கின்றனர். வார்த்தை தாமே ஜனங்களின் மூலம் கிரியை செய்யாமல் இருக்கும் போது எழுப்புதல் எப்படி உண்டாகும்-? இதற்கு யாராவது எனக்கு பதில் அளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் அந்த அதே எழுப்புதலையே புறக்கணிக்கையில் அது எப்படி கிரியை செய்யும்-? "தேவபக்தியின் வேஷம்,'' என்று தீர்க்கதரிசி நன்றாய் சொன்னான். அவர்கள் வேஷம் ஜீவ வார்த்தையை அன்று மறுதலித்தது. இன்றும் அவர்களுடைய சொந்த பிரமாணங்கள், மற்றும் வேஷங்கள், இன்றைக்கு அவர்களுக்கு எழுப்புதலைக் கொண்டு வருகின்ற அந்த காரியத்தை புறக்கணிக்கின்றது. ஆம், ஐயா-! 153. அவர்கள் ஸ்தாபனங்களையும் கோட்பாடுகளையும் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஏற்றுக் கொள்கின்றனர். அச்செயல் அவருடைய வார்த்தையை சிலுவையில் அறைகின்றது அது அவருடைய வார்த்தையை ஜனங்களின் முன்னால் அவமாக்குகிறது. தேவனுடைய வார்த்தை தத்ரூபமாக அவர்கள் முன்னிலையில் நிரூபிக்கப்படுவதை அவர்கள் காணும் போது அது தன்னை சரியான இடத்தில் பொருத்திக்கொள்கிறது. இவைகளைச் செய்வதாக தேவன் வாக்களித்திருந்தார். அவைகளை அவர் இப்பொழுது செய்கிறார், அவர்கள் அதை கேலி பரியாசம் செய்து, அதனின்று அகன்றுவிடுகின்றனர். அது தேவ தூஷணமாகும். 154. ஏன் அதை சிலுவையில் அறைகின்றனர்-? அவர்கள் வார்த்தையையே சிலுவையில் அறையப்பார்க்கிறார்கள். அவர்கள் எப்படி தேவனை சிலுவை-யில் அறைய முடியாதோ, அதே போன்று அவர்களால் வார்த்தையையும் சிலுவையில் அறைய முடியாது. தேவனை கொண்டிருந்த அந்த சரீரத்தை, தேவனுடைய குமாரனை, அவர்கள் சிலுவையில் அறைய முடிந்தது. அந்த சமயத்தில் அவர் பலியாக இருந்து, நித்தியஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்ட குமாரர்களை கொண்டு வர வேண்டியிருந்தபடியால், அது அவ்விதம் நிகழ வேண்டியதாயிருந்தது. அப்பொழுது அவர்கள் அதை செய்ய வேண்டியதாய் இருந்தது. ஆனால் இப்பொழுது அவர்கள் செய்ய முடியாது. வார்த்தை எப்பொழுதுமே ஜீவிக்கும். ஆனால் அவர்கள்... 155. அவர்கள் என்ன செய்கின்றனர்-? அவர்கள் எப்படியெல்லாம் வேஷம் தரிக்கின்றனர்-! பிரசங்கியே, நீ என்ன பிரசங்கிக்கின்றாய்-? அவரைச் சிலுவையில் அறைவதற்காக நீ எப்படியெல்லாம் மேடையைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்-! 156. அவர்கள் தங்கள் கோட்பாடுகளின் மூலம் சுவிசேஷம் ஜனங்களுக்கு அளிக்கக் கூடிய பலன்களை சிலுவையில் அறைகின்றனர். அது தான் சிலுவையில் அறைதல், பொது ஜனங்கள், சபைகள், ஸ்தாபனங்கள் எனப்படும் பெரிய சவக்கிடங்குகளில் அறைகளில் அமர்ந்து கொண்டு, கோட்பாடுகள் என்னும் கோட்டை வரைந்து கொள்கின்றனர். தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு எவ்வித பலனையும் அளிக்காது. ஏனெனில் என்னவெல்லாம் நிகழும் என்று கிறிஸ்து கூறினாரோ, அவைகளை அவர்கள் கண்டனம் செய்கின்றனர். ஏனெனில் அது அவர்களுடைய கோட்பாடுகளுக்கு ஏற்றாற் போல் வரவில்லை. 157. அவருடைய வருகையை அவர்கள் கற்பனை செய்து நினைத்திருந்தபடியே இயேசு வரவில்லை. தேவன் அவரை அனுப்பின விதத்தில் அவர் வந்தார். அவர் சரியாக வார்த்தை என்ன கூறியிருந்ததோ அதன்படியே வந்தார். ஞானிகள், கல்விமான்கள் கண்களுக்கு, மறைத்து, கற்க விரும்பும் பாலகருக்கு அவர் வெளிப்படுத்தினார் என்று அவர் கூறினதில் வியப்பு ஓன்றுமில்லை. உங்களுக்குப் புரிகிறதா-? (சபையார் ஆமென், என்கின்றனர்- ஆசி) 158. வார்த்தையின் பலனை அவர்கள் சிலுவையில் அறைந்து விட்டார்கள். இங்கு அநேக வேத வாக்கியங்களை எழுதி வைத்திருக்கிறேன். அவைகளில் இரண்டு, மூன்றை மாத்திரம் குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் சிலுவையில் அறைந்தார்கள்... ''அந்த வார்த்தையை எப்படி - அவர்கள் எப்படி சிலுவையில் அறைந்தார்கள்-?" என்று நீங்கள் கேட்கலாம். 159. எபி.13:8ல் இயேசு, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று கூறியுள்ள போது, "அவர் அப்படியா இருக்கிறார்-?'' என்கின்றனர். பாருங்கள்-? சரி. 160. இயேசு சபைக்கு கடைசி கட்டளையைக் கொடுத்தார் “நீங்கள் உலகமெங்கும் போய் (மாற்கு-16) சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்' உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும். சுவிசேஷம் இன்னும் பாதி பேரை அடையவில்லை. இயேசுவின் நாமத்தை ஒருமுறை கூட கேட்காமல் கோடிக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் மரிக்கின்றனர். எனவே அந்த கட்டளை இப்பொழுதும் அனைவருக்கும் உரிய ஒரு கட்டளை. அது இன்னமும் தேவனுடைய கட்டளையாயுள்ளது.' உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.'' 161. அவர்களோ, இது அந்த சந்ததிக்குரியது என்கின்றனர். அப்படி சொல்வத-னால் அவர்கள் தேவனுடைய கற்பனைகளை அவமாக்குகிறார்கள். ஜனங்களு-க்கு தேவனுடைய வார்த்தை அளிக்கக்கூடிய பலனை அவர்கள் சிலுவையில் அறைந்து விடுகிறார்கள். ஆமென். 162. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு (இயேசு அவனுக்கு அளித்த இராஜ்யத்தின் திறவுகோலை அவன் வைத்திருந்தான். ''இங்கு நீ என்ன கூறினாலும், அதை நான் அங்கு மேலே கூறுவேன்....'') 163. பெந்தெகொஸ்தே நாளன்று, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அதை நன்கு அனுபவித்துக் கொண்டிருந்தனர். மற்றவர் நடந்து கொண்ட விதத்தை: தடுமாறி, குதித்து, விழுந்து, குடிகாரர் போல் நடந்து கொண்ட விதத்தை அவர்கள் கண்டனர். ஆனால் வேறு சிலரோ, "இவர்கள் மது பானத்தினால் நிறைந்து இருக்கிறார் கள்'' என்று அவர்களை ஏளனம் செய்தனர். 164. பேதுரு என்னும் பெயர் கொண்ட மனிதன் அப்பொழுது எழுந்து நின்றான். அவன் இராஜ்யத்தின் திறவுகோலை உடையவனாயிருந்தான். அவன், ''நீங்கள் நினைக்கிறபடி(அப்.2) இவர்கள் வெறி கொண்டவர்கள் அல்ல. பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாய் இருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே" என்றான். பாருங்கள், அவன் மறுபடியும் வார்த்தைக்குத் திரும்பி, ஆவியே தேவனுடைய வார்த்தை என்றும் தேவனுடைய வார்த்தையே ஆவியென்றும் காண்பித்தான். 'தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே (யோவேல் 2,38), கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் உரைத்திருக்கிறார்.'' 165. அந்த தீர்க்கதரிசியாகிய பேதுரு அங்கு நின்றுகொண்டு எவ்வித பயமும் இன்றி அந்த கூட்டம் ஜனங்களை கடிந்துகொண்டு அவர்கள் மேல் குற்றஞ் சாட்டுவதை கேளுங்கள். "இது வேதவசனப்பூர்வமானதாகும். தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; என்னுடைய ஊழியக்காரர் மேலும் என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப்பூமியிலே இரத்தம், அக்கினி புகைக் காடான அதிசயங்களையும் காட்டுவேன்,'' அது அந்த வார்த்தை தான். அவன் வார்த்தையின் மூலம் அதை நிரூபித்தான். 166. ஆனால் அவர்களோ அதை நகைத்து, பரியாசம் பண்ணினார்கள். அவர்கள் நியாயத்தீர்ப்புக்குள் சென்றனர். பட்டினம் எரிந்து போனது. ஒருவருடைய பிள்ளைகளை மற்றவர் தின்றனர். இன்றைக்கு அவர்கள் உலகம் முழுவதும் சிதறப்பட்ட ஜனங்களாக இருந்து கொண்டு, பரிசுத்தாவியானவர் இப்பொழுதும் தேவனுடைய வார்த்தையாக அமைந்திருந்து. இந்த வார்த்தை நடந்தேறும்படி செய்து இதை ஜீவிக்கும்படிக்குச் செய்கின்றது. 167. இயேசு கிறிஸ்துவே அந்த நபர், மனிதன், தேவனாக இருந்தார். அல்லேலூயா. அவர் தேவனுடைய வெளிப்பாடாக இருந்தார். அவர் தேவனாக ஒரு சரீர உருவில் அந்த காலத்திற்கான தேவனுடைய வார்த்தையை பிரதிபலித்து, அக்காலத்திற்கென அளிக்கப்பட்டிருந்த தேவனுடைய வாக்குத் தத்தத்தை அந்த காலத்து ஜனங்கள் அறிந்து கொள்ளும்படிக்கு வந்தார். 168. இன்றைக்கும் அந்த அதே காரியமாக பரிசுத்தாவியானவர் இருக்கின்றார். அது எழுதப்பட்ட வார்த்தையின் பேரில் இருக்கும் தேவனுடைய ஆவியாகும், தம்மைத் தாமே இந்த காலத்திற்கு பிரதிபலித்துக் காட்ட யாரோ ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறது, அதன் மூலம் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிக்க விரும்புகிறார்; பரி.யோவான்-14:12, "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்,'' - "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.'' பாருங்கள்-? அதை பிரதிபலிக்க ஒரு வழியை கண்டு பிடிக்க தொடர்ந்து முயன்று கொண்டு இருக்கிறார். 169. அவர்களோ அதைக் கேட்க மறுத்தனர். மக்கள் தங்கள் ஸ்தாபனங்களைக் குறித்தும், தங்கள் "சபைகள்,'' என்று அழைத்துக் கொள்ளும், தாங்கள் கொண்டு இருக்கிற சிறு கூடுகளையும் குறித்தும் அதிகமாக நினைப்பில் இருந்தால், பேதுரு கூறினதற்கு செவி கொடுக்க அவர்கள் மறுத்தனர். இன்றைக்கும் அவர்கள் அதையே செய்து, அவரை மறுபடியும் சிலுவையில் அறைகின்றனர். 170. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, ''யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணும் ஜனங்களே, என் வார்த்தைகளுக்கு செவிகொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல. நீங்கள் அமரிக்கை யாய் இருந்தால், அது என்னவென்பதை உங்களுக்குக் காண்பிக்கிறேன்,'' என்றான். அவன் தொடர்ந்து அது என்னவென்று விவரிக்கிறான். 171. அதை அவர்கள் கேட்டபோது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, ''இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்-? இதைப் பெற்றுக் கொள்ள நாங்கள் என்ன செய்யவேண்டும்-? நீர் கூறுவது சரியென்று நாங்கள் உறுதியாய் நம்புகிறோம்,'' என்றனர். 172. அவன், ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளு ங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். இது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். அதைத் தான் அவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும். 173. ஆனால் இன்றைக்கோ, ரோமன் கத்தோலிக்க சபை, "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்பதை அதன் ஸ்தானத்தில் வைத்து விட்டது. அப்பம் பிட்குதலையும் அவர்கள் மாற்றி அமைத்து விட்டனர் - நாவை நீட்டி வட்டவடிவ ரொட்டியை (Wafer) பெற்றுக் கொள்ளுதல். சபை குரு, திராட்சரசத்தை குடித்து விடுவார். அவர்களெல்லாரும் ஒருமித்து ஐக்கியங்கொள்வதாக நினைக்கின்றனர். அப்பம் பிட்குதல், பரிசுத்த ஆவியென்று அழைக்கப்படாமல், ''பரிசுத்த (யூகாரிஸ்ட்) புனித ரொட்டி'' (Holy Eucharist) என்றழைக்கப்படுகிறது. ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' - திரித்துவ ஞானஸ்நானம். அது வேதத்தில் எங்கும் சொல்லப்படவே இல்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இதை இந்த மாறுபாடுள்ள சந்ததிக்கு விவரித்தால்- 174. "மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள்'' என்று பேதுரு கூறினதுபோல்- (அப். 2:40). 175. இதை அவர்களுக்கு காண்பித்தால், அவர்கள் என்ன செய்கின்றனர்-? அவர்கள் பரியாசம் செய்து, ''எங்கள் சபை அவ்வாறு போதிப்பதில்லை'' என்கின்றனர். அப்படியானால் நீங்கள் குற்றவாளிகள். ஜனங்களிடமிருந்து தேவனுடைய வல்லமையை அகற்றிப் போட்டு, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் குற்றத்தை நீங்கள் செய்கிறீர்கள். அந்த அதே வார்த்தையை ஜனங்களிடமிருந்து பறித்து, அதை சிலுவையில் அறைகிறீர்கள். உங்கள் சபையோருடன் நீங்களும் ஆக்கினைக்குள்ளாவீர்கள். 176. சென்ற ஞாயிறன்று நான் உங்களிடம் கூறினது போல, மார்டின் லூத்தர் கிங் விலையேறப்பெற்ற அந்த ஜனங்களை மரணக் கண்ணிக்குள் வழி நடத்தி செல்கிறார். ஓ, யாராகிலும் அவரிடம் இதைக்குறித்து பேசினால் நலமாய் இருக்கும். எனக்கு பேசத்தருணம் கிடைத்தால் நலமாயிருக்கும். ஒரு பள்ளிக் கூட விவகாரத்தில் எழுந்த எழுச்சியின் விளைவு. பாருங்கள்-? ஒரு மனிதன் உடைய நிறம் காரணமாக அவனுடன் சேராதிருக்கும் கடின இருதயத்தை ஜனங்கள் பெற்றிருப்பார்களானால் அவர்கள் ஏற்கனவே ஆக்கினைக்குள்-ளாக்கப்பட்டு மரித்துவிட்டனர். தேசம் கறுப்பு நிறத்தவருக்கு உரிமையைக் கொடுத்திருக்கும் போது - அந்த உரிமையை எதிர்த்துப் போராட வேண்டாம். ஐயர்லாந்துகாரர், ஜெர்மானியர் போன்றவர் தங்களை அவ்வாறு வேறு பிரித்துக் கொண்டாலும், அதனால் கிறிஸ்தவர்களுக்கு எவ்வித தொல்லையும் இல்லை. கிறிஸ்தவர்கள் என்னும் முறையில் அவர்கள் ஒருமித்துமுன்னேறிச் செல்வார்கள். அந்த மனிதன் (மார்டின் லுத்தர் கிங்) ஒரு கிறிஸ்தவர். போதகர் என்னும் ரீதியில் அவர் ஜனங்களை அதற்கு விரோதமாய் எழும்பச் செய்யக் கூடாது. அதனால் லட்சக்கணக்கானவர் மரிப்பார்கள். அது மற்றொரு புரட்சியை உண்டாக்கும். அப்படி செய்வது அவமானம். 177. இங்கும் அவ்வாறே நிகழ்கின்றது. (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை ஒரு தடவை தட்டுகிறார் - ஆசி) சரியாக மறுபடியும் அதுவே. அது உண்மை. பாருங்கள்-? ஜனங்கள் சத்தியத்தை மாத்திரம் பார்த்து, அது சத்தியம் என்று உணர்ந்து கொண்டால்- ''எங்கள் சபை அதை விசுவாசிப்பதில்லை. எங்களுக்கு வேறு வழி இருக்கின்றது,'' என்கின்றனர். நல்லது, அது சரியான வழி அல்ல. காரியம் அது அல்ல. 178. அவர், "நீங்கள் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார். அவர்களோ அதை செய்யமாட்டார்கள். ஓ, அப்படியானால் அவர்கள் என்ன செய்தனர்-? அவர்கள் செய்யும் நூற்றுக்கணக்கான செயல்களில் இது ஒன்று. அவைகளை நாம் இயன்றவரை துரிதமாகப் பார்ப்போம். 179. இரண்டாம் முறை சிலுவையில் அறைதல். ஒரு மனிதன் "பிதா, குமாரன், பரிசுத்தாவி'' என்னும் கோட்பாட்டை வார்த்தைக்குப் பதிலாக ஏற்றுக் கொண்-டால், அந்த பட்ட பெயர்களை, நாமத்துக்குப் பதிலாக ஏற்றுக் கொண்டால், அவன் ஜனங்களுக்கு என்ன செய்கிறான்-? ஜனங்களுக்கு வார்த்தையின் பலன்களை அவன் சிலுவையில் அறைந்து விடுகிறான். 180. மாற்கு-16 வேறொரு சந்ததிக்கு உரியது என்று அவன் சொல்வானானால்- தேவன் தாமே சரியாக அங்கே, இயேசுவே அவர்களிடம், பேசிக் கொண்டு இருந்தார் ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத் தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் படுவான். இந்த அடையாளங்கள் பின் தொடரும் .... எவ்வளவு தூரத்திற்கு-? ஒவ்வொரு தேசத்திற்கும், ஒவ்வொரு பாஷைக்காரருக்கும், எல்லா ஜாதிகளு-க்கும், எல்லா மனிதருக்கும். அதே சுவிசேஷம். ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் . ''ஒரு மனிதன் அதை வேதத்திலிருந்து எடுத்துவிட முயலும் போது, சபையோருக்கு சுவிசேஷத்தினால் உண்டாக்கக் கூடிய பலன்களை அவன் சிலுவையில் அறைந்து விடுகிறான். ஆகவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்கள் மேல் குற்றம் சாட்டுகிறேன். ஆண்டவரை கொலை செய்த குற்றத்தை நீங்கள் புரிந்துள்ளீர்கள்-! 181. சபை அவரை வெறுத்தது. ஏன்-? அவர், அவர்கள் தேவனாயிருந்தார். அவர்கள் அவரை வெறுத்து, அவர் தங்கள் மேசியா என்பதை மறுதலித்தனர். இல்லை, ஐயா, அதைப் போன்ற ஒருவரை தங்கள் மேசியாவாக இருக்க அவர்கள் விரும்பவில்லை. 182. இன்றைக்கும் சபை அதே காரியத்தை செய்கிறது. அது வார்த்தையை மறுதலிக்கிறது. அவர்களுக்கு அது வேண்டாம். அவர்கள் விசுவாசிக்க வேண்டுமென்று அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள தங்கள் கோட்பாடுகளுக்கு முரணாக அது இருக்கிறது. 183. வார்த்தை தான் மேசியா. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி) நல்லது, வார்த்தையின் பிரதிபலிப்பாய் இருப்பது என்னவாயிருக்கிறது-? நம் மத்தியில் பரிசுத்த ஆவியாயிருக்கின்ற ஒரு பிரதிபலிக்கின்ற ஒரு மேசியா. அவர் தம்மைத் தாமே பிரதிபலித்து. கோட்பாடு களினால் கரிபிடிக்காத ஒரு விளக்கை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் - அதன் ஊடாக அவர் காணத்தக்கதாக, அதன் ஊடாக அவர் வெளிச்சத்தை அளிப்பதற்காக. 184. நினைவில் கொள்ளுங்கள், 'அவர்கள் எழுந்திருந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். தங்கள் விளக்குகளின் கண்ணாடி மேற்கூட்டை, கழுவினர், ஆனால் அப்பொழுது காலதாமதமாகிவிட்டது. எனவே லுத்தரன்கள், பிரஸ்பிடேரியன்கள், மெதோடிஸ்டுகள் போன்றவர்கள் இந்த கடைசி நாட்களில் பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ள முயல்வதை ஒருவன் காணும் போது, அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஒருக்கால் அந்நிய பாஷை பேசி, மேலும் கீழும் குதிக்கலாம். ஆனால் என்ன நிகழ்கிறதென்று கவனியுங்கள். அவர்கள் முழுவதுமாக.. அவளுடைய காலம் முடிவு பெற்றுவிட்டது என்பதற்கு இதுவே அடையாள நேரம். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 185. எந்த நேரத்திலும் சபையானது "மேலே வா'' என்னும் கட்டளையை பெறக் கூடும். ஆமென். 186. அதற்கென எல்லா ஒழுங்குகளும் நிறைவேறி வருகின்றன. பரிசுத்த ஆவியானவர் தாமே, தாம் கிரியை செய்யக் கூடியவர்களின் மூலம் இயேசுவை தத்ரூபமாக்கி, அவரை நிரூபித்து வருகிறார். அவர் தாமே கீழே இறங்கி வந்து, தம்முடைய புகைப்படத்தை எடுக்க அனுமதித்து, அதைக் காண்பித்து, அதை குறித்து விஞ்ஞானம் பேசும்படியாகச் செய்து, மற்றக் காரியங்கள், தாம் என்ன செய்யப் போவதாக அவர் கூறியுள்ளதை சரியாக நிரூபிக்கிறார். வேதபூர்வமாக தாம் செய்யப் போவதாக அவர் கூறியுள்ள காரியங்களை சரியாக செய்து கொண்டிருக்கிறார். இது எந்த கோட்பாடும் அல்ல, அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட கருத்து எதுவுமல்ல - அதிக இரத்தம், நெருப்பு, புகை இவைகளைத் தோன்றச் செய்வதுமல்ல; ஆனால் ஒரு வேதபூர்வமான மேசியாவின் அத்தாட்சி. இன்று அநேக போலிகளும், போலியான செயல்களும் காணப்படுகின்றன. ஆனால் இவையனைத்தும் உண்மையான வார்த்தையை சிறப்பாக பிரகாசிக்கச் செய்கின்றன. அது உண்மை, ஆவிக்குரிய ஜனங்கள் - நன்மை, தீமை இவைகளுக்கு வித்தியாசம் அறிந்துள்ள ஜனங்கள் - இதை அறிந்து கொள்ளட்டும்..... பாருங்கள். 187. அவரை மறுதலித்தனர். அவர்களுடைய மேசியாவை அவர்கள் மறுதலித்து, ''எங்களுக்கு அவர் தேவையில்லை'' என்றனர். இன்றைக்கும் அதே காரியத்தை அவர்கள் செய்கின்றனர். ''நான் அங்கு சென்று, அந்த குழுவினர் நடந்து கொள்வது போல் நானும் நடந்து கொள்ள வேண்டுமென்றால், எனக்கு அது தேவையில்லை.'' சரி, அப்படியானால் அதை நீ பெற்றுக் கொள்ள முடியாது. அவ்வளவு தான். பாருங்கள்-? அதே தான் இன்றும். 188. அவர் யாரென்பதை அவர்கள் சரியாக அடையாளம் கண்டு கொண்ட பின்பும், அவர்கள் அவரை வேண்டாமென்று உதறித் தள்ளினர். அவர்கள் அவரை வெறுத்தனர். ஏன் அப்படி-? அவர் அவர்களுடைய போதகர்களை, விரியன் பாம்புக்குட்டிகள் என்றழைத்தார். ''வெள்ளை அடிக்கப்பட்ட சுவர்களே, நீங்கள் கல்லறையைத் தவிர வேறொன்றுமில்லை. உங்கள் வெளிப்புறம் மெருகேற்றப்பட்டு அங்கியும் கழுத்துப்பட்டையும் கொண்டதாய் உள்ளது. ஆனால் உங்கள் உட்புறமோ மரித்தவனின் எலும்புகளைக் கொண்டு உள்ளது,'' என்றார். அவர் எதையும் மறைக்கவில்லை. ஒரு சிறு கலிலேயன், தச்சனின் மகன்; ஆனால் அவர் எதையும் மறைக்காமல் உள்ளபடியே சொன்னார். 189. ''நினைக்க வேண்டாம்...'' அவருடைய முன்னோடியாகிய யோவான் ஸ்நானன் சொன்னான் (அவனும் எதையும் மறைக்கவில்லை). அவன், ''ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத் தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' என்றான். ஆம் ஐயா-! ''கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப் படும்.'' ஆம், ஐயா-! தேவன் தமது வார்த்தையைப் பொறுத்தவரை மிகவும் கண்டிப்பாகவும், உறுதியாகவும் இருக்கிறார். ஆம், ஐயா-! 190. கவனியுங்கள், இயேசு வேதவாக்கியங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டார்... நான் சொல்வதைக் கவனித்துக் கேட்கிறீர்களா-? (சபையார் ''ஆமென்'' என்கிறார்கள்- ஆசி.) இயேசு மேசியாவென்று வேதவாக்கியங்களின் மூலம் தேவனால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். அது சரியா-? 'ஆமென்'' இன்னும் சில நிமிடங்களில் பேதுருவின் குற்றச்சாட்டுக்கு வருவோம். அப்பொழுது அது சரியா இல்லையாவென்று கண்டு கொள்வீர்கள். அவர் ஒரு மனிதனுக்குள்ளாக வெளிப்பட்ட தேவனாக, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்பட்டார். அவர் முழுவதுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். அது உண்மை. அவர் மேசியாவாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையை உறுதிபடுத்தின போதிலும், மோசே அவரைக் குறித்து, "மேசியா வரும் போது அவர் தீர்க்க தரிசியாயிருப்பார். இன்னின்ன காரியங்கள் சம்பவிக்கும்'' என்று கூறி இருந்தான். 191. கிணற்றடியில், அவளுடைய அழுக்கான நிலையில் நின்ற அந்த ஸ்திரீ எதற்கு அடையாளமாயிருந்தாள்-? இந்த கடைசி நாட்களில், புறம்பாக்கப்பட்ட வர்களை தேவன் தம்மிடம் இழுத்துக் கொள்வார் என்பதற்கு. 192. சென்ற இரவு - அல்லது வேறொரு சமயம் - நான் கலியாண விருந்தைப் பற்றி இங்கு பிரசங்கித்தேன். எப்படி அவன் "நான் பெரிய விருந்து ஒன்றை ஆயத்தம் பண்ணினேன்; இந்த மனிதரையெல்லாம் விருந்திற்கு அழைத்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் சாக்கு போக்கு சொல்லிவிட்டார்கள்'' என்றான். ஒருவன், "நான் வரமாட்டேன். அது எங்கள் கோட்பாடுகளை பாழாக்கிவிடும்'' என்றான். "நான் வரமுடியாது. ஒரு மனைவியை விவாகம் செய்தேன். அவள் என்னைப் போக அனுமதிக்கவில்லை.'' ''நான் ஒரு சபையை விவாகம் செய்திருக்கிறேன். என் தாயார் மெதோடிஸ்டு, அல்லது பாப்டிஸ்டு, அல்லது கத்தோலிக்கர். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.'' 193. கலியாண விருந்துக்காரன், "என் கலியாண விருந்தில் நீங்கள் பங்கு கொள்ள மறுக்கிறீர்கள். ஆகவே வீதிகளில் சென்று வேசிகளையும், குடிகார-ரையும், யார் அகப்பட்டாலும் பலவந்தம் பண்ணி அழைத்து வாருங்கள். அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள். அவர்களை சரிபடுத்துவேன். விருந்து ஆயத்தமாகி விட்டது. அவர்கள் என் விருந்தாளிகள் - மேசை ஆயத்தமாகி விட்டது. எனவே விருந்துண்ண யாராவது இருக்க வேண்டும்" என்றான். அவர்கள் வரவில்லை. அது யூதர்களை குற்றவாளிகளாக்கினது. 194. ஆனால் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது-? ''நான் பிரஸ்பிடேரியன்,'' ''நான் லுத்தரன்,'' ''நான் ஒருத்துவக்காரன்,'' ''நான் இருத்துவக்காரன்,'' ''நான் இது; என்னால் வர முடியாது. பாருங்கள். ''நீங்கள் அங்கு இருக்க மாட்டீர்கள்.'' அப்படித்தான் அவர் சொன்னார். சரி . 195. சரியானபடி உறுதிபடுத்தப்பட்ட மேசியா, சரியாக உறுதிப்படுத்தப்பட்ட அந்த வார்த்தை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை - தேவன் அந்த வார்த்தையை வாக்குத்தத்தம் செய்திருந்தார். அது போன்றே மேசியா வந்தார். அவர், ''நான் எங்கே தவறினேன்-? நான் தான் அந்த மனிதன் என்று என்னை நீங்கள் விசுவாசிக்காவிட்டால் என் கிரியைகளையாவது நீங்கள் விசுவாசி யுங்கள். என் கிரியைகள் நான் யாரென்று சாட்சி பகருகின்றன. நான் மேசியாவென்று அந்த கிரியைகள் எடுத்துரைக்கின்றன. நீங்கள் என்னை விசுவாசிக்க மறுக்கும் காரணம், யோசேப்பு அங்கு இருக்கிறான்... நான் அந்த சிறு குடிலில் பிறந்தேன். என் வளர்ப்பு தந்தை ஒரு தச்சன். அது தான் காரணம்,'' என்றார். 196. அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அவர்கள், "ஏய், இவன் யார்-? இந்த ஆள் யார்-? யோசேயும் மற்றவரும் இவன் சகோதரர் அல்லவா-? இவன் சகோதரிகளும் நம்மிடையே இருக்கின்றனர் அல்லவா-? இவனுடைய தாயார் பெயர் மரியாள் அல்லவா-? தகப்பனின் பெயர் யோசேப்பு அல்லவா-? இப்படிப் பட்ட ஒருவன் எங்கிருந்து கிடைத்தான்-? அவன் எந்த வேதபள்ளியிலிருந்து வந்திருக்கிறான்-? அவனிடம் ஐக்கியச் சீட்டு எதுவும் இல்லையே-! அவனிடம் நற்சாட்சி பத்திரங்களும் இல்லை... இவனை எங்கிருந்து கண்டு பிடித்தீர்கள்-?'' என்றனர். 197. அவரைக் குறித்து அநேகர் இடறலடைந்ததாக வேதம் கூறுகிறது. அநேக அற்புதங்களை அவரால் அங்கு செய்ய முடியவில்லை. அவர் தமது முதுகைத் திருப்பி அங்கிருந்து சென்று விட்டார். அவர், 'தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் (கவனியுங்கள்-!) தன் இனத்திலும் (பாருங்கள்-?) தன் வீட்டிலுமே யன்றி வேறெங்கும் கனவீனமடையான்'' என்றார். 198. அவர் சரியாக உறுதிப்படுத்தப்பட்ட மேசியாவாக இருந்தார். அவர் தமக்குச் சொந்தமாக எந்த கனத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை. "பிதாவானவர் செய்ய நான் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் நானாக செய்யமாட்டேன்'' என்றார். அவர். அது தான் மேசியாவா என்று கேட்கும்படி அவர்களிடம் சவால் விடுத்தார். 199. மோசமான பெயர் கொண்டிருந்த அந்த ஸ்திரீயைப் பாருங்கள். அவள் கண்டு கொண்டாள். அவள் கெட்ட நடத்தையுள்ள ஸ்திரீ என்னும் பெயர் பெற்றிருந்தாள். அவள் ஒழுக்கம் தவறினவளாயிருந்தாள். யாரும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தேவனுடைய கட்டளைகள் அது குற்ற மென்று தீர்ப்பு கூறுகின்றன. அவள் ஒழுக்கம் தவறினவள். ஆனால் அவள்..... 200. நீ எவ்வளவு பெரியவன் அல்லது சிறியவன் என்பதை அனுசரித்து அவர் தீர்ப்பு கூறுவதில்லை. அவர் உன் இருதயத்தின்படி - நீ என்னவாயிருக்க உன் இருதயத்தில் விரும்புகிறாய் என்பதை அனுசரித்து - தீர்ப்பு கூறுகிறார். 201. ஆகவே அவளுக்கு அந்த கோட்பாடுகள் எதுவும் தேவையாய் இருக்க வில்லை. ஆகவே இந்த காரியமானது அவளுக்கு முன்பாக பிரகாசித்த போது அதைத் தான் அவள் விரும்பினாள். முன்பு அவள் என்ன நிலைமையில் இருந்த போதிலும், தேவனிடம் வர அவள் ஆயத்தமானாள். தேவன் இருதயத்தைப் பார்த்து தீர்ப்பு கூறுகிறார். மனிதனோ வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பு கூறுகிறான். தேவன் இருதயத்தைப் பார்க்கிறார். ஆகவே அவள் என்னவாயிருந்த போதிலும், அந்த வெளிச்சம் பிரகாசித்தது. அது தான் அதன் முடிவு. அவள் நித்திய ஜீவனின் சத்த்த்தை கிரகித்துக் கொண்டாள். 202. ஓ, என்னே-! இது சத்தியம் என்பதைக் காண எவ்வளவு ஐசுவரியம் உள்ளதாயிருக்கிறது-! இதில் நான் நிலைநிற்பேன்... பரலோகத்தின் தேவன் உயிரோடெழுப்புவார். அப்பொழுது என் சத்தம் மறுபுறத்தில், தேவனுடைய மகத்தான காலம் என்னும் காந்த ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அது இந்த கடைசி நாளில் இந்த சந்ததியை ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்தும்... (பிரசங்கத்தின் ஒரு பாகம் ஒலி நாடாவில் பதிவாகவில்லை -ஆசி)..... இயேசு கிறிஸ்து இப்பொழுதும் தம்மை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக அடையாளம் காண்பிக்கிறார். தேவனுடைய வார்த்தையைக் கொண்டு இவர்களைக் குற்றஞ்சாட்டுகிறேன். 203. நான் வேறொரு வாக்குத்தத்தத்திற்கு துரிதமாய் செல்ல வேண்டும். ஏனெனில் நமக்கு பதினைந்து நிமிடங்கள் மாத்திரமே உள்ளன. 204. அங்கே அவர்கள்... அங்கே அவர்கள்... என்ன-? ஓ, என்னே-! கல்வாரியில்... அவர்கள் சிலுவையில் அறைந்தார்கள். மூன்றாவதாக: வாக்குத்தத்தம்பண்ணப் பட்ட தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டதை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டதனால் அவர்கள் அவரை சிலுவையில் அறையவில்லை. பின்னை ஏன் அவரை அவர்கள் சிலுவையில் அறைந்தனர்-? உங்களால் அதை ஊகிக்க முடிகிறதா-? ஒரு நிமிடம் சற்று பின்னால் செல்வோம். அப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் ஏன் சிலுவையில் அறைய வேண்டும்-? மரியாள்... 205. ஒரு சமயம் நான் 'தாவீது வீட்டாரின் ராஜகுமாரன்'' என்னும் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அது டாக்டர் இன்கிரஹாம் என்பவரால் எழுதப் பட்டது. அது மிகவும் அருமையான புத்தகம். அது நாடக வடிவில் உள்ளது. அதீனா என்னும் பெண்ணிடமிருந்து பெற்ற சில பழைய ஏடுகளிலிருந்து சில உண்மைகளை இப்புத்தகம் தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது. அவள் தன் படிப்பை முடிக்க எகிப்திலுள்ள கெய்ரோவிலிருந்து பாலஸ்தீனாவுக்குச் சென்றாள். கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவள் பாலஸ்தீனாவில் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு நடந்த சம்பவங்களை விவரித்து அவள் தன் தகப்பனாருக்கு கடிதம் எழுதினாளாம். அந்த புத்தகத்தை நீங்கள் படித்தால் நலமாயிருக்கும். அது ஒரு நல்ல புத்தகம் - "தாவீது வீட்டாரின் ராஜகுமாரன்.'' ''அக்கினி ஸ்தம்பம்'' என்னும் புத்தகத்தையும் இவரே எழுதினார். இதை ஆதாரமாகக் கொண்டு தான் சிசில்-டிமில் ''பத்து கட்டளைகள்'' என்னும் சினிமா படத்தை எடுத்தார். 206. அதீனா எழுதிய கடிதங்கள் அப்புத்தகத்தில் இடம் பெறுகின்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட வேண்டிய தினத்தன்று, அவர் ஏழு பிசாசு-களை துரத்திய மகதலேனா மரியாள் கூட்டத்திற்கு முன்னால் ஓடி, ''அவர் என்ன தவறு செய்தார்-? ஏனெனில் அது காந்த ஒலி நாடாவில் இருக்கின்றது, பிறகு அது நித்திய ஒலிநாடாவில் இருக்கும். அவர் என்ன தவறு செய்தார்-?'' அது சரி. ''அவர் பிணியாளிகளைக் குணமாக்கி, காவலில் இருந்தவர்களை விடுதலையாக்க அல்லவா முயன்றார்-? நன்மையைத் தவிர அவர் வேறென்ன செய்தார்-? சொல்லுங்கள் பார்க்கலாம்,'' என்று கெஞ்சினாளாம். 207. அப்பொழுது ஒருவன் அவள் கன்னத்தில் அறைந்து, ஜனங்களை நோக்கி, ''உங்கள் ஆசாரியன் கூறுவதைவிட இந்த மூடப்பெண் கூறுவதை நம்புவீர்-களா-?'' என்று கேட்டானாம். 208. பார்த்தீர்களா-? அவர் என்ன தவறு செய்தார்-? அவர் ஒன்றுமே செய்யவில்-லையே-! அப்படியானால் அவர்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்-? ஏன்-? ஏன்-? ஏனெனில் அவர் யாரென்று அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. 209. இன்றைக்கும் அதே காரியம் தான். இந்த நாட்களின் போதகர்களும், நமது நவீன வேத ஆசிரியர்களும் ஜனங்களுக்குள் அதிகமான கோட்பாடுகளை நுழைத்து, இது செய்வினை என்றும், பிசாசு என்றும், மனோதத்துவ செயல் என்றும், ஒருவிதமான ஏமாற்றுதல், தந்திரம் என்றும் அவர்களை நம்பச் செய்துள்ளபடியால், இது இந்த நாளுக்கான தேவனுடைய வார்த்தையின் உறுதிப்படுதல் என்பதை அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை. இதுவே கடைசி நாளின் அடையாளங்களாயுள்ளது. 210. நீங்கள் அவர்களுடைய ஸ்தாபனத்தின் அங்கத்தினராக இராமற்போனால், அவர்கள், "அது ஒரு மாயை, அது ஒரு தந்திரம், இவர் செய்வதைப் பாருங்கள், அவர் செய்வதைப் பாருங்கள்,'' என்பார்கள், உண்மையான காரியத்தை அவர்கள் தந்திரம் என்றும், தவறென்றும் நிரூபிக்கட்டும் பார்க்கலாம். அது தவறு என்று ஒரு முறை அவர்கள் நிரூபிக்கட்டும். அவர்களால் முடியாது. அது ஒரு போதுமே தவறாயிருந்ததில்லை, அது இனி தவறாயிருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அது தேவனாயுள்ளது. பாருங்கள்-? ஆனாலும் அவர்கள் தவறென்று சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றனர். 211. 'அவர் புகழ் வாய்ந்த மனிதனாக இருந்திருந்தால்...'' என்று அவர்கள் நினைக்கின்றனர். இது புறம்பாக்கப்பட்டவர்களை கொண்ட ஒரு சிறுகுழுவாக அமைந்துள்ளது. ''அந்த மனிதனை எங்கள் சபையினின்று புறம்பே தள்ளி விட்டோம் (பாருங்கள்-?) அவர் எங்கள் சபைக்கு வருவது வழக்கம். அவர் இதை கைக்கொண்டு, அதைக் கைகொண்டு சென்றுவிட்டார். இப்பொழுது அவர்கள் அதில் முடிவடைந்து உள்ளனர். அது என்னவென்று, யாரென்று பாருங்கள்'' என்றெல்லாம் கூறுகின்றனர். எனக்குக் கவலையில்லை. 212. அவர்கள் பேதுரு, யாக்கோபு, யோவானைக் குறித்தும் அக்காலத்தில் அப்படித் தான் கூறியிருப்பார்கள், ''படிப்பறியாதவர்கள், பேதமையுள்ளவர்கள்,'' என்று அவர்களை அழைத்தனர். ஆனால் அக்காலத்தில் நடந்த ஒன்றை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. அதாவது, அவர்கள் இயேசு உடன் கூட இருந்தவர்கள் என்று அறிந்து கொண்டார்கள். அதுதான் வித்தியா-சத்தை உண்டு பண்ணினது. பாருங்கள்-? 213. அவர் யாரென்று அறிந்து கொள்ளாததால், அவர்கள் அவருக்கு அப்படி செய்தனர். தேவனுடைய உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை அந்த நாளில் அங்கு நின்று கொண்டிருந்தது என்பதை அவர்கள் அறியாமல் போனார்கள். அவர்கள் உடைய காலத்தில் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொள்ளுதல் என்பது சரியான முறையே. ஆனால் அவர்கள் கைக்கொண்ட அதே நியாயப் பிரமாணம், அவர் எப்பொழுது வருவார் என்றும், இந்த மனிதன் யாராயிருக்கப் போகின்றார் என்றும் என்னவாக இருக்கப் போகின்றார் என்றும் எந்த காலத்தில் வருவாரென்றும். சுட்டிக் காட்டியது. ஒரு பாகத்தை அவர்கள் கைக் கொண்டனர், மற்ற பாகத்தையோ அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 214. இன்றைக்கும் அதையே தான் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு ஸ்தாபனம் உள்ளது. அவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதாக கூறிக் கொள்கின்றனர். ஆனால் நாம் வாழும் மணி நேரத்தை அவர்கள் மறுக்கின்றனர். அது அந்த பழைய பழமொழியை நமது நினைவுக்குக் கொண்டு வருகிறது: தேவன் செய்த காரியங்களுக்காக மனிதன் அவரைத் துதிக்கிறான். அவர் செய்யப்போகிற காரியங்களை அவன் எதிர் நோக்கியிருக்கிறான். ஆனால் அவர் தற்பொழுது செய்து கொண்டிருப்பவை களையோ அவன் அசட்டை செய்து, அதன் விளைவாக ஆக்கினைக்கு உள்ளாக்கப்படுகிறான். பாருங்கள்-? தேவன் அற்புதமானவர் என்றும் அவர் எவ்வளவு பெரியவர் என்றும் அவர் என்ன செய்யப் போகிறார் என்றும் அவர்கள் அறிந்திருக்கின்றனர். அவர் வரப் போகிறார், என்றாவது ஒரு நாளில் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ்ந்து நாம் வீட்டிற்கு செல்வோம் என்றும் அவர்கள் விசுவாசிக்கின்றனர். ஆனால் அவர் இக்காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்று வேதம் கூறியுள்ளதோ, அந்த அடையா-ளங்களையும் அற்புதங்களையும், அவர் இக்காலத்தில் செய்து கொண்டு வருகிறதை அவர்கள் கண்டும் அதை மறுதலித்து எல்லாவற்றையும் இழந்து விடுகின்றனர். 215. "குருடனுக்கு குருடன் வழி காட்டினால், இருவருமே குழியில் விழுவார்கள்'' என்று இயேசு கூறியுள்ளார். இந்த கடைசி நாட்களில் தேவன் உங்கள் கண்களைத் திறக்குமாறு ஜெபியுங்கள். சரி. 216. இன்று அதையே, அதைப் போன்றே, அவர்கள் செய்கின்றனர். அவர்கள் அறிந்து கொள்ளாததால், அதே தேவனை அவர்கள் இன்றைக்கு மறுதலித்து சிலுவையில் அறைகின்றனர். அவர்கள் இன்றைக்கு இக்காரியங்கள் மறுதலிப்-பதன் காரணத்தால் இயேசுவை மறுபடியும் சிலுவையிலே அறைகின்றனர். அவர்கள் பரிசுத்தாவிக்கு விரோதமாக தூஷண வார்த்தைகளைப் பேசுகின்ற- னர். அப்படி செய்வதனால் அவர்கள்..... அவர்கள் எவ்வாறு பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தேவதூஷணம் உரைக்கின்றனர்-? 217. அக்காலத்தில் அவர்கள் எவ்வாறு தேவ தூஷணம் உரைத்தனர்-? அவர்களால் அப்பொழுது அதற்கு விரோதமாக தேவதூஷணம் உரைக்க முடியவில்லை. ஏனெனில் பரிசுத்தாவி அப்பொழுது வரவில்லை. இயேசு அவர்களுடைய இருதயங்களின் சிந்தனைகளைப் பகுத்தறிந்து, அவைகளை வெளிப்படையாய் கூறின காரணத்திற்காக அவரை 'பெயல்செபூல்' என்று அழைத்தனர். "இது பிசாசு,' என்று அவர்கள் கூறினர். வேறு விதமாகக் கூறினால், ''அவர் குறி சொல்பவர், அதனால் தான் அவரால் இப்படி செய்ய முடிகிறது. அவர் பிசாசேயன்றி வேறல்ல,'' என்றனர். பாருங்கள், அவர்களுக்கு 400-ஆண்டு காலமாக தீர்க்கதரிசிகள் இருக்கவில்லை. அவர்கள் தீர்க்கதரிசிகள் இல்லாமல் வளர்ந்து விட்டனர். பாருங்கள்-? அவர்களுக்கு நியாயப்பிரமாணம் மாத்திரமே இருந்து வந்தது. அவர்கள், ''இவர் பெயல்செபூல்'' என்றனர். 218. இயேசு அவர்களை நோக்கி, "நான் உங்களை மன்னித்து விடுகிறேன். ஆனால் பரிசுத்தாவியானவர் வரும் போது (இப்பொழுது பாருங்கள்) அதற்கு விரோதமாக நீங்கள் ஒரு வார்த்தை பேசினாலும், அது உங்களுக்கு மன்னிக்கப் படாது,'' என்றார். 219. நினைவில் கொள்ளுங்கள். அது எக்காரணத்தைக் கொண்டும் மன்னிக்கப் படமாட்டாது. அது மன்னிக்கப்பட முடியாது. இரக்கம் காட்டப்படுவதில்லை. நீங்கள் தேவதூஷணம் உரைத்து, தேவனுடைய ஆவியை, ஆவியினால் உறுதி படுத்தப்படும் தேவனுடைய வார்த்தையை (பாருங்கள், வார்த்தை அவ்வாறு கூறுகின்றது. ஆவி தான் அதை உறுதிப்படுத்துகின்றது) அவ்வாறு அசுத்தம் என்று நீங்கள் அழைத்தால், கிருபைக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையேயுள்ள கோட்டை நீங்கள் கடந்து விட்டீர்கள். நீங்கள் ஒருக்காலும் மன்னிக்கப் படுவதில்லை. 220. அதனால் தான் நான், இந்த சந்ததியார், வெளிப்பட்ட தேவனுடைய குமாரனை தூஷித்து சிலுவையில் அறைந்த குற்றத்தை புரிந்துள்ளனர் என்று அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறேன். கிறிஸ்து தாமே, நோவாவின் காலத்திலும் சோதோமின் நாட்களிலும் நடந்தது போலவே இக்கடைசி நாட்-களிலும் வெளிப்படுவார் என்று அவர் எல்லா தீர்க்கதரிசிகளின் மூலமாகவும் வாக்குத்தத்தம் செய்துள்ளார். தேவ தூஷணம். தேவ குமாரனை அவர்கள் ஜனங்களின் முன்னிலையில் மறுபடியும் சிலுவையில் அறைகின்றனர். அவரே உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை. அவருக்கு விரோதமாக பேசப்படும் ஒரு வார்த்தையும் கூட மன்னிக்கப்படாது. 221. அப்படியானால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்-? நீங்கள் எங்கு நிற்கப் போகிறீர்கள்-? அவர்கள் ஆக்கினைக்குள்ளாகி தேவனுடைய கோபாக்கினை அவர்கள் மேல் ஊற்றப்படும் மணி நேரம் வரைக்கும் காத்திருக்கின்றனர். அவர் அவர்களை தவிடுபொடியாக்குவார். 222. இந்த சந்ததியார் உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனங்களையும் கோட்பாடுகளை-யும் அதிகமாய் நேசிக்கின்றனர். ஓ, இதைக் குறித்து பேச நீண்ட நேரம் கிடைத்தால் நலமாயிருக்கும். ''இந்த சந்ததியார் தேவனுடைய வெளிப்பாட்டை இகழ்கின்றனர். (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை அநேக தடவைகள் தட்டுகிறார் - ஆசி) நாமோ அப்போஸ்தலர் நடந்த பாதையில் நடக்கிறோம்.'' அது உண்மை. தேவன்.... ''மற்றவர்களும் அப்படித்தான் கூறுகின்றனர்,'' என்று நீங்கள் சொல்லலாம். தேவன் அதை உறுதிப்படுத்துகிறாரா-? 223. 'என் கிரியைகள் என்னைக் குறித்து பேசாவிட்டால் அதை நானாகவே சொல்லுகிறேன் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் என் கிரியைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுத்தால், நீங்கள் கிரியைகளை விசுவாசியுங்கள் (பாருங்கள்-?). ஏனெனில் இதுவே நேரமாயுள்ளது,'' என்று இயேசு கூறினார். அவர் மேலும் "நாளை சூரியன் பிரகாசிக்குமோ அல்லது மப்பும் மந்தாரமும் சூழ்ந்திருக்குமோ என்று வானத்தின் சிகப்பு நிறத்தால் உங்களால் கண்டு கொள்ள முடிகிறதே. வானத்தின் தோற்றத்தை நீங்கள் நிதானித்து அறியும் போது காலத்தின் அடையாளங்களை உங்களால் நிதானித்து அறிய முடியவில்லையே. தேவனை நீங்கள் அறிந்திருந்தால் என் நாளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்'' என்றார். 224. அவர்களோ, ''நீ உன்னை அதிகமாக எண்ணிக் கொள்கிறாய். நீ உன்னை தேவனாக்கிக்கொள்கிறாய்,'' என்று கூறி அவரை சிலுவையில் அறைந்தனர். 225. இன்று நாம் காணும் பரிசுத்த ஆவியானவர் மூன்றாம் ஆள் அல்ல. அது தேவன் தாமே, தம்மைத் தாமே பிரதிபலித்துக் காண்பிக்கவிருக்கின்ற ஒரு ஜீவியத்தை பரிசுத்தப்படுத்தத் தக்கதாக, இயேசுகிறிஸ்தவின் இரத்தத்தினால், மானிட சரீரத்தில் வெளிப்பட்டார். ஆனால் அவர்களோ, வெளிப்படுத்தப்படும் அந்த வார்த்தையை சிலுவையில் அறைகின்றனர். உங்களுக்குப் புரிகிறதா-? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்) இன்று மனிதரிடையே வெளியாக்கப்பட்டு உறுதியாக்கப்பட்ட தேவனுடைய குமாரனையும் அவருடைய கிரியைகளை-யும் அவர்கள் மறுதலிப்பதனால் இந்நாட்களில் இவையாவும் நிகழும் என்று அவர் வார்த்தையில் கூறி இருந்த போதிலும், அவர்கள் கிறிஸ்துவை சிலுவையில் அறைகின்றனர். பாருங்கள்-? 226. அவர் அதே தேவனுடைய குமாரனாயிருப்பாரானால் உறுதிப்படுத்தலும் எவ்வித மாற்றமுமின்றி அதே விதமாக காணப்பட வேண்டும். ஏனெனில் யோ-14:12.ல் அவர் "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்று கூறியுள்ளார். எபி. 13:8, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.'' "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்து இருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' (யோவான் 15:7) ஆம், ஐயா-! 227. மிகவும் பக்தியுள்ளவர்கள் தான் இப்படிப்பட்ட காரியங்களை செய்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் புற-மதஸ்தர்கள் அல்ல. அக்காலத்தில் மிகவும் பக்தி வாய்ந்தவர்கள். இன்றைக்கும் பக்தியுள்ளவர்களே இப்படி செய்கின்றனர். அது தேவன் தாமே, தம்மைத் தாமே பிரதிபலித்துக் காண்பிக்க விருக்கின்ற ஒரு ஜீவியத்தை பரிசுத்தப்படுத்தத்தக்கதாக, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால், மானிட சரீரத்தில் வெளிப்பட்டார். பக்தியுள்ள ஜனங்கள் அதே சிலுவையில் அறைதல், அதே காரியம், இன்றைக்கும் நிகழ்கிறது. துரிதமாகப் பார்ப்போம். 228. அங்கே அவர்கள் அவரை சிலுவையிலறைந்தார்கள். அன்று-? நிச்சயமாக. அப்பொழுது அவர்கள் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து அதற்கு பதிலாக தங்கள் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டனர். 229. இன்றைக்கும் அதைத் தான் செய்து வருகிறார்கள் அல்லவா-? அவர் வார்த்தையாயிருந்தார். அவர்கள் வார்த்தையை புறக்கணித்தனர். இதை நீங்கள் காணத்தவற வேண்டாம். இந்த ஒரு காரியத்தை நீங்கள் காணத்தவறக் கூடாது என்று நான் விரும்புகிறேன். அவர் வார்த்தையாயிருந்தார். அவரை அவர்கள் புறக்கணித்த போது வார்த்தையை புறக்கணித்தனர். அவரைப் புறக்-கணித்த பின்பு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். இன்றைக்கும் அதையே அவர்கள் செய்துள்ளனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து அவர்களுடைய கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் உடைய சபையோரின் முன்னிலையில் பரிசுத்த ஆவியின் கிரியைகளை பகிரங்கமாகச் சிலுவையில் அறைந்து விட்டனர். இவர்கள் குற்றவாளிகள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் இவர்கள் மேல் நான் குற்றஞ்சாட்டுகிறேன். 230. 15-ஆண்டு காலமாக அவர் தேசமெங்கும் அசைந்து கொண்டிருப்பதை நான் கண்டு வருகிறேன். ஆயினும் அவர்கள் தங்கள் கோட்பாடுகளை பற்றி இருக்கின்றனர். இவர்கள் குற்றவாளிகள். இவர்கள் மாத்திரம் வார்த்தையை ஏற்றுக் கொண்டு இருந்தால், அது, பெந்தெகொஸ்தேயினர் உட்பட, எல்லா சபைகளையும் ஒரே சகோதரத்துவத்தில் ஒன்றாக இணைத்திருக்கும். அப்படி செய்வதற்கு பதிலாக அவர்கள் அதை புறக்கணித்து, பரியாசம் செய்து, அதற்கு வெவ்வேறு பெயர்கள் சூட்டினர். 231. இப்பொழுது அவர்கள் 'சபைகளின் சங்கம்' (Federation of Churches) என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, பிசாசின் திட்டத்தை அதன் மூலம் அமுலாக்கி, உள்ளே வரமுயன்று, ''நாங்கள் கொஞ்சம் எண்ணெய் வாங்கிக் கொள்கிறோம்'' என்கின்றனர். இன்றைக்கு அவர்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் குற்றத்தை அவர்கள் புரிந்துள்ளனர். தேவனுடைய நிபந்தனைகளின் பேரில் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.... உங்கள் நிபந்தனைகள் கிரியை செய்யாது. பாருங்கள்-? 232. அவர்களுடைய கோட்பாடுகளின் நிமித்தம் அவர்கள் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்தனர். இன்றைக்கும் அவர்கள் அதையே செய்கின்றனர். அவரே வார்த்தை (யோவான்-1) அவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று எபி.13:8 உரைக்கிறது. 233. அவரை அவர்கள் மறுபடியும் சிலுவையில் அறைகின்றனர். அப்படி செய்ய முடியும் என்று வேதம் கூறியுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா-? அந்த வேத பாகத்தைப் படிக்க எத்தனை பேர் விரும்புகிறீர்கள்-? எனக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் தருவீர்களா-? (சபையார் "ஆமென்'' என்கிறனர் - ஆசி) சரி. அந்தபாகத்திற்கு சற்று வேதத்தை திருப்புவோம். மறுபடியும் சிலுவையில் அறைதல். நாம் எபிரெயர் 6-ம் அதிகாரத்திற்கு சென்று படிப்போம். எபிரெயர் 6. நாம் தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைய முடியுமா என்று பார்ப்போம். "அவரை இரண்டாம் முறை சிலுவையில் அறைய முடியாது'' என்று நீங்கள் கூறலாம். 234. அது கூடுமா கூடாதா என்று பார்ப்போம். தேவனுடைய வார்த்தை உண்மையாயுள்ளது. அது சரியா-? (சபையார் ஆமென்'' என்கின்றனர்-ஆசி) எபிரெயர்.6:1. ''ஆகையால், கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங் களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த் தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.'' 235. பாருங்கள்-? இவைகள் தவிர்க்கப்பட முடியாதபடிக்கு மிகவும் முக்கியமானவை என்று நாம் அறிய வேண்டுமென்று பவுல் விரும்புகிறான். ஞானஸ்நானம், கைகளை வைக்குதல், உயிர்த்தெழுதல், இரண்டாம் வருகை போன்றவை. இவையாவும் நித்தியமானவை. அவை முற்றிலும் சாத்தியம். இப்பொழுது கவனியுங்கள்-! 236. இப்பொழுது கவனியுங்கள், ''ஏனெனில்...'' என்னுடன் சேர்ந்து இந்த ஒரு வசனத்தை படியுங்கள். என்னுடன் ஒரே ஒரு வசனத்தைப் படியுங்கள். 4-ம் வசனத்தை என்னுடன் படியுங்கள். (சகோ.பிரன்ஹாம் மற்றும் சபையோர், மூன்று வசனங்களை சேர்ந்து வாசிக்கின்றனர் - ஆசி) ''ஏனெனில், ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்தாவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தை யையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.'' 237. அது என்னுடைய வார்த்தையா-? அவருடையதா-? ஒரு மனிதன் தேவனை அறியும் அறிவில் வரும் போது, அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளவே இல்லை என்பது நினைவிருக்கட்டும். அவர்கள் எல்லைக்கோடு விசுவாசிகள். நாம் தேவனுடைய வார்த்தையின் அறிவைப் பெற்றுக் கொண்ட பின்பு (அந்த அறிவை நாம் படித்தும் பார்த்தும் பெற்று கொள்கிறோம்) அதை புறக் கணித்தால் நீங்கள் இரட்சிக்கப்படுவது என்பது கூடாத காரியம். அதை நீங்கள் இப்பொழுது படித்தீர்கள் அல்லவா-? பாருங்கள்-? அவர்கள் சத்தியத்தின் அறிவைப் பெற்றுக் கொண்ட பின்பு.... நீ அதை புரிந்து கொள்ள மாத்திரம் செய்கிறாய், அதை பெற்றுக் கொள்ளவில்லை. 238. அங்கு சென்ற விசுவாசிகளைப் போன்றது அது... இஸ்ரவேலரின் பிரயாணம் ஒரு உதாரணமாயிருக்கிறது. இந்த மூன்றாம் யாத்திரைக்கு மற்ற யாத்திரைகள் முன்னடையாளமாக அமைகின்றன. கவனியுங்கள்-! பின் நோக்கிப் பாருங்கள். ஒன்றை இப்பொழுது நான் காண்பிக்கட்டும். ஒரு நிமிடம் பொறுத்துக்கொள்ளுங்கள். அப்படி கூறினதற்காக மன்னிக்கவும். கவனியுங்கள். 239. இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொரு கோத்திரத்தில் ஒருவராக 12-பேரைத் தெரிந்து கொண்டு - ஸ்தாபனத் தலைவர்கள் - அவர்களை கர்த்தரால் வாக்குத் தத்தம் பண்ணப்பட்டிருந்த தேசத்தின் எல்லைக்கு அனுப்பி, வரப்போகிற நற்காரியங்களை அவர்களுக்குக் காண்பித்தார். அவர்கள் முறுமுறுத்துக் கொண்டு திரும்பி வந்து, ''நம்மால் அதை கைப்பற்ற முடியாது,'' என்றனர். 240. ஆனால் அந்த பன்னிருவரில் இருவர் - யோசுவா, காலேப் என்பவர்கள். வார்த்தையையே உற்று நோக்கி, 'இது நமக்குச் சொந்தமானது என்று தேவன் கூறினார். நாம் எளிதில் கைப்பற்றி விடலாம்'' என்றனர். அதுசரியா-? (சபையார் ''ஆமென்'' என்கிறனர் - ஆசி ) 241. அது என்ன-? எல்லைக்கோடு விசுவாசிகள். பாருங்கள்-? அவர்கள் ஒரு சபையில் பிறந்தனர். அவர்கள் ஜனங்களுக்குத் தலைவர்களாயிருந்தனர்; சொல்லப் போனால் அவர்கள் பேராயர்கள். தேவனுடைய வார்த்தை உண்மை என்று நிரூபிக்கப்பட்ட அந்த ஸ்தலத்திற்கு அவர்கள் சென்றனர். ''அதோ அந்த தேசம்,'' என்றனர். அவர்கள் அங்கு சென்ற போது, தேவன் வாக்குரைத்தபடியே தேசம் அங்கிருந்தது. அதற்கு முன்பு அவர்கள் அங்கு சென்றதில்லை. அது அங்குள்ளது என்று அவர்கள் முன்பு அறிந்திருக்கவுமில்லை. ஆனால் அவர்கள் அங்கு சென்றபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் அங்கு இருந்ததை அவர்கள் கண்டனர். ''அதோ இருக்கிறது-!'' என்றனர். காலேபும் யோசுவாவும் அந்த தேசத்திற்குள் சென்று திராட்சக்குலை ஒன்றை கொண்டு வந்து மற்றவர்களுக்குப் புசிக்கக் கொடுத்தனர். அவர்கள் தேசத்தின் நன்மையைப் புசித்த பிறகு, ''எங்களால் அதை கைப்பற்ற முடியாது. (பாருங்கள்-?). எங்களால் முடியவே முடியாது,'' என்றனர். 242. அது போன்ற கூட்டம் இயேசுகிறிஸ்துவின் காலத்திலும் இருந்தது. ''ரபீ, 'நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம்." பாருங்கள்-? எல்லைக்கோடு விசுவாசிகள்-! "நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை வேறு யாரும் செய்ய முடியாது. தேவன் அதில் இருக்கத்தான் வேண்டும் என்பதை நாங்கள் அடையாளங்கண்டு கொள்கிறோம்.'' அப்படியிருந்தும் அவர்கள் ஏன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை-? ஏன் அவர்களால் அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை-! எல்லைக்கோடு விசுவாசிகள்-! எல்லைக் கோடு விசுவாசிகள். 243. இப்பொழுது இந்த மூன்றாம் யாத்திரையின் போதும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர். அதே அடையாளம், அதே வெளிப்படுதல், அதே கிறிஸ்து, அதே பரிசுத்தாவி, அதே கிரியைகள், அதே தேவன், அதே செய்தி, அப்படியிருந்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி செய்தால் தங்கள் ஐக்கியச் சீட்டை அவர்கள் இழக்க நேரிடும். அது என்ன-? சாத்தியத்தைக் குறித்த அறிவை அவர்கள் பெற்றிருக்கின்றனர். அவர்கள் அதை கண்டுள்ளதாக பத்திரிக்கைகள் சாட்சி பகரும். புகைப்படங்கள், செய்திதாள்கள், அத்தாட்சிகள், மரித்தோரை உயிரோடெழுப்பினதாக நற்சாட்சி பத்திரங்கள், வியாதியஸ்தரைப் பற்றிய மருத்துவர்களின் பிரகடனங்கள். அது அவர் தான் என்று அவர்கள் நிச்சயம் கூறவேண்டும். முன்னுரைத்தல்கள் - இத்தனை ஆண்டுகளாக ஒன்று கூட தவறாகப் போனதில்லை. அவை கூறினபடியே பிழையின்றி நிறைவேறின. அது தேவனென்று கூறாமல் அவர்களால் இருக்க முடியாது. அப்படியிருந்தும் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 244. சிக்காகோவிலுள்ள அந்த போதகர் கூட்டம் - ஏறக்குறைய முன்னூறு பேர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வருவதாயிருந்தது. அவர்கள் இப்பொழுது எங்கே-? அதற்காக அவர்கள் செலுத்த வேண்டிய கிரயம் மிகப்பெரியது. எனவே அவர்களால் அதை செய்ய முடியாது. அது என்ன-? வேதம் கூறுகின்றது, அவர்கள் அதைப் புறக்கணிக்கும் போது, அவர்கள் என்ன செய்கின்றனர்-? அவர்கள் இரக்கத்திற்கும் நியாயத் தீர்ப்புக்கும் இடையே தங்களைப் பிரித்துக் கொள்கின்றனர். ''ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் (அவர்கள் அதை காணும்படி தருணம் அளிக்கப் பட்டது), சத்தியத்தின் அறிவைப் பெற்றிருந்தும், தேவனுடைய நல் வார்த்தையை ருசி பார்த்தும், அதை மறுதலித்தால், அவர்களை மறுபடியும் புதுப்பித்து, ''ஆம், நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று அவர்களைக் கூற வைப்பது கூடாத காரியம்...'' 245. பிரஸ்பிடேரியன்களாகிய நீங்கள், மெதோடிஸ்டுகளாகிய நீங்கள், பாப்டிஸ்டுகள், லுத்தரன்கள், முழு சுவிசேஷ வர்த்தகர் - நீங்கள் அனைவரும் உள்ளே வருவதாகக் கூறிக் கொண்டு, செய்தியைப் புறக்கணித்து விட்டீர்கள். உங்கள் சபைகள்... அதிலுள்ள சில தனிப்பட்ட நபர்கள் உள்ளே வரலாம், ஆனால் முழு சபையும் அல்ல. அதனுள் வரவேண்டுமானால், உங்கள் ஸ்தாபனத்தை விட்டு நீங்கள் வெளிவரவேண்டும். பாருங்கள்-? அது உண்மை. தனிப்பட்ட நபர்கள் உள்ளே வர முடியும். 246. ஆனால் பிரஸ்பிடேரியன் சபை முழுவதுமே பரிசுத்தாவியைப் பெற்று, அவர்கள் தங்கள் பிரகடனங்களை உதறித் தள்ளி விட்டு உள்ளே வருவார்கள் என்று நீங்கள் நினைத்தால்... அப்படி நினைக்கவே வேண்டாம். மெதோடிஸ்டு-கள் அப்படி செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா-? அவர்கள் செய்யவே மாட்டார்கள். திரித்துவக்காரர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை ஏற்றுக் கொண்டு, அவர்கள் ஒவ்வொருவரும் அந்த நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா-? அவர்கள் செய்யவே மாட்டார்கள். ஆனால் தனிப்பட்ட நபர்கள் அதனின்று வெளி வந்து அப்படி செய்வார்கள். அது உண்மை. அது அவருடைய வருகையின் அடையாளமாய் உள்ளது. சத்தியத்தைக் கண்டும் அதை அவர்களுடைய சங்கங்களில் புறக்கணித்த சபைகளை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். 247. அப்படியானால் அவர்கள் இயேசு கிறிஸ்துவை சிலுவையிலே அறைந்த குற்றத்தை செய்தவர்களாயிருக்கின்றனர். தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறேன். ''சகோ.பிரன்ஹாமே, அவர்கள் மேல் நீங்கள் எப்படி குற்றஞ்சாட்டலாம்-?' இந்த கடைசி நாட்களில் தேவன் தெளிவாக தம்மை தம்முடைய வார்த்தையில் அடையாளம் காண்பித்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று தம்மை வெளிப்படுத்தின பின்பும் அவர்கள் வெறுப்பாக அதை புறக்கணித்த காரணத்தால், அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறேன். நீங்கள் பரிசுத்தாவியைத் தூஷிப்பதன் மூலம் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த குற்றத்தைப் புரிந்தவர்களாய் இருக்கின்றீர்கள். அது உண்மை. 248. உங்களை எபிரெயர் 10-க்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். அது கூடாத காரியம் மாத்திரமல்ல, அது ஒருக்காலும் முடியாது என்று வேதம் கூறுகிறது ...உங்களை தேவனிடமிருந்து அது நித்திய காலமாய் பிரித்து விடுகிறது. நீங்கள் பரிசுத்தாவியைப் புறக்கணித்து அதை கேலி செய்தால் நீங்கள் தேவனுடைய சமுகத்தில் வரவே முடியாது. 249. இப்பொழுது, பாருங்கள்-? நீங்கள் வார்த்தையை ருசி பார்த்தீர்கள். பாருங்கள்-? எல்லைக்கோடு விசுவாசிகள். ''ஓ, அவர்கள் விசுவாசிகள் அல்ல' என்று நீங்கள் கூறலாம். 250. அவர்கள் விசுவாசிகள் அல்லது விசுவாசிகள் என்று அழைத்துக் கொண்டனர். ஆனால் வார்த்தைக்கு வரும் போது; இஸ்ரவேல் ஜனங்கள் இரத்தத்தின் கீழ் வெளிவந்தனர். மோசேயின் அடையாளங்களின் கீழ் அவர்கள் வெளியே வந்தனர். அந்த அடையாளங்கள் கிரியை செய்வதை அவர்கள் கண்டனர். தேவன், ''நான் உங்களை அங்கு கொண்டு செல்வேன்,'' என்றார். 251. ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை நிறைவேறும் சமயம் நெருங்கின போது அவர்கள் என்ன கூறினர்-? ''ஓ, எங்களால் முடியாது" பாருங்கள்-? 252. தேவன் வாக்குரைத்தபடியே அந்த தேசம் இருக்கிறது என்பதை நிரூபிக்க அவர்கள் திராட்ச குலையுடன் வந்தனர். தேவனுடைய வார்த்தை உண்மையாய் இருந்தது. தேவன், ''அதை உங்களுக்குத் தருவேன்,'' என்று வாக்களித்தார். 253. ஆனால் சூழ்நிலைகள். ''ஓ, அவர்களுக்கு முன்னால் நாங்கள் வெட்டுக் கிளிகளைப் போல் இருக்கிறோம். எங்களால் முடியாது,'' என்றனர். சூழ்நிலை என்னவாயிருந்த போதிலும் ... 254. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பழைய கப்பலின் வெளிப்புறம் (hull) கூடாரமாக இருந்த போது, ஒருவர் உள்ளே நடந்து வந்து, "பில்லி, இப்படிப்பட்ட செய்தியை நீ நான்கு தூண்களுக்கு மாத்திரமே பிரசங்கம் செய்யும் ஒரு நாள் வரும்,'' என்றார். 255. 'அப்படியானால் நான் நான்கு தூண்களுக்கு மாத்திரம் பிரசங்கம் செய்வேன். ஏனெனில் தேவன் இந்த தூண்களிலிருந்து ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்,'' என்றேன். ஆம் ஐயா, அது உண்மை. நான் அவரிடம், ''அது தவறென்று நிரூபிக்க உம்மிடம் ஏதாகிலும் இருந்தால் அதை தெரியப்படுத்தும்,'' என்றேன். காகம் போல கரைந்து கொண்டேயிருக்க விரும்புகின்றனர், ஆனால் அதை நிரூபிக்க வேண்டிய கட்டம் வரும் போது, அது வித்தியாசமாகிவிடுகிறது. ஆம், அது தான் வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. 256. அவர்கள் தங்கள் கோட்பாடுகளினால் அவரை மறுபடியும் சிலுவையில் அறைகிறார்கள். எபிரெயர் 6-ம் அதிகாரம். நமக்கு நேரமிருந்தால் அதை படித்துக் கொண்டே போகலாம். ஒரு வேத வாக்கியத்தை இங்கு குறித்து வைத்திருக்கிறேன். அது அங்கே இருக்கிறது, எபிரெயர் 6-ம் அதிகாரம் - ஒரு தரம் பிரகாசிப்பிக்கப் பட்டும், பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர் களைப் புதுப்பிக்கிறது கூடாத காரியம்... மேலும் படிக்க நமக்கு நேரமில்லை. வேறொரு வேதவாக்கியத்தை நீங்கள் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இதை கவனியுங்கள்-! அவர்கள் தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைகிறார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்-? அதை ருசிபார்த்து, அது சத்தியமென்று அறிந்த பின்பும் அதைப் புறக்கணித்து மறுதலிக்கின்றனர். அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். 257. அதைத் தான் இந்த தேசம் செய்துள்ளது. இந்த ஜனங்கள் அதைத் தான் செய்துள்ளனர். இந்த சபைகள் அதைத்தான் செய்துள்ளன. அவர்கள் அதை புறக்கணித்து செய்தியை சிலுவையிலே அறைந்து விட்டனர். சத்தியம் ஜனங்களுக்கு கிடைக்காமலிருக்க, அதை சிலுவையில் அறைந்து விட்டனர். அவர்கள் இயேசுவை என்ன செய்தனர்-? அவரை அவமானப்படுத்தி, நிர்வாணம் ஆக்கி, ஜீவாதிபதியை சிலுவையில் தொங்கவிட்டு, ஆணிகளால் கடாவினர். இன்றைக்கும் தங்கள் பிரமாணங்களைக் கொண்டு அவர்கள் அதே காரியத்தைத் தான் செய்கின்றனர்-! அதே காரியத்தை தான் அவர்கள் செய்கின்றனர். காரியங்களை எடுத்துப் போட்டு விட்டனர், நல்ல காரியங்களை மற்றும் சுவிசேஷ வஸ்திரத்தை அவர்கள் களைந்து அதை நிர்வாணமாக்கி, அதை வேறெங்கோ பொருத்தி, அவரைச் சிலுவையிலே தொங்க விட்டனர். ஓ, என்னே-! ஏன்-? 258. அங்கே அவர்கள் சிலுவையில் அறைந்தார்கள்... அவரை, மிகவும் விலையேறப் பெற்ற நபரை. அவர்கள் ஏன் அப்படி செய்தனர்-? அவர்கள் அவரை அறியவில்லை. இன்றைக்கு அவர்கள் ஏன் அப்படி செய்கின்றனர்-? இது தான் சத்தியம் என்று அவர்கள் அறியாதிருக்கின்றனர். சத்தியத்தைக் குறித்து அறியாதவர்களாக அவர்கள் ஊமையராயும் குருடராயும் இருக்கின்ற- னர். இது சத்தியம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அது தான் காரணம். அவர்களுடைய கோட்பாடுகளும் பாரம்பரியமும் அவர்களை வார்த்தையி- னின்று முற்றிலுமாக அகற்றிவிட்டன. 259. நான் முடிக்கும் முன்பு, இங்குள்ள நீங்கள் உங்கள் கவனத்தைச் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இங்கு வெப்பம் அதிகமாயுள்ளதை உணருகிறேன். எனக்கும் வெப்பம் அதிகமாயுள்ளது. 260. ஆனால், ஓ சகோதரனே, இந்த வார்த்தையை நீ பற்றி கொண்டால் அது உனக்கு ஜீவனாயிருக்கும். கவனியுங்கள்-! இனி நிகழப்போகும் ஒன்றைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஏதோ ஒன்று ஏற்கெனவே இங்கே நம்முடன் இருந்து நம்மிடையே கிரியை நடப்பித்துக் கொண்டு இருக்கின்றதே. இனி இருக்கப் போகும் ஒன்றல்ல; ஏற்கெனவே இருக்கின்ற அந்த எதோ ஒன்று. அவர் என்ன செய்தார், என்ன செய்யப்போகிறார் என்று நாம் சாட்சியுரைக்கவில்லை. அவர் தற்பொழுது செய்து கொண்டிருப்பவை-களையே நாம் கூறுகிறோம். பாருங்கள்-? இது நம்முடைய மணி நேரம். 261. ஒருக்கால் எடுத்துக் கொள்ளப்படுதலைக் காண நாம் உயிர் வாழாமல் இருக்கலாம். நான் இன்று மரிக்கலாம்; நீங்கள் இன்று மரிக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் எடுத்துக்கொள்ளப்படுதல் வரவிருக்கின்றது. அது நிகழும் போது, நாம் அதில் இருப்போம். கவலைப்பட வேண்டாம். காலங்கள் தோறும் இதை விசுவாசித்து இதை எதிர் நோக்கியிருந்த மற்றவரும் கூட அதில் இருப்பார்கள். அவர்களுடைய நாளின் வெளிச்சத்தில் அவர்கள் நடந்தனர். 262. இன்று நமக்கு வெளிச்சம் இதோ உள்ளது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். உங்கள் கோட்பாடுகளை விட்டு விலகி இந்த வார்த்தையை விசுவாசியுங்கள். இது சத்தியம்; (சகோதரன் பிரான்ஹாம் தம்முடைய வேதாகமத்தை தட்டுகிறார் - ஆசி) வசனமே சத்தியம். 'என் வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது'' என்று இயேசு கூறினார். நீங்கள் ஜீவனைப் புறக்கணித்தால், ஜீவனை எப்படி பெற்றுக் கொள்வீர்கள்-? நீங்கள் மரணமாயுள்ள கோட்பாடுகளையும், ஜீவ வார்த்தை-யையும் ஒரே நேரத்தில் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்-? மரணத்தை ஏற்றுக் கொள்ள நீங்கள் ஜீவவார்த்தையைப் புறக்கணிக்கப் போகிறீர்களா என்ன-? இவ் விரண்டையும் ஒரே நேரத்தில் நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்-? உங்களால் முடியாது. எந்த மனிதனுடைய வார்த்தையும் பொய், ஒவ்வொரு கோட்பாடும் பொய். தேவனுடைய வார்த்தையே சத்தியம். 263. புதிய ஏற்பாட்டில் ஒருவராவது பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றதாக யாராவது (இந்த ஒலிநாடா உலகம் முழுவதும் செல்கின்றது என்று எனக்குத் தெரியும்) - எந்த மனிதனாவது, பேராயராவது என் படிக்கும் அறைக்கோ அல்லது இந்த சபையோரின் முன்னிலையிலோ சுட்டிக்காட்டும்படி நான் சவால் விடுகிறேன். ஞானஸ்நானம் பெற்றவர் அனைவருமே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் தான் பெற்றார்கள் என்றும், வேறு விதமாக ஞானஸ்நானம் பெற்றவர்கள், பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ள, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருந்தது என்றும் நான் காண்பிக்கத் தயாராயிருக்கிறேன். 264. அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்-? பிரமாணங்களில் நிலை கொண்டு இருக்கப் போகிறீர்களா-? உங்கள் போதகங்களில் இருந்து அப்படியே மரிக்கப் போகிறீர்களா-? அப்படியானால் நீங்கள் குற்றவாளிகளாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஜீவாதிபதியை - ஜீவ வார்த்தையை - உங்கள் அக்கிரமக் கைகளினால் ஜனங்களின் முன்னிலையில் சிலுவையில் அறைந்து கொன்று போட்டீர்கள். 265. அவர்கள் என்ன செய்தனர்-? அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. இன்றைக்கு ஜனங்கள் அறியாமையின் காரணமாக வழித் தவறி சென்று கொண்டிருக்கின்றனர். இது சத்தியம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இது ஏதோ ஒரு தத்துவம் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆவிக்குரிய வெளிப்பாடு கிடைக்க அவர்கள் ஆழமாகத் தோண்டிப்பார்ப்பதில்லை. அவர்கள் வேண்டிய அளவுக்கு ஜெபம் செய்வதில்லை. அவர்கள் வேண்டிய அளவுக்கு தேவனை நோக்கிக் கூப்பிடுவதில்லை. 266. அவர்கள் அதை லேசாக எடுத்துக் கொள்கின்றனர். ''ஓ, நல்லது, தேவன் ஒருவர் இருக்கின்றார் என்று நான் நம்புகிறேன், நிச்சயமாக-!'' என்று இலேசாக கூறுகின்றனர். பிசாசும் கூட அப்படி விசுவாசிக்கிறான். விசுவாசிப்பதாக உரிமை கோரும் சில பேர்களைக் காட்டிலும் பிசாசு அதிகமாக விசுவாசிக்கி-றான். பிசாசு விசுவாசித்து நடுங்குகின்றான். ஜனங்கள் வெறுமனே விசுவாசிக் கின்றனர். ஆனால் பிசாசோ விசுவாசித்து நடுங்குகின்றான். ஏனெனில் அவனுடைய நியாயத் தீர்ப்பு வரப்போகிறதென்று அவனுக்குத் தெரியும். ஆனால் ஜனங்களோ அதை வெறுமனே விசுவாசித்து, வரப் போகும் நியாயத் தீர்ப்பைக் குறித்து கவலையற்றவர்களாய் இருக்கின்றனர். 267. அவரைச் சிலுவையில் அறைந்த குற்றத்தை அவர்கள் புரிந்துள்ளனர். நிச்சயமாக-! தொடக்கத்தில் அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்த அதே வார்த்தையைக் கொண்டு இந்த சந்ததியாரை நான் குற்றவாளிகளாகத் தீர்த்து அவர்கள் பேரில் குற்றம் சாட்டுகிறேன். அது உண்மை. "என்னை யார் குற்றப்படுத்தக் கூடும்-?'' என்று இயேசு கேட்டார். அவர் மாம்சத்தில் வெளிப் பட்ட வார்த்தையாயிருந்தார். இன்றைக்கும் அதே வார்த்தை மாம்சமாகி உள்ளது. 268. அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் பேதுரு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டின் போது... அதை சற்று படிப்போம். அவர்கள் செய்ததை பேதுரு கண்டபோது, ஆவியானவர்... பாருங்கள், பேதுரு அவர்கள் செய்ததை கண்ட போது, கிறிஸ்துவுக்காக வாதாடுகிறான். சுவிசேஷங்கள் கூறினதை நான் ஆதரிக்கிறேன். நான்... வார்த்தையாயிருந்த கிறிஸ்து என்னும் மனிதனைக் கொன்றதாக பேதுரு குற்றம் சாட்டுகிறான். மனிதனின் மூலம் வெளிப்பட்ட வார்த்தையை கொல்ல முயல்வதற்காக இந்த சந்ததியின் மேல் நான் குற்றம் சாட்டுகிறேன். பேதுரு என்ன கூறினான் என்று கவனியுங்கள். அவனுடைய நீதியுள்ள கோபம் அதிகரித்திருக்கும். அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம் 22-ம் வசனத்தில் பேதுரு கூறுவதை நாம் கவனித்துக் கேட்போம்: ''இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களை-யும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.'' 269. வ்யூ-! அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்-! இதை கவனியுங்கள். இஸ்ரவேலரே..... ராஜகுமாரரே, சபையோரே, பரிசுத்த மனிதர்களே, ஆசாரியர்களே, தேவனுடைய மனிதர்கள் என்று கருதப்படுபவர்களே. நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நசரேயனாகிய இயேசுவை தேவன் அங்கீகரித்து உங்கள் மத்தியில் வெளிப்படுத்தினார். 270. இப்பொழுது நான் இக்காலத்திலுள்ள குருமார்களிடமும் ஜனங்களிடமும் இதை கூறுகிறேன். நசரேயனாகிய இயேசு இப்பொழுது பரிசுத்த ஆவியானர் என்கிற நபருக்குள், இங்கே அவர் இருக்கிறார். அது அவருக்குள் இருந்த ஜீவன். அவர் ஜனங்களின் மூலம் கிரியை செய்து, அவர் செய்யும் அடையாளங்களின் மூலமாகவும் அற்புதங்களின் மூலமாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இங்கே சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானம் அதை அடையாளம் கண்டு கொண்டு உள்ளது. மரித்து போன ஜனங்கள் இப்பொழுது நம் மத்தியில் உயிருடன் இருக்கின்றனர். புற்று நோய் ஜனங்களை தின்று போட்டது. அப்படிப்பட்டவர்கள் இன்று சுகமடைந்துள்ளனர். குருடர்கள் இன்று காண்கி-றார்கள், சப்பாணிகள் இன்று நடக்கிறார்கள். அவர் நசரேயனாகிய இயேசு-! ''அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும்...... (அவருடைய காலத்துக்கு அவர் முன் குறிக்கப்பட்டிருந்தார்) .....ஒப்புக் கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினால் சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தீர்கள்'' 271. அது குற்றச்சாட்டா இல்லையா-? அவன், யார் பேரில் குற்றம் சாட்டுகிறான்-? சனகரீப் சங்கத்தின் பேரில். 272. இன்று காலை நான் சபைகளின் சங்கத்தின் பேரில் குற்றம் சாட்டுகிறேன். பெந்தெகொஸ்தேயினரைக் குற்றஞ்சாட்டுகிறேன்; பிரஸ்பிடேரியன்களை, பாப்டிஸ்டுகளை, உலகிலுள்ள ஸ்தாபனங்கள் அனைத்தையும் குற்றம் சாட்டுகிறேன். உங்களுடைய அக்கிரமமான, சுயநலமுள்ள பேராசையினால், நீங்கள் ஜீவவார்த்தையை சிலுவையில் அறைந்து கொன்று அதை தூஷித்து, அதை மூடபக்தி வைராக்கியமென அழைத்தீர்கள். ஆனால் தேவனோ அதை நம் மத்தியில் எழுப்பி, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை நிரூபித்து விட்டார். இந்த சந்ததியை நான் குற்றம் சாட்டுகிறேன். 273. தேவன் தாம் உயிரோடிருக்கிறார் என்பதை நிரூபித்து விட்டார். அது அவருடைய வார்த்தை என்பதை அவர் நிரூபித்து விட்டார். இன்று கோட்பாடுகளும் பிரமாணங்களும் தவிர வேறென்ன உங்களிடம் உள்ளது-? ஜீவனுள்ள தேவனை உங்களால் எங்கு காண்பிக்க முடியும்-? உங்களுக்கு இவைகளை அளித்திருக்கக்கூடிய ஜீவவார்த்தையை நீங்கள் புறக்கணித்து விட்டீர்கள், ஆம், ஐயா-! ஓ, நாம் எந்த மணி நேரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்-! வ்யூ-! அதுவே-! ''நீங்கள் அக்கிரமக்காரருடைய கைகளினாலே அவரை சிலுவையில் ஆணியடித்து கொலை செய்தீர்கள்'' என்று பேதுரு கூறினான். ''தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்படக் கூடாதிருந்தது.'' 274. உங்கள் கோட்பாடுகளின் காரணமாகவும், உங்கள் ஸ்தாபனங்களின் காரணமாகவும், நீங்கள் தேவ பக்தியின் வேஷத்தை தரித்துக் கொண்டு அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை மறுதலிக்கிறீர்கள். 275. ஆனால் அந்த மணி நேரம் வந்துவிட்டது. கடைசி நாட்கள் இங்குள்ளன. மல்கியா 4-ன்படி அவர் கடைசி நாட்களில் எழுப்பி ஜனங்களின் இருதயங்களை பிதாக்களின் பெந்தெகொஸ்தே விசுவாசத்திற்கும் மூல ஆசீர்வாதங்களுக்கும் திருப்புவாரென்று தேவன் வாக்களித்துள்ளார். நீங்கள் அதை மறுக்கவே முடியாது. உங்களால் அதை சகிக்கவும் முடியவில்லை. 276. உங்களை நான் குற்றவாளிகளாகத் தீர்த்து தேவனுடைய முன்னிலையில் உங்களுக்கு சவால் விட்டு உங்களை குற்றம் சாட்டுகிறேன். அக்கிரமக்கார் உடைய சுயநலமுள்ள ஸ்தாபனக் கொள்கைகளினால் தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்கு முன்னால் நீங்கள் சிலுவையில் அறைந்து விட்டீர்கள். நீங்கள் குற்றவாளிகள் என்றும், நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தமாய் உள்ளீர்கள் என்றும் கூறுகிறேன். ஆமென். ஆம், ஐயா-! 277. பேதுரு கூறினதையே நானும் கூறுகிறேன். அவனுடைய சந்ததி மனந்திரும்ப வேண்டுமென்று அவன் எச்சரித்தான். நானும் இந்த சந்ததி மனந்திரும்ப வேண்டுமென்றும் வார்த்தையின் மூல சத்தியத்திற்கு திரும்ப வேண்டுமென்றும் எச்சரிக்கிறேன். உங்கள் பிதாக்களின் விசுவாசத்திற்கு திரும்புங்கள். பரிசுத்தாவியிடம் திரும்புங்கள். தேவன் அதை ஒருக்காலும் மாற்ற முடியாது. ஆம், ஐயா-! 278. ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்,'' என்று தேவன் கூறின பின்பு, நித்திய காலத்திற்கும் அவர் அதில் நிலைத்திருக்க வேண்டியவராயிருக்கிறார். அது அவருடைய வார்த்தை. 279. நீங்கள், ''கை குலுக்குங்கள்,'' அப்பம் பிட்குதலில் பங்கு கொள்ளுங்கள்'' என்பதைப் போன்ற சில கோட்பாடுகளை அனுசரிக்கக் கூறும் போது, எந்த மனிதனும் - ஒரு குடிகாரனும் கூட அல்லது ஒரு அவிசுவாசி அல்லது போலியான ஒருவன் அல்லது வேசி அதை செய்ய முடியும். அப்பம் பிட்குதல் போன்ற ஒழுங்குகளை எவருமே கடை பிடிக்க முடியும். 280. ஆனால் இயேசுவோ இது தான் அடையாளம் என்று கூறியுள்ளார். "எல்லா சந்ததிகளிலும் விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் ('ஒருக்கால் நடக்கும்' என்றல்ல, நிச்சயமாய் நடக்கும்) ஆங்கிலத்தில் "shall follow" -அதாவது நிச்சயமாய் பின் தொடரும் என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டு உள்ளது - தமிழாக்கியோன்). என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக் கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். வியாதியஸ்தரை சொஸ்தமாக்குங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள்.'' 281. பணம் சம்பாதிக்கும் பெரிய பெரிய திட்டங்களையெல்லாம் இன்று நாம் காண்கிறோம். அவர்கள் எல்லோரும் நியாயத்தீர்ப்பை பெறப் போகின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆம், ஐயா-! ஓ, என்னே-! 282. இப்பொழுது நாம் பார்ப்போம். ஆம் ஐயா-! மனந்திரும்பும்படி அவர்களை அழைத்தல். இப்பொழுது என் குற்றச்சாட்டு. 283. புதிய கல்வாரியென்று அழைக்கப்படும் அந்த சபை, மகா பரிசுத்த ஸ்தலங்கள், பெரிய பிரசங்க பீடங்கள், கத்தோலிக்க பீடங்கள் (altars) தான் பிரசங்க பீடங்கள் (pulpits) என்று அழைக்கப்படுகின்றது. மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேடிரியன்கள், பாப்டிஸ்டுகள், லுத்தரன்கள், பெந்தெகொஸ்தேயினர் எல்லாமே மகா பரிசுத்த ஸ்தலங்கள். (சகோ,பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஆறு தடவை தட்டகிறார் - ஆசி) ஆனால் அங்குதான் கடூரமான ஈட்டிக்குத்தை அவர் பெறுகிறார்--புது கல்வாரியில். அது எங்கு காணப்படுகின்றது-? மகா பரிசுத்த ஸ்தலங்களில் - சபை. 284. அவர் யாரால் சிலுவையில் அறையப்படுகிறார்-? மேய்ப்பர்களால், மாய்மாலக்காரரே, உங்களுக்கு இதைவிட நன்றாகத் தெரியும். நான் உங்கள் பேரில் கோபமடையவில்லை. ஆனால் எனக்குள்ள ஏதோ ஒன்று பொங்கி வருகிறது. தேவன் உங்கள் மத்தியில் முழுவதுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு விட்டார். 285. எந்த இடத்தில் அவருடைய விலாவில் ஈட்டியால் குத்தினார்கள்-? அவருக்கு எங்கு ஈட்டி குத்து ஏற்பட்டன-? கல்வாரியில். இன்றைக்கு அவர் எங்கு ஈட்டிக்குத்துகளைப் பெறுகிறார்-? பிரசங்க பீடத்தில். அது எங்கிருந்து அப்பொழுது வந்தது-? எருசலேமிலிருந்து. இன்று அது எங்கிருந்து வருகிறது-? அவரை நேசிப்பதாக கூறிக்கொள்ளும் ஸ்தாபனங்களிலிருந்து. இன்றைக்கும் அதைத்தான் அவர்கள் செய்கின்றனர். அவர்கள் தான் அவரை ஈட்டியால் குத்துகிறார்கள். இது இரண்டாம் கல்வாரி. அங்கு அவர் வார்த்தைக்கு விரோத-மான ஈட்டிக் குத்துகளைப் பெறுகிறார்... அது தான் அவரை ஈட்டியால் குத்துகிறது. அவர் யார்-? அவர் வார்த்தை. அவர் எங்கு கடுமையான ஈட்டிகுத்துகளை பெறுகிறார்-? பரிசுத்த ஸ்தலங்களாகிய பிரசங்க பீடங்களில் அப்பொழுது இருந்தது போலவே. 286. இந்த சந்ததியை குற்றம் சாட்டுவதற்கு எனக்கு அதிகார முண்டு. (சகோ.பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஐந்து தடவை தட்டுகிறார் - ஆசி ) இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஊழியன் என்னும் நிலையில் அவருடைய அடையாளங்களைக் கொண்டவனாய் அவர் தேவன் என்று நிரூபிக்க எனக்கு அதை செய்ய அதிகாரமுண்டு. இந்த சந்ததியின் மேல் அந்த குற்றத்தை சுமத்த எனக்கு அதிகாரமுண்டு. ஏனெனில் அவர் பெறும் கடுமை-யான ஈட்டிக்குத்துகள் அனைத்தும் பிரசங்க பீடங்களிலிருந்து வருகின்றன. அங்கிருந்துதான் அவர்கள் குறை கூறி; 'அதை கேட்கப் போகாதீர்கள். அது பிசாசினால் உண்டானது,'' என்கின்றனர். அவரை, அவர்கள் எங்கு நேசிக்க வேண்டுமோ அங்கிருந்து. 287. என்னென்ன அடையாளங்கள் நடக்கும் என்று இயேசு கூறினாரோ... தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத் திலும் கருக்கானதாயும் (வார்த்தை) இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அது பிசாசென்று அழைக்கப்படுகிறது. எங்கிருந்து-? பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து, பிரசங்க பீடங்களிலிருந்து. 288. ஓ, தேவனே, அவரால் எப்படி கீழே நோக்கி பார்க்க முடியும்-! இரக்கம், அவ்வளவு தான், கிருபை, நாம் நியாயத் தீர்ப்பை பெறுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. நாம் ஏற்கனவே அங்கிருக்கிறோம். 289. அதை யோசித்துப் பாருங்கள். அவர் பெறும் கடுமையான ஈட்டி குத்துக்கள் பிரசங்க பீடத்திலிருந்து வருகின்றன. அங்கு தான் அவருடைய புதிய கல்வாரி உள்ளது. அவர்கள் அவரை - வார்த்தை - பிரசங்க பீடத்தில் சிலுவையில் அறைகின்றனர்-? அது சரி. எவ்விதமாக அதைச் செய்கின்றனர்-? தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்களாய் - அது முற்றிலும் உண்மை. 290. கூட்டத்திலிருந்து பரியாசக்காரர்களால் அவர் முடி சூடப்பட்டார். அவருக்கு ஒரு புதிய முட்கிரீடம் சூடப்பட்டுள்ளது. பிரசங்க பீடத்திலிருந்து அவர் ஈட்டியால் குத்தப்படுகிறார், பரியாசக்காரரால் அவர் முள்முடி சூடப்படுகிறார். அவர் மறுபடியுமாக சிலுவையில் அறையப்படுகிறாரா-? மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பிரமாணங்கள், அவருடைய வார்த்தைக்கு எதிராக இருக்கின்ற ஸ்தாபன போதகர்களால் நிர்வாணமாக்கப்படுகிறார். அவர்கள் அவரை வாரினால் அடித்து அவமானப்படுத்துகின்றர். 291. ''வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்'' என்று இயேசு கூறினார். வீணாய் அந்த ஆராதனை எவ்வித பலனையும் தருவதில்லை. அவர்கள் யாரை ஆராதனை செய்கின்றனர்-? முதலாம் முறையாக சிலுவையில் அறைந்த அதே தேவனை அக்காலத்தவர் ஆராதித்தனர். ஆனால் அது வீணான ஆராதனையாய் இருந்தது. இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. வீணாய் அவர்கள் ஸ்தாபனங்களைக் கட்டுகின்றனர். வீணாய் அவர்கள் வேத பள்ளிகளைக் கட்டுகின்றனர். வீணாய் அவர்கள் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு, மனிதருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து தேவனுடைய வார்த்தையை மறுதலிக்கின்றனர். அவருடைய வார்த்தைக்குப் பதிலாக மனிதருடைய கற்பனைகளை அவர்கள் போதிக்கும் காரணத்தால், ஜீவாதிபதியை சிலுவையில் அறைந்த குற்றத்திற்கு ஆளாகின்றனர். ''வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்'' நிர்வாணமாக்கப்பட்டு, குத்தப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டவராக இருந்தார். 292. நீண்ட கூந்தல் வளர்த்த பெண்கள் தெருக்களில் போகும் போது, மற்றவர்கள் அவர்களைப் பார்த்து, ''அவள் பழமை நாகரீகக்காரி அல்லவா-?'' என்று கேலி செய்கின்றனர். அவர்கள் பரியாசக்காரர். உங்கள் தலைமயிர் தான் நீங்கள் அணியும் கிரீடம். அது உங்கள் மகிமை என்று தேவன் அழைக்கிறார். அதை பெருமையுடன் அணிந்து கொள்ளுங்கள். அல்லேலூயா-! (ச,பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை மூன்று தடவை தட்டுகிறார் - ஆசி) தேவனுக்காக ஒரு முட்கிரீடம் அணிவதைப் போல் அதை பெருமையுடன் அணிந்து கொள்ளுங்கள். வெட்கப்படாதீர்கள். தலைமயிரை வளரவிடும்படி அவர் கூறியுள்ளார். இந்த யேசபேல்கள் இன்று என்ன கூறினாலும், இந்த வஞ்சகர்கள் - இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் - பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு என்ன கூறினாலும், அதை பெருமையுடன் அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியுள்ளார். உங்கள் தலை மயிரை கத்தரிக்காமல் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். 293. மறுபடியுமாக அவர் பரியாசக்காரரால் முள்முடி சூட்டப்படுகிறார், பிரசங்கப் பீடத்திலிருந்து கோட்பாடுகளினால் விலாவில் குத்தப்படுகிறார். 294. அவருக்கு இப்பொழுது ஒரு புதிய கொல்கதா உள்ளது. அவரை அவர்கள் எங்கே கொண்டு சென்றனர்-? அங்கியணிந்த பாடகர் குழுவும், குட்டை கால் சட்டையணிந்த பெண்களும், தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, முகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்டு, தேவ தூதர்களைப் போல் பாடகர் குழுவில் திறன்பட பாடும் இவர்கள்; அது தான் அவருடைய புதிய கொல்கதா. நவீன அரை நிர்வாணிகள் (Stripteases) சோதோம் கொமோராவில் நடந்தது போல், நாட்டின் சட்டதிட்டங்களினால் பாதுகாக்கப்படுகின்றனர். 295. ஒரு பெண் நாய் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது சில நேரங்களில் ஒரு ஆண் நாயும் கூட அதை பின் தொடருவதில்லை. ஆனால் அதற்கு ஏதோவொன்று சம்பவிக்கும் போது, எல்லா ஆண் நாய்களும் அதன் பின்னால் ஓடுகின்றன. அதற்கு ஏதோ ஒன்று சம்பவித்து விட்டது. ஏன் தெரியுமா-?...... 296. இந்த பெண்கள் ஆடைகளை களைந்து, தெருக்களில் ஏன் செல்கின்றனர் தெரியுமா-? அவ்விதமாக இல்லை என்று என்னிடம் கூறாதீர்கள். அது ஒரு அடையாளம். ஆண்களைக் குறை கூற வேண்டாம். இந்த பெண்கள் சோதோமிய சட்ட திட்டங்களினால் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றனர். அந்த சட்டம்... அவர்கள் அப்படி தெருக்களில் செல்வது சட்ட விரோதமானது என்று சட்டம் கூறவேண்டும். 297. பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கம் செய்யும் குருமார்கள் தங்கள் அங்கிகளுக்குப் பதிலாக பெண்களின் உள்ளாடைகளை அணிந்து கொள்ள வேண்டும். இத்தகைய செயல்களை அவர்கள் அனுமதித்து, அதற்கு விரோதமாகப் பேசப் பயப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அப்படி செய்தால், அவர்களுடைய ஸ்தாபனங்கள் அவர்களை வெளியே தள்ளி விடும். புருஷருடைய ஆடைகளை ஸ்திரீகள் உடுப்பது அருவருப்பான செயல் என்று வேதம் கூறியிருக்க, தேவனுடைய வார்த்தை ஜனங்களை அணுகாத வண்ணம் நீங்கள் அதை சிலுவையில் அறைந்து விடுகிறீர்கள். 298. அதற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். ஜனங்களுக்கு முன்பாக நீங்கள் தேவனுடைய வார்த்தையை சிலுவையில் அறைகிறீர்கள் என்னும் குற்றச் சாட்டை உங்கள் மேல் கொண்டு வருகிறேன். தலைமயிரை கத்தரித்துள்ள பெண்கள், குட்டை கால் சட்டை அணிந்து பாடகர் குழுவில் நிற்கின்றனர். 299. அன்றொரு நாள் ஒரு ஸ்திரீ என்னிடம், ''அவர்களில் நல்லவர்களை எங்கே காண முடியும் என்று நினைக்கிறீர்கள்-?'' என்று கேட்டாள். 300. நான், ''ஆண்டவர் என்னிடம், 'உலக முழுவதிலும் அவர்களில் ஒரு டஜன் பேரை பொறுக்கியெடு' என்று கூறினால், எனக்கு மரண பயம் ஏற்படும்'' என்று பதிலளித்தேன். 301. பகுத்தறிதலின் வரத்துடன் நின்று கொண்டு அவர்களை கவனிக்கும் போது, அந்த அசுத்தமான, நீசமான புகை பிடிப்பவர்கள் அங்கு அங்கியுடுத்தி பாடகர் குழுவில் நின்று பாடிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. சபையோர் அவர்களுடைய உண்மையான நிலையை அறிந்தால்... 'அவள் அப்படி செய்தால், நானும் கூட அப்படி செய்யலாம்.'' கிறிஸ்தவ ஜீவியம் என்பது பரிசுத்தமும் தூய்மையும் கொண்ட ஜீவியமாகும். 302. அவர்களுடைய அசுத்தத்தின் நிமித்தம் அவர்கள் பேரில் இயேசுகி றிஸ்துவின் நாமத்தினால் குற்றஞ்சாட்டுகிறேன். அவர்கள் சுவிசேஷத்துக்கு அவமானத்தைக் கொண்டு வந்துள்ளனர். சுவிசேஷத்துக்கு உண்மையாய் நிற்பவர்களை அவர்கள் மூடபக்தி வைராக்கியமுள்ளவர்கள் என்றும் பழமை நாகரீகக்காரர்கள் என்றும் அழைக்கின்றனர். ''அது பழமை நாகரீக அர்த்தமற்ற ஒன்று-!'' அவர்கள் பேரில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் குற்றம் சாட்டுகிறேன். 303. நவீன அரை நிர்வாணிகள் தெருக்களில் நடந்து, பாடகர் குழுக்களில் பாடி, புகைபிடித்து, அசுத்தமான நகைச்சுவை துணுக்குகளை கூறி, மூன்று அல்லது நான்கு கணவர்களைக் கொண்டு, குரல் இனிமையாக இருப்பதால் பாடகர் குழுவில் பாடுவது-!.. ஞானமில்லாத, ஆவியற்ற, உன் சொந்த செயல்களின் காரணமாக புறக்கணிக்கப்பட்ட நீ, மற்றவர்கள் படிக்கும் அதே வேதாகமத்தை தான் படிக்கிறாய். ஆனால் நீ தேவனுடைய ஆவியை புறக்கணித்து விட்ட படியால் வேதம் கூறியுள்ளபடி, பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக கொடிய வஞ்சகத்துக்கு நீ ஒப்புக் கொடுக்கப்பட்டு அதன் காரணமாக ஆக்கினைக்கு உள்ளாக்கப்பட்டாய். நீ செய்வது சரியென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். பொய்யை சத்தியமென்று விசுவாசித்து அதன் காரணமாக ஆக்கினைக்கு உள்ளாக்கப்படுவாய் என்று வேதம் கூறியுள்ளது. 304. எனவே தேவனுடைய வார்த்தையைக் கொண்டு உன் மேல் குற்றம் சாட்டுகிறேன். நீ ஜனங்களுக்கு தவறானவைகளைப் போதித்து, கிறிஸ்துவின் போதகங்களையும், பரிசுத்தத்தையும் பரத்திலுள்ள ஜீவனையும் சிலுவையில் அறைகிறாய். ஒருவன் தெருவில் நடந்து சென்றால், அவன் வித்தியாசமான ஆளாய் திரும்பி வர ஏதுவுண்டு. 305. குருமார்கள் விளையாட்டு மைதானங்களில் நின்று கொண்டு புகை பிடிக்கின்றனர். இடறுதற்கேதுவான கற்கள். அவர்கள் எல்லாவித மோசமான செயல்களையும் பொறுத்துக் கொள்கின்றனர் - பாடகர் குழுவிலுள்ள பெண்கள் குட்டைக்கால் சட்டையை அணிந்து கொண்டு, தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, முகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்டு, ''சகோதரி அவர்கள், இவர்கள், '' என்கின்றனர். வேதம் அப்படிப்பட்ட செயல்களைக் கண்டிக்கிறது. அது உண்மை - விருந்துகளுக்குச் சென்று, மற்றவர்களுடன் சல்லாபம் செய்து, அதே சமயத்தில் சபையின் அங்கத்தினராக இருத்தல், உங்கள் சாட்சியை நீங்கள் காத்துக் கொண்டு, அதற்கேற்ப உங்கள் விருப்பம் போல் வாழுங்கள். 306. நான் பிரஸ்பிடேரியன்களை மாத்திரம் கூறுவதாக எண்ண வேண்டாம். பெந்தெகொஸ்தேராகிய உங்களையும் தான் கூறுகிறேன். ஒரு காலத்தில் நீங்கள் சத்தியத்தை அறிந்திருந்தீர்கள். ஆனால் அதை உங்களால் பின்பற்ற முடியாது என்று நீங்கள் தீர்மானித்து விட்டீர்கள். உங்கள் செயல்களை எதிர்த்து உங்கள் போதகர் பேசினால், வாரத்திற்கு நூற்றுக்கணக்காண டாலர்கள் சம்பளமுள்ள வேலையும், அந்த பெரிய சபையில் பிரசங்கம் செய்யும் வாய்ப்பும் அவருக்கு இல்லாமல் போய்விடும். ஏனெனில் அந்த ஸ்தாபனம் அவரை வேலை நீக்கம் செய்து விடும். எனவே தன் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள அவர் இதைக்குறித்து மௌனமாக இருக்க வேண்டிய-தாயுள்ளது. ஆகவே ஏசாவைப் போல், இவ்வுலகின் ஒரு பானை கூழுக்காக அவர் தன் சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப் போடுகிறார். அதற்காக அவருக்கு என்ன கிடைக்கும்-? இருவரும் ஆக்கினையின் குழியில் விழுந்து ஆக்கினைக் குள்ளாவார்கள். சுவிசேஷத்தின் வேசிகளென்று அவர்கள் பேரில் குற்றம் சாட்டுகிறேன். 307. அண்மையில் ஓக்லஹோமாவில் பெயர் பெற்ற ஒரு சபைக்கு சென்று இருந்தேன். அந்த சகோதரனின் படிப்பறையில் நான் அமர்ந்து கொண்டு இருந்தேன். நான்கு அல்லது ஐந்து பாடகர் குழுக்கள் அங்கு ஒன்று சேர்ந்தன. அது பெந்தெகொஸ்தேயின் மிகவும் சிறந்த ஸ்தாபனம். நான் போதகருடைய படிப்பறையில் அமர்ந்து கொண்டிருந்தது அவர்களுக்கு தெரியவில்லை. அங்கே கீழே, அந்த போதகர் தன்னுடைய பிரசங்க மேடைக்கு வருமுன்னர் உட்கார்ந்து படிக்கும் அந்த அறையில் நான் உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். 308. அப்பொழுது இந்த சிறு ரிக்கிகளும் ரிக்கெட்டாக்களும் - ரிக்கெட்டாக்கள் முகத்தில் வர்ணம் தீட்டினவர்களாய் அங்கு வந்தனர். அவர்களில் ஒருவருக்கு கூட நீண்ட தலைமயிர் இல்லை. அவர்கள் எல்லோருமே தலைமயிரைக் கத்தரித்து விட்டிருந்தனர். அழகுபடுத்தும் சாதனங்களால் அவர்கள் தங்களை அழகுபடுத்தி இருந்தனர். அவர்கள் அனைவரும் பாடகர் குழு அங்கிகளை அணிந்திருந்தனர். அந்த சிறு ரிக்கிகள் இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவன் மிஷனரி ஊழியத்திற்காக காணிக்கை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் கோப்பையை கையிலேந்திக் கொண்டு குருடனைப் போல் நடித்து, காணிக்கை எடுப்பதைக் குறித்து தூஷணமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் இவை அனைத்திற்கும் பின்பு, அவன் பாடகர் குழுவில் சேர்ந்து கொண்டு, 'மேசியா' என்னும் அந்த பெயர் பெற்ற பாடலைப் பாடினான். ஓ, என்னே-! அதை நன்றாகத் தான் பாடினான். ஆயினும் அந்த கம்பீரம் அதில் இருக்கவில்லை. அது ஜீவன் அற்றதாய் இருந்தது. பாருங்கள். ஓ, என்னே-! அது தான் அவருடைய இந்த புதிய கொல்கொதா. புரிகின்றதா. 309. ஒரு சிறு பெண், அவள் உடுக்க வேண்டிய விதத்தில் உடுத்தி, நீண்ட தலைமயிர் வைத்துக் கொண்டு, முகத்தில் வர்ணம் தீட்டாமல் அங்கு வந்திருப்பாளானால், என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்-? அவளைப் பார்த்து அவர்கள் கேலி செய்திருப்பார்கள். பெந்தெகொஸ்தேவிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட முப்பது அல்லது நாற்பது பேரைக் கொண்ட அந்த வாலிபக் குழு... அந்த சிறுபெண் அவர்களைக் குறித்தும் ஏதாகிலும் கூறி இருந்தால், அவளைப் பாடகர் குழுவிலிருந்து புறம்பாக்கி இருப்பார்கள். 310. சுவிசேஷம் பிரசங்கிப்பவர் பிரசங்க பீடத்திலிருந்து இதைக் குறித்து ஏதாகிலும் கூறியிருந்தால், அவரை ஸ்தாபனத்திலிருந்து புறம்பாக்கி இருப்பார்கள். நீங்கள் தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறீர்கள். அவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிப்ப தாக உரிமை பாராட்டும் நீங்கள், அவரை சிலுவையில் அறைகின்றீர்கள். தேவனுடைய வார்த்தையைக் கொண்டும், அவர் இன்னும் உயிரோடிருக்கிறா ரென்றும் இக்கடைசி நாட்களில் உறுதிப்படுத்தும் அவருடைய வல்லமையைக் கொண்டும், கிறிஸ்துவைப் புறக்கணிக்கும் இச்சந்ததியின் பேரில் குற்றம் சாட்டுகிறேன். ஆம், இவர்கள் தெளிவான உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயிருக்கின்றனர். அவர்களுடைய ஸ்தாபனங்களால் அதை சகிக்க முடியவில்லை. 311. பெரிய சபைகளும் ஸ்தாபனங்களுமே அவருடைய புதிய கல்வாரி. நான் மறுபடியும் கூறுகிறேன். இந்த நவீன அரை நிர்வாணிகள் தான் அவர்கள் உடைய பாடகர் குழு-! 312. ஒவ்வொரு ஸ்தாபனத்தின் தலைமை போதகரும் அக்காலத்து பிரதான ஆசாரியனைப் போல், "நீ இறங்கி வந்து ஒரு அற்புதத்தைக் காண்பி," என்கின்றனர். அது முதலாம் சிலுவை மரணத்தின் போது நடந்தது. 313. இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. அவர்கள் என்னிடம், "நீர் மரித்தோரை உயிரோடெழுப்புகிறீர் அல்லவா-? உம் மனைவி கல்லறையில் அல்லவா இருக்கிறாள்-? உம் குழந்தையும் அங்கு இருக்கிறதே-! அங்கு சென்று அவர்களை ஏன் உயிரோடு எழுப்பக் கூடாது-?" என்று கேட்டதுண்டு. 314. அவர்கள் அவரிடமும், "நீர் மரித்தோரை உயிரோடெழுப்புவதாக கேள்விப் பட்டோம். இங்கு கல்லறைகள் நிறைய சவங்கள் உள்ளன. அவர்களை உயிரோடெழுப்பும்,'' என்றனர். ஓ, அறியாமை அறியாமையை பிறப்பிக்கும். பாருங்கள்-? ஹு.... ஹும். 315. பெரிய சபைகள், பெரிய பாடகர் குழுக்கள், இந்நாளின் பிரதான ஆசாரியர்கள், "இங்கு வாரும்-! எங்கள் ஸ்தாபனம் செய்ய முடியாத அற்புதம் ஒன்றை செய்து காட்டும்,'' என்கின்றனர். 316. அண்மையில் ஆர்கன்ஸாஸிலுள்ள ஜோன்ஸ்பரோ என்னுமிடத்தில் நான் செய்த ஒரு சிறு வானொலி ஒலிபரப்பில், ஒரு ஸ்திரீ தான் தெய்வீக சுகம் பெற்ற விவரத்தை சொல்லி முடித்த பின்பு, ஸ்தாபன சபை ஒன்றை சேர்ந்த ஒரு மனிதன் எழுந்து நின்று, 'அற்புதம் நிகழ்ந்த எந்த ஒரு மனிதனையாவது என்னிடம் கொண்டு வரும்படி நான் சவால் விடுகிறேன்,'' என்றான். 317. நான் ஒரு மருத்துவரை அழைத்து வந்தேன். புற்று நோய் சுகமான ஒரு மனிதனையும், மூட்டு கீல் வாதத்தினால் அவதியுற்று, இருபது ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து, சுகம் பெற்ற ஒரு ஸ்திரீயையும் கொண்டு வந்து அவன் முன் நிறுத்தி, "நீ சொன்னபடி எனக்கு ஆயிரம் டாலர்கள் தா'' என்றேன். 318. அவன், "இல்லை... இங்கு இல்லை. எங்கள் தலைமை செயலகம் உள்ள வாக்கோ, டெக்ஸாஸில் தான் காண்பிக்கும்படி கூறினேன்,'' என்றான். 319. நான், ''சரி அங்கு செல்வோம். அதற்கான ஒழுங்குகளைச் செய். நாம் நாளை அங்கு செல்லலாம்,'' என்றேன். பாருங்கள்-? நான், "இந்த மனிதனுக்கு புற்று நோய் இருந்ததாக மருத்துவர் கூறுகிறார். எக்ஸ்ரே படங்களும் அதை நிரூபிக்கின்றன. இந்த ஸ்திரீ இருபது ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்ததை சுற்று வட்டாரத்தார் அனைவருமே அறிவார்கள். இப்பொழுது அவள் நடக்கிறாள். அநேக மருத்துவர்கள் அவளுக்கு சிகிச்சை செய்தும் பயனில்லை. ஆனால் இன்றைக்கோ அவள் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். ஆயிரம் டாலர்கள் தருவதாக நீ கூறினாய் அல்லவா-? அதை கொடுத்து விடு. மிஷனரி நிதிக்கு கொடுத்து விடுகிறேன்,'' என்றேன். அவன், 'வாக்கோ, டெக்ஸாஸில் காண்பிக்கும்படி தான் கூறினேன்,'' என்றான். நாம் நாளை அங்கு செல்லலாம் என்றேன். 320. அவன், ''சற்று பொறும். ஒரு சிறு பெண்ணை நான் தேர்ந்தெடுத்து அவளுடைய கையை கத்தியால் வெட்டி விடுகிறேன். எங்கள் சகோதரருக்கு முன்னால் அவளை நீ சுகப்படுத்துவீரானால், அவர்கள் உமக்கு அந்த தொகையைக் கொடுப்பார்கள்'' என்றான். நான், "பிசாசே'' என்றேன். 321. "நீர் தேவனுடைய குமாரனேயானால், சிலுவையை விட்டு இறங்கி வாரும். உம்மை அடித்தது யாரென்று சொல்லும்.'' அவருடைய கண்களை துணியால் கட்டி, அவரை அடித்து, "நீர் தீர்க்கதரிசியானால் உம்மை அடித்தது யாரென்று சொல்லும்'' என்றனர். "நீர் தேவனுடைய குமாரனேயானால், சிலுவையை விட்டு இறங்கி வாரும்.'' 322. குருடரை வழிகாட்டும் குருடான வழி நடத்துபவர்கள்-! அவர்களுக்கு மன நலம் சரியாக்கப்பட்டு சுகமளிப்பு தேவையாயுள்ளது - ஒரு மனிதன் அவ்வித மாக செய்வது, அல்லது அதைக்குறித்து ஏதோ ஒன்றை கூறுவது. நிச்சயமாக. 323. "நீர் ஒரு அற்புதம் செய்வதைக் காணட்டும். ஆண்டவரே, நீர் அற்புதம் செய்வதைக் காண வாஞ்சிக்கிறோம்,' என்னும் அந்த பழைய கூக்குரல் இன்றைக்கும் நிலவுகிறது. தினந்தோறும் தேவனுடைய வழி நடத்துதலின்படி ஒவ்வொரு மணி நேரமும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் போதே, இந்த கூக்குரல் இன்றைக்கும் எழுகிறது. ஆனால் அவர்கள் அப்பொழுது அங்கு இருக்கவில்லை. இருந்திருந்தார்களானால், அவர்கள் அதை பெயல்செபூல் என்று அழைத்திருப்பார்கள் பாருங்கள்-? ''ஆண்டவரே, எங்கள் விருப்பத்திற் கேற்ப நீர் அற்புதத்தை செய்ய வேண்டுமென்று வாஞ்சிக்கிறோம். ஆம், ஹு..ஹும். நாங்கள் சொல்லும் இடத்திற்கு நீர் போக வேண்டும். நாங்கள் செய்யும்படி கூறுபவைகளை நீர் செய்ய வேண்டும் (அது தான்).'' ஆனால் அவரை அவர்களுடைய கட்டுக்குள் கொண்டுவர அவர்களால் முடியவில்லை. இல்லை, ஐயா-! ஆகவே தான் அவர்கள் அவரைப் புறம்பாக்கினர்; ஆம் ஐயா-! இன்றைக்கும் அதையே செய்ய அவர்கள் முயன்று வருகின்றனர். சபைகளின் சங்கத்தின் மூலம் அவர்கள் அதை முடிவில் சாதிப்பார்கள். எல்லோரும் இப்பொழுது அதில் சேர்ந்து கொள்கின்றனர்- அந்த பழைய கூக்குரல். 324. நாம் மறுபடியும் மிகுந்த பக்தியுள்ள இடத்தில் சிறந்த வேத பண்டிதர்கள் அவருக்கு விரோதமாக கூக்குரலிடுவதைக் காண்கிறோம். மிகச் சிறந்த வேத பண்டிதர்கள் - அவர்கள் வித்தியாசமான காரியங்கள் அறிந்திருக்க வேண்டும். மிகவும் உயரிய சபைகள், சிறந்த பயிற்சி பெற்ற வேத பண்டிதர்கள் அவரை மறுபடியுமாக அவர்கள் மத்தியிலிருந்து புறம்பாக்குகின்றனர். அது அவர்களுக்கு வேண்டாம். நீங்கள், ''சகோ.பிரான்ஹாமே, நீங்கள் கூறுவது தவறு'' எனலாம். 325. அப்படியானால் ஏழு சபை காலங்களை குறித்து பிரசங்கிக்கப்பட்ட போது நீங்கள் இங்கு இல்லை என்று அர்த்தம்; அல்லது நீங்கள் அந்த பிரசங்கத்தை ஒலிநாடாவில் கேட்டதில்லை. அவரை சபையிலிருந்து புறம்பாக்கின ஒரே சபை காலம் லவோதிக்கேயா சபை காலம் என்று பிரசங்கிக்கப்பட்ட போது நீங்கள் இங்கு இல்லை. அவர் வெளியில் நின்று கதவை தட்டிக் கொண்டு, உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார். அவர்கள் அவரை வெளியே தள்ளினார்கள். ஏனெனில் அவரால் அவர்களுக்கு எவ்வித உபயோகமும் இல்லை. அவர்கள் மறுபடியும் அவரை சிலுவையில் அறைகிறார்கள். ஆமென்-! எவ்வளவு காலமாக நாம் இப்படியே போய்க்கொண்டிருக்க முடியும். 326. நினைவில் கொள்ளுங்கள், 2-தீமோத்தேயு..3-ல் தேவனுடைய தீர்க்க தரிசியாகிய பவுல் (வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள். அதை படிக்க நமக்கு நேரமில்லை) கடைசி காலத்தில் பரியாசக்காரர் வருவார்கள் என்றும், அவர்கள் துணிகரமுள்ளவர்களாகவும், இறுமாப்புள்ளவர்களா-கவும். தேவப் பிரியராயிருப்பதற்கு மேலாக சுகபோகப்பிரியர்களாயும்; அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கம் இல்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் அதிகம் படித்தவர்களாகவும் தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள் என்றும் முன் அறிவித்துள்ளான். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. இவர்கள் மதியீனமுள்ள; தலை மயிர் கத்தரித்து, குட்டை கால்சட்டை அணிந்து, முகத்தில் வர்ணம் தீட்டியுள்ள பெண்களை வசப்படுத்திக் கொண்டு அவர்களை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வார்கள். ''கடைசி நாட்களில் இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு,'' என்று அவன் கூறியுள்ளான். 327. நாம் தீர்க்கதரிசிக்கு கீழ்ப்படிவோம். இக்கடைசி நாட்களில் இப்படிப்பட்ட வர்களை விட்டு விலகுவோம். நீங்கள் கடைசி நாட்களில் வந்திருக்கிறீர்கள் (இதை நான் சபைக்கு இப்பொழுது கூறுகிறேன்). ஆம், ஐயா-! அவர்களை விட்டு விலகுங்கள். 328. இக்காலத்து போதகர்கள் இதை அறிந்திருக்க வேண்டும். இயேசுவை அவருடைய காலத்தில் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இன்று இதை இவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை அறிந்திருக்க வில்லை. அவருடைய காலத்திலிருந்த யூத வேதபாரகர்கள் அவருடைய நாட்களைக் கண்டு அவரை அறிந்து கொண்டிருக்க வேண்டும். அன்று போலவே இன்றும் தேவனுடைய வார்த்தை தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. அவர் வார்த்தையாய் இருந்தார். அவர் தான் அந்நாளின் வார்த்தையாயிருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். அது போன்று அவர், இந்நாளுக்கான வார்த்தையாயிருக்கிறார் என்றும், இந்த மணிநேரத்திற்கான வெளிச்சமாயிருக்கிறார் என்றும் தேவன் நிரூபித்து விட்டார். அன்றைக்கும் அவர்கள் அதை அறிந்திருக்க வேண்டும். இன்றைக்கும் அவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும். 329. அன்று அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதன் காரணமாக அவர்களை நான் குற்றம் சாட்டுகிறேன். அவர்களை குற்றஞ்சாட்ட வேண்டும் என்று என் மனதில் அவ்வப்பொழுது தோன்றிக் கொண்டே இருக்கிறது. அதற்கான கிரயத்தை தேவன் அவர்களிடமிருந்து வாங்கி விடுவார். 330. அந்நாளின் யூதர்கள்... பூமியில் தேவன் இருந்த நாட்களில் - இயேசு, 'எருசலேமே, எருசலேமே, நான் எத்தனைதரமோ உன்னை ஒரு பெரிய கூட்டமாக கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். உனக்கோ மனது இல்லாமற் போயிற்று" என்றார். 331. இந்த கடைசி நாட்களிலும் கூட தேவன் எவ்வளவாக தமது ஜனங்களை ஒன்று கூட்டிச் சேர்க்க முயன்றார்-! ஆனால் உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. நீங்கள் உங்கள் கோட்பாடுகளையே விரும்பினீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் அழிவுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு விட்டீர்கள். எருசலேமும் அதைத் தான் பெற்றது. அவள் தகர்க்கப்பட்டு, எரிக்கப்பட்டாள். அவள் இப்பொழுது இல்லை. அது போன்றே, என்றாவது ஒரு நாளில் இந்த பெரிய காரியங்கள் அனைத்திற்கும் சம்பவிக்கும். உங்கள் மகத்தான கோட்பாடுகளும் ஸ்தாபனங்களும் அழிந்து போகும். ஆனால் தேவனுடைய வார்த்தையோ நித்தியகாலமாய் நிலை நிற்கும். 332. அவருடைய ஆழமான காயங்கள், அவருடைய சிநேகிதர் என்று அழைக்கப்பட்டவர்களின் வீட்டில் உண்டானவை. யோசித்துப் பாருங்கள்-! சற்று நில்லுங்கள்-! நான் ஒரு நிமிடம் காத்திருக்கிறேன். போதகர்களே, அதை சற்று யோசித்துப் பாருங்கள்-! அவருடைய காயங்கள் எங்கு உண்டாயின-? அவருடைய சிநேகிதர் என்று அழைக்கப்பட்டவர்களின் வீட்டில் அன்று போலவே இன்றும் நிகழ்கின்றது. யோசித்துப் பாருங்கள்-! கல்வாரியில் அவர் காட்டு மிராண்டிகளால், முரடர்களால் சூழப்பட்டிருந்தார். அவர்கள் யார்-? அவரை நேசிப்பதாக உரிமைபாராட்டின போதகர்களே. இன்று சுவிசேஷமானது முற்றிலுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, அவருடைய உயிர்த் தெழுதலின் மகத்தான அடையாளங்கள் அதை நிரூபித்துவிட்டன. ஆனால் அதற்கு எதிராக போராடுபவர்கள் தெருக்களில் செல்பவர்களல்ல, போதகர்கள் என்று அழைக்கப்படுபவர்களே. 333. அவரை நேசிப்பதாக கருதப்படுபவர்களே இன்று அவரை சூழ்ந்திருந்து, ''இது எங்கள் மத்தியில் நிகழ்வதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்த மனிதன் எங்கள் மேல் ஆதிக்கம் செலுத்த நாங்கள் விடமாட்டோம். நாங்கள் அதை ஆதரிக்க மாட்டோம். இந்தப் பட்டினத்தில் அது நடந்தால், நாங்கள் எவ்வித ஒத்துழைப்பையும் அளிக்கமாட்டோம். அது மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொண்டு உள்ளதனால் நேரிடும் கிரியைகளேயன்றி (Spiritualism) வேறல்ல. அது பிசாசு'' என்கின்றனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையை அறியாதவர்களாய் அன்று போல் இன்றும், குருடருக்கு வழிகாட்டும் குருடராய் இருக்கின்றனர். யோசித்துப் பாருங்கள்-! அன்று போல் இன்றும். 334. சுகத்தையளித்து, ஆணையும் பெண்ணையும் இவ்வுலக சிநேகத்திலிருந்து விடுவிக்கும் இந்த வல்லமை - தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டு, முகத்தில் வர்ணம் தீட்டிக்கொண்டு, அதே சமயத்தில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்து கொள்ளும் இந்த யேசபேல்கள்...... புகை பிடித்து, அசுத்தமான நகைச்சுவை துணுக்குகளை கூறிக்கொண்டு, மிஷனரி சங்கம் என்னும் ஒன்றை ஸ்தாபித்துக் கொண்டு, அதில் அங்கத்தினராகி, தையல் தைத்து, ஆகாத சம்பாஷணைகளில் ஈடுபட்டு, அவதூறாகப் பேசி, குட்டை கால் சட்டை அணிந்து தெருவில் நடந்து, இப்படிப்பட்ட செயல்களைப் புரிந்து, அதே சமயத்தில் மற்ற பெண்களின் முன்னால் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்வது. தான் ராஜகுமாரன் என்று அறிந்திருந்து, அதற்கேற்ற நற்குணம் பெற்றிருந்த ஒரு அடிமையைக் குறித்து நான் கூறின கதை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா-? நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்-! ஆண்களும், பெண்களும்... அவர்கள் மறுதலிக்கின்றனர். 335. இந்த குருமார்கள் - அந்த பிரசங்க பீடங்களிலிருந்து தான் அவர் ஈட்டிக் குத்துகளைப் பெறுகிறார். ஜனங்களிடையே காணப்படும் இத்தகைய வாழ்க்கையை ஆமோதித்துவிட்டனர். அவர்களை இதனின்று விடுவிக்கவல்ல அந்த வல்லமையை இந்த குருமார்கள் மறுதலித்து, பெண்கள் தலைமயிரைக் கத்தரித்தல், குட்டை-கால்சட்டை அணிதல், முகத்தில் வர்ணம் தீட்டிக் கொள்ளுதல் போன்ற தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள செயல்களு-க்கு ஆமோதம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் வேறொரு கல்வாரியை உண்டாக்கிக்கொண்டு, அவரை சிலுவையில் அறைகின்றனர். இது எங்கிருந்து புறப்படுகிறது-? தெருவிலிருந்தா-? மது அருந்தும் ஸ்தலத்தில் இருந்தா-? இல்லை, பிரசங்கப் பீடத்திலிருந்து, பிரசங்கப் பீடத்திலிருந்து.! 336. அவர்களுடைய கூக்குரல் என்னவாய் இருந்தது-? ''அவர் தம்மை தேவனாக்கிக் கொள்கிறார்.'' அவருடைய தேவத்துவத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர். அவர்கள் அவரைப் பிரித்து, மூன்று அல்லது நான்கு கடவுள்களாக ஆக்கிவிடப் பார்க்கின்றனர். ஆனால் அவர் தேவன். அவர் தேவனாய் இருந்தார். அவர் எக்காலத்துக்கும் தேவனாய் இருப்பார். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஒரே தேவனைக் குறித்து அவர்களிடம் பேசினால், அவர்கள் நகைத்து, "நாங்கள் பரிசுத்த திரித்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம்'' என்பார்கள். 337. நானோ, ஒரே பரிசுத்த தேவனை விசுவாசிக்கிறேன். அவருடைய வல்லமை சுகத்தையளித்து, ஜனங்களை கட்டுகளினின்று விடுவித்து, மகதலேனா மரியாளுக்கு செய்த விதமாக, இவ்வுலக சிநேகத்தினின்று ஜனங்களை விடுவிக்கவல்லது என்று நான் விசுவாசிக்கிறேன். மகதலேனா மரியாளும் கூட முகவர்ணம் தீட்டியிருந்த ஒரு யேசபேலாய் இருந்தாள் என்று நினைவில் கொள்ளுங்கள். அவளுக்குள் ஏழு பிசாசுகள் இருந்தன. இன்று தெருவில் செல்லும் நவீன பெண்ணைப் போல் அவளும் அரை நிர்வாணியாயிருந்தாள். 338. இன்று நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள். ஜனங்கள் நிர்வாண பெண்களின் ஆலயத்தில் வழிபடுகின்றனர் என்று நீங்கள் நம்பா விட்டால், வெளியே சென்று பாருங்கள், எங்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள். ஒரு செய்தித்தாளையோ அல்லது ஒரு பத்திரிக்கையையோ திறந்து பாருங்கள். விளம்பரங்களைப்பாருங்கள். நீங்கள் என்ன காண்கிறீர்கள்-? "தேவகுமாரர்கள் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தர்ய முள்ளவர்கள் என்று கண்டு அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்கொண்டார்கள்'' (ஆதி 6:2) என்று கூறியுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். இங்கிலாந்தில் காணப்படும் வெட்கக்கேட்டை பாருங்கள். இங்கு காணப்படும் வெட்கக்கேட்டைப் பாருங்கள். எல்லாமே வேசிகளின் வீடாக மாறிவிட்டது. 339. ஏன் அப்படி-? ருஷியா ஏன் கம்யூனிஸத்தை தழுவிக் கொண்டது-? கத்தோலிக்க சபையின் அசுத்தம், மற்றும் சீர்கேடான இழிந்த நிலையின் காரணத்தாலும் அதன் வல்லமையற்ற நிலையைக்கண்டும், அதே காரணத்தால் தான் இந்த தேசம் இன்று மெல்ல கம்யூனிஸத்திற்கு நழுவிச் சென்று கொண்டிருக்கிறது. சபைகளின்-சங்கமும் கத்தோலிக்க-சபையும் ஒன்று சேரும். கத்தோலிக்கசபையும் கம்யூனிஸமும் ஒன்றோடொன்று இணைந்து விடும். அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றனர். ஏன்-? அவர்களைப் பிரித்தெடுத்து வித்தியாசமான மக்களாக ஆக்கக்கூடிய அந்த சுவிசேஷத்தை அவர்கள் புறக்கணித்து விட்டனர். அர்த்தமற்ற செயல்-! அது தான் அதன் உண்மையான காரணம். 340. பிரசங்க பீடத்திலுள்ள போதகர்கள் தங்களுடைய வயிற்று பிழைப்புக்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு சமூகத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல பதவி வேண்டுமென்பதற்காக, "நான் இதை இதை சேர்ந்திருக்கிறேன்'' என்று கூறிக் கொண்டு தேவனுடைய வல்லமைக்குப் பதிலாக கல்வியறிவை ஏற்றுக் கொண்டு உள்ளனர். மகதலேனா மரியாளைப் போன்று,.. 341. மகதலேனா மரியாளை விடுவித்தது போன்று இந்த பைத்தியக்காரத்- தனமான ஓட்டப் பந்தயத்திலிருந்து அவர்களை விடுவித்தருளும்.... தெருவில் சென்று கொண்டிருந்த அந்த அரை நிர்வாணியை தேவனுடைய வல்லமை மேற்கொண்டு, அவளை ஆடையணியச் செய்து, ஒரு நல்ல பெண்மணியாக நடக்கச் செய்து, அவளைக் கிறிஸ்தவளாக்கினது. ஆனால் அவர்களோ அந்த வல்லமையை கண்டனம் செய்து அதைப் பெற்றிருந்த அந்த மனிதனை கல்வாரியில் சிலுவையில் அறைந்து கொன்றனர். 342. இன்றைக்கும், எந்த சுவிசேஷமும் பரிசுத்தாவியும் ஒரு அரை நிர்வாணியை ஒரு நல்ல பெண்மணியாக ஆடையணியச் செய்து அவளைக் கிறிஸ்தவளாக நடந்து கொள்ளச் செய்கிறதோ, அதை அவர்கள் மூட பக்தி வைராக்கியம் என்றழைத்து, அவர்களுடைய சபையோரை அது அணுகி அதிலுள்ள பெண்களையும் அவ்வாறு செய்யத் தூண்டக் கூடாது என்று கருத்தாய் கவனித்து வருகின்றனர். அவர்கள் என்ன செய்கின்றனர்-? அன்று செய்தது போலவே இன்றும் அதை வெளியே அகற்றுகின்றனர். இப்பொழுது அவர்கள் அந்த அதே வார்த்தையை சிலுவையில் அறைந்து, அது வேறொரு காலத்துக்குரியது என்கின்றனர். நான் மறுபடியும் அவர்களைக் குற்றம் சாட்டுகிறேன். ஆம், ஐயா-! அன்றைக்கு அவர்கள் குற்றம் சாட்டப்பட்டது போல் இன்றைக்கும் இவர்கள் குற்றம் சாட்டப்படவேண்டும். 343. அந்த பழைய லேகியோனை ஆடையணியச் செய்த அந்த அடையாளம். ஆடையைக் களைபவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா-? அப்படியானால் ஒரு பெண்ணைக் குறித்தென்ன-? லேகியோனுக்குப் பைத்தியம் பிடித்திருந்தது. அவன் வஸ்திரங்களைக் களைந்து போட்டு நிர்வாணியாய் இருந்தான். தேவன் தம்முடைய வல்லமையை உபயோகித்து அவனை வஸ்திரம் அணியச் செய்தார். அவன் புத்தி தெளிந்தவனாய், வஸ்திரம் அணிந்து கொண்டு இயேசுவின் பாதத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தான். 344. குருடனான பர்திமேயு அவர்களுடைய கோட்பாடுகளின் மத்தியிலும் பார்வையளித்த அந்த வல்லமையைப் பாருங்கள்-! இன்று உலகில் காணப்படும் அதே அளவுக்கு தான் இயேசுவின் காலத்திலும் விசுவாசம் நிலவியது. ஆனால் அது அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர் அற்புதங்களைச் செய்து கொண்டே சென்றார். அவர் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி கூறினார். அவர்களைப் பார்த்து அவர், ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டாயிருக்கிறீர்கள்'' என்றார். 345. லாசருவை கல்லறையிலிருந்து உயிரோடெழுப்பி, நாயீனின் பெண்ணுக்கு தன் மகனைத் திரும்ப அளித்த அந்த வல்லமை (ஓ-! தேவனே-!); இவைகளைச் செய்யக் கூடிய அந்த வல்லமை, வரப்போகிற காரியங்களை முன் கூட்டி அறிவிக்கக் கூடிய அந்த வல்லமை: ''அங்கு இரண்டு கழுதை குட்டிகள் கட்டியிருக்கும்.'' இரண்டு விதங்களில் ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கும். இவை அனைத்தையும் அவர் முன்னறிவித்தார். இப்படிப்பட்ட வல்லமையைப் பெற்றிருந்த அந்த அதே மனிதனை, ''அவனை அகற்றும், எங்கள் மத்தியில் அவன் வாழக் கூடாது. எங்கள் போதகங்களை அவன் கறைப்படுத்துகிறான்'' என்றெல்லாம் கூக்குரலிட்டு அவரை சிலுவையில் அறைந்து கொன்று போட்டனர். 346. இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. "பரிசுத்தாவியை அகற்றும்.'' அதன் உடன் எவ்வித சம்பந்தமும் கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. ''அது கண்டித்து உணர்த்தி, இவைகளையெல்லாம் செய்து, ஜனங்கள் செய்த காரியங்-கள் என்னவென்று அவர்களுக்கு அறிவிக்கிறது. அது எங்கள் ஸ்தாபனத்தில் கலந்து விடக்கூடாது. அது எங்கள் கோட்பாடுகளுக்கு விரோதமாயுள்ளது'' அவர்கள் அவரை மறுபடியும் சிலுவையில் அறைகிறார்கள். ஓ, என்னே-! நாம் முடிக்க போகும் தருணத்தில் இதை கவனியுங்கள். நாம் முடிக்க வேண்டும். அதை மூடபக்தி வைராக்கியம் என்று அழைக்கின்றனர். 347. அவர்கள் அவரை மூடபக்தி வைராக்கியம் கொண்டவர் என்றும் பைத்தியம் பிடித்தவர் என்றும் அழைத்தனர். பரிசேயர், ''இந்த மனிதன் ஒரு சமாரியன், இவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது,'' என்று அவர்கள் கூறினதாக வேதத்தில் எழுதப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா-? பைத்தியம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்-? மனமாறாட்டமுள்ளவன். 'அந்த மனிதன் பைத்தியக்காரன். அவனைத் தொடர்ந்து ஒரு கூட்டம் பைத்தியக்காரர் செல்லுகின்றனர். அவன் பெயல்செபூல்.'' 348. இன்றைக்கும் அப்படியே கூறுகின்றனர். 'அது ஒரு விதமான மாந்திரீகம். அது குறி சொல்லுதல்,' என்று கூறி, அவரை மறுபடியும் அவமானம் என்னும் சிலுவையின் மேல் வைக்கின்றனர். அது என்ன சிலுவை-? அவர் இப்பொழுது உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருக்கிறார். அதைப் பரியாசம் செய்து, அது பிசாசு என்று மக்களிடம் கூறுகின்றனர். 349. அவர், "தேவனுடைய பரிசுத்தமான கிரியைகளை அசுத்த ஆவியின் கிரியைகள் என்று கூறுகின்றனர்,'' என்றார். அதற்கு மன்னிப்பே கிடையாது. 350. அவருடைய வார்த்தையை அவர்கள் அவமானப்படுத்தி, அது போலியென்று காட்ட முயன்று மூட வைராக்கியமென்றும் அழைக்கின்றனர். அங்கு செல்ல வேண்டாம். அந்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம்,'' என்று அவர்கள் ஜனங்களை எச்சரிக்கின்றனர். 351. அதன் மூலம் அவர்கள் என்ன செய்கின்றனர்-? அவர்கள் ஸ்தாபனக் கோட்பாடுகள் என்னும் ஆணிகளால் அவரைக் கடாவுகின்றனர். அது உண்மை. உலக இன்பத்தை தேடித் திரியும் இக்குருமார்கள் உலகப் பிரகாரமானவர்கள், தேவனற்றவர்கள், ஸ்தாபன வெறி கொண்டவர்கள், ஸ்தாபன ஆணிகளைக் கொண்டு தங்கள் பிரசங்க பீடங்களிலிருந்து தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைகின்றனர். 352. ஏன் அப்படிச் செய்கின்றனர்-? அவர்கள் ஜனங்களுடைய புகழ்ச்சியையும், சபை அவர்களுக்கு அளிக்கும் கல்விப் பட்டங்களையும், தேவனுடைய வார்த்தைக்குமேலாக நேசிக்கின்றனர். அவர்களை நான் குற்றம் சாட்டுகிறேன். அவர்கள் தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போக முடியவில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷத்தை தரித்திருக்கின்றனர்..... நாம் வாழும் இந்த மாய்மாலமான நாட்கள்-! 353. என் ஆண்டவருக்கு ஒரு கல்வாரி போதாதா-? பின்னை ஏன் இப்படி செய்கிறீர்கள்-? அவரை நேசிக்க வேண்டிய நீங்கள், இது அவருடைய வார்த்தை என்று அறிந்திருக்கிற நீங்கள்; ''இதிலிருந்து ஒன்றை எடுத்துப் போட்டால், அல்லது இதனுடன் ஒன்றைக் கூட்டினால்'' என்று வெளிப்படுத்தல் 22-ம் அதிகாரம் உரைத்திருப்பதை படித்துள்ள நீங்கள்; ஏன் இப்படி செய்கிறீர்கள்-? அவருக்கு ஒரு கல்வாரி போதாதா-? 354. அவருக்காக நான் வாதாடுகிறேன். அவருக்கு நான் வழக்கறிஞர். தேவனுடைய வார்த்தையைக் கொண்டு உங்கள் மேல் குற்றம் சாட்டுகிறேன். உங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள். உங்கள் ஸ்தாபனங்கள் தவிடு பொடியாகிவிடும். நீதிபதியின் முன்னிலையில் உங்கள் பேரில் நான் குற்றஞ்சாட்டுகிறேன். உண்மை. தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்திருக்கிற நீங்கள் - மாய்மாலங்கள். அதை என்ன என்று அழைக்கிறீர்கள்-? ஒரு கல்வாரி போதாதா-? 355. "உங்கள் ஸ்தாபன பிதாக்கள்...'' என்று பேதுரு கூறினான். பேதுரு உங்கள் பேரில் குற்றஞ்சாட்டி, ''உங்கள் பிதாக்களில் யார் இப்படி செய்யாமல் இருந்தார்கள்-?'' என்றான். ஸ்தேவானும் அப்படியே கூறினான். ''அக்கிரமக்-காரருடைய கைகளினாலே ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்.'' இயேசுவும் கூட, ''உங்கள் பிதாக்களில் யார் தீர்க்கதரிசிகளைக் கல்லறை-களில் வைக்காமல் இருந்தார்கள்-? நீங்கள் அவைகளை சிங்காரிக்கிறீர்-கள்'' என்று கூறவில்லையா-? இப்படி தான் நீதிமானுக்கு காலங்கள் தோறும் நிகழ்ந்து வந்துள்ளது. 356. எனவே நான் இக்காலத்து நாகரீகமான, சபைகளுக்குச் செல்லும், கிறிஸ்துவைப் புறக்கணிக்கும் கூட்டத்தாரை குற்றம்சாட்டுகிறேன். நீங்கள் தேவபக்தியின் வேஷத்தை தரித்துக்கொண்டு, இந்த வார்த்தைகள் இந்நாளுக்கு உரியதல்லவென்றும் வேறு காலத்துக்குரியதென்றும் கூறி, என் இயேசுவை இரண்டாம் முறையாக சிலுவையில் அறைகிறீர்கள். உங்கள் மேல் நான் குற்றம் சாட்டுகிறேன். இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவர்கள் புரிந்த அதே குற்றத்தை நீங்களும் புரிகின்றீர்கள். மனந்திரும்பி தேவனிடம் திரும்புங்கள். இல்லையேல் அழிந்து போங்கள்-! 357. நான் மறுபடியும் கூறுகிறேன். இங்கே, சபைகள்; அவர்கள் அந்த போதகர்கள்; அவரை தேவனுடைய வார்த்தையை சிலுவையில், அறைந்தார்-கள். தேவதூஷணம் உரைப்பதன் மூலம். ஆண்டவரே கிருபையாயிரும்-! இதை மறுபடியுமாக கூறுகிறேன். ஒலிநாடாவில் ஒருக்கால் கலந்து போய் இருக்கக்கூடும். இங்கே சபைகள்; அவர்கள், குருமார்கள்; அவரை, வார்த்தையை; சிலுவையில் அறைந்தார்கள், தேவ தூஷணம் உரைப்பதன் மூலம். அது மறுபடியும் நிகழ்வதில் வியப்பொன்றுமில்லை. பிளவுண்ட பாறை, இருண்ட ஆகாயம் மத்தியில் என் இரட்சகர் தலையை சாய்த்து மரித்தார். ஆனால் திறக்கப்பட்ட திரைச்சீலை வழியைக் காண்பித்தது பரலோக மகிழ்ச்சிக்கும் முடிவில்லா நாட்களுக்கும்.... 358. இங்கு குழுமியுள்ளோர்க்கும் ஒலி நாடாவைக் கேட்போருக்கும் இதை கூறுகிறேன். பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் இதை கூறுகிறேன். ''கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்-? அவர்கள் இவ்வார்த்தை-யின் கீழ் சேரக்கடவர்கள்.'' தேவன் நிச்சயமாக இப்பொல்லாங்கான, கிறிஸ்துவை மறுதலிக்கும், கிறிஸ்துவை புறக்கணிக்கும் சந்ததியை, அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட வார்த்தையை அவர்கள் தேவதூஷணம் உரைத்து சிலுவையில் அறைந்ததன் நிமித்தம், நியாயத்தீர்ப்பில் கொண்டு வந்து நிறுத்துவார். நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு வரப்போகிறீர்கள். உங்கள் மேல் குற்றம் சாட்டுகிறேன். கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்-? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள்'' என்று தொங்கிக் கொண்டு இருந்த அக்கினி ஸ்தம்பத்தை சாட்சியாக வைத்து மோசே கூறினான் அல்லவா. கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்-? அவர்கள் வார்த்தையை எடுத்து கொண்டு, கோட்பாடுகளை வெறுத்து, தினந்தோறும் இயேசு கிறிஸ்துவை பின்பற்றக்கடவன். நாளை காலை உங்களை சந்திக்கிறேன். ஜெபத்திற்கு நாம் தலைவணங்குவோம். 359. ஓ, தேவனாகிய கர்த்தாவே, நித்திய ஜீவனை அளிப்பவரே, இந்த வார்த்தையின் மூலகாரணரே, இயேசு கிறிஸ்துவை மரித்தோரில் இருந்து உயிரோடெழுப்பி, அவிசுவாசிகளான ஜனங்களின் மத்தியில் அவரை உயிர் உள்ளவராகக் காண்பித்தவரே, இன்று காலை நீண்ட நேரமாகி விட்டது. அநேகர் இங்கு அமர்ந்திருந்தனர் (சபை நிரம்பி வழிகிறது); எங்கு பார்த்தாலும் ஜனங்கள் நின்று கொண்டு இருக்கின்றனர். உலகெங்கும் வேவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுவதற்கு ஒலிநாடாக்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறது. போதகர்கள் இதை தங்கள் படிக்கும் அறைகளில் கேட்பார்கள். ஆண்டவரே, அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். இந்த வார்த்தைகள் அவர்கள் உடைய இருதயங்களில் ஆழமாய் பதிந்து, உலக காரியங்களை அவர்கள் தங்கள் இருதயங்களிலிருந்து எடுத்துப் போட்டு..... 360. கென்டக்கியிலிருந்து வந்த மெதோடிஸ்டு போதகர் அன்றொரு நாள் என்னிடம், "நான் ஏழு சபை காலங்கள் செய்தியை கேட்டுக் கொண்டிருந்த போது, பாபிலோனின் சுவர்களை விட்டு வெளியே வா என்னும் அறைக் கூவலைக் கேட்டேன். அதற்கு இசைந்து நான் வெளியே வந்து விட்டேன். எந்த பக்கம் செல்ல வேண்டுமென்றோ என்ன செய்ய வேண்டுமென்றோ எனக்குத் தெரியாது. நான் வெளி வந்து விட்டேன்'' என்று சொன்னாரல்லவா-? மனைவியையும், இரண்டு மூன்று சிறு குழந்தைகளையும் கொண்ட குடும்பத்தைக் கொண்ட இந்த வாலிபனின் தைரியம் ஆசீர்வதிக்கப்படுவதாக-! 361. தேவனே-! அநேகர், ஜீவனின் ஒரே மார்க்கமாகிய தேவனுடைய வார்த்தைக்குச் செல்லும் வழியைக் கண்டு கொள்கின்றனர். ஏனெனில் அவரே வார்த்தையாயிருக்கிறார். பிதாவே, ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கி-றேன். பிதாவே, கடூரமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. அன்பின் நிமித்தமாகவே இதை கூறுகிறேன். ஏனெனில் அன்பு திருத்துகிறது. தேவனே, திருத்துவதற்காக இது கூறப்படுகிறது என்பதை ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். திருத்தப்பட வேண்டியவர்களுக்காக நீர் சிலுவையில், "பிதாவே, இவர்களுக்கு மன்னியும். இவர்கள் குருடராயிருக்கின்றனர். தாங்கள் செய்வது இன்னது என்று அறியாதிருக்கிறார்களே'' என்று ஜெபம் செய்தீர். 362. ஆண்டவரே, ஜீவனுள்ள வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளையும், ஸ்தாபனங்களையும், பிரமாணங்களையும் ஏற்றுக் கொண்டு, மறுபடியுமாக வார்த்தையை சிலுவையில் அறையும் இந்த குருமார்களுக்காக ஜெபத்தை ஏறெடுக்கிறேன். உண்மையான சத்தியம் என்று தேவன் உறுதிபடுத்தும் தம்முடைய சத்தியத்தை அவர்கள் ஜனங்களுக்கு முன்பாக குற்றம் கண்டு பிடிக்கின்றனர். பிதாவே அவர்களை மறுபடியுமாக நீர் கலியாண விருந்துக்கு அழைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இந்த முறை அவர்கள் சாக்கு போக்கு சொல்லாமல் வருவார்களாக. ஏனெனில் கடைசி அழைப்பு ஏற்கனவே சென்று விட்டதென்று நான் உணருகிறேன். இப்பொழுதே கால தாமதமாகியிருக்கக் கூடும். காலதாமதமாகி விடவில்லை என்று நான் நம்புகிறேன். 363. இங்கு குழுமியுள்ள இச்சிறு சபையை - இன்று காலை இங்கு கூடியுள்ள சில நூறு பேர்களை - ஆசீர்வதிப்பீராக. இது வெப்பமான நாள். அவர்கள் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆராதனையில் அமர்ந்திருந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் எழுந்து போகவில்லை. அவர்களுடைய பகல் ஆகாரம் காத்துக்கொண்டிருக்கிறது. அநேக பெண்கள் கைக் குழந்தைகள் உடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். 364. ஆண்டவரே, இந்த ஜனங்களை நான் வழி தவறச் செய்தால், நியாயத்தீர்ப்பின் நாளில் எனக்கு என்ன நேரிடுமென்று அறிந்திருக்கிறேன். ஆண்டவரே என்னால் உணர முடிகின்ற அளவிற்கு எப்படியிருக்கிறேனோ, அதே விதமாக உணர்ந்திருக்கிறேன். அவர்களை நான் வார்த்தையிடம் கொண்டு சென்று, அவர்கள் வார்த்தையின்படி வாழ வேண்டுமென்று பிரயாசப்படுகிறேன். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்றும், இயேசு கிறிஸ்து என்னும் அதே நபர் தான் இப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் ரூபத்தில் இருக்கிறாரென்றும் நான் ஜனங்களுக்கு விளக்கிக் கொண்டு வந்திருக்கிறேன். ''இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைக்காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் உங்களோடிருந்து உங்களுக்குள் இருப்பேன்'' என்று நீர் சொல்லியிருக்கிறீர். ஆண்டவரே, இது நீரென்று எனக்குத் தெரியும். உம்மை நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் எங்கள் மத்தியில் நீர் அதே கிரியைகளைச் செய்வதை நாங்கள் காண்கிறோம். 365. இன்றைக்கு எங்களை தெளிந்த புத்தியுடன் சமர்ப்பிக்கிறோம். இங்குள்ள சபையோர் அப்படி செய்கிறார்கள். ஆண்டவரே, ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும், வாலிபப் பையனும் பெண்ணும் - இங்குள்ளவர்களும், வெளியில் நிற்பவர்களும், இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களும் ஆழ்ந்த பிரதிஷ்டையை இந்த நிமிடத்தில் செய்து, அவர்கள் தங்களை முற்றிலுமாக தேவனுடைய சேவைக்கென அர்ப்பணிக்க அருள்புரியும். 366. ஆண்டவரே, இந்த கூட்டத்தின் மேல் வல்லமையாக அசைவாடி, வியாதியஸ்தரை சுகப்படுத்துவீராக. கால் விளங்காத ஒரு பையன் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதாக என்னிடம் கூறினார்கள். மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே... அவருடைய சமூகத்தில் இப்படி உட்கார்ந்திருக்க மாத்திரமே எங்களுக்கு தெரியும். அவர் காரியங்களைச் செய்வார். உம்மால் வானொலி, தொலைகாட்சி வழியாக தேசம் பூராவும் சென்று வியாதியஸ்தரை சுகப்படுத்தக் கூடுமானால் (நீர் உமது வசனத்தை அனுப்பி அவர்களை குணமாக்கினீர்), இந்த நிமிடத்தில் அதையே நீர் செய்ய வல்லவராயிருக்கிறீர். தேவனே, இங்குள்ள வியாதியஸ்தர் ஒவ்வொருவரையும், இந்த வார்த்தை-களைக் கேட்கும் அனைவரையும் சுகப்படுத்துவீராக. தேவனே, இதை அருளும். என் ஜெபம் அவர்களுக்காக ஏறெடுக்கப்படுகிறது. 367. ஆண்டவரே கிறிஸ்துவின் அன்பை என் இருதயத்தில் கொண்டவனாய், தேவையுள்ளவர்க்காக பரிதாப உணர்வு கொண்டவனாய், அவர்களை பலி பீடத்தின் மேல் கிடத்தி, உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். அந்த பலிபீடத்தின் மேல் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் தோய்ந்த சரீரம் எங்கள் பாவ நிவாரணத்துக் கென்றும், வியாதியைப் போக்குவதற்கென்றும் கிடத்தப்பட்டுள்ளது. இந்த ஜனங்களின் மேல் இரங்க வேண்டுமாய் ஜெபிக்கிறேன். மோசே இடையில் நின்று மன்றாடினது போல, நானும் நின்று, ''தேவனே அவர்கள் மேல் இரக்கமாயிரும் - இன்னும் சற்று காலம் இரக்கமாயிருந்து அவர்களுக்கு வேறொரு தருணத்தை தாரும்'' என்று மன்றாடுகிறேன், ஆண்டவரே, இப்பொழுதே அவர்களை நியாந்தீர்க்க வேண்டாம். சுவிசேஷம் இன்னும் சற்று தூரம் செல்லட்டும். 368. ஆண்டவரே, அவர்கள் ஆக்கினைக்குள்ளாகி விட்டனர். உம்முடைய மகத்தான கிருபையும் இரக்கமும், புத்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள கடைசி நபர் வரும் வரைக்கும் நீடிக்கப்படுவதாக. அவர்கள் வருவார்கள் என்று எனக்குத்தெரியும். உம்முடைய திவ்விய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு ஜெபம் செய்வது கடினமல்ல. அது நீர் வாக்குத்தத்தம் பண்ணின வார்த்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை. அந்த வார்த்தை உலகத்தோற்றத்துக்கு முன்னாலேயே ஜனங்களை முன் குறித்து விட்டது. எனவே, புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களை இரட்சிக்க வேண்டுமென்று ஜெபிப்பது கடினமல்ல. ஏனெனில் நீர் அவர்களை இரட்சிப்பீரென்று எனக்குத் தெரியும். இயேசுவும், 'என் பிதா எனக்குத் தந்தயாவும் என்னிடத்தில் வரும்'' என்று கூறியுள்ளார். யாரும் தரப்படாமல் வரவே முடியாது. 369. தேவனே, இந்த வார்த்தை விழும் எல்லாவிடங்களிலும் இங்குள்ளவர்-களும், ஒலிநாடாவைக் கேட்பவர்களும் பரிசுத்த ஆவியானவர் தாமே, உலகத் தோற்றத்துக்கு முன்னால் முன் குறிக்கப்பட்டு, ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள ஒவ்வொரு நபரையும் அழைப்பாராக. தேவனுடைய மெல்லிய சத்தம் இன்று அவர்கள் இருதயங்களில், "இதுவே வழி, இதில் நடவுங்கள்'' என்று கூறுவதைக் கேட்பார்களாக. பிதாவே, இதை அருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். 370. இங்குள்ளோர் தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில் இது சத்தியமென்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால்.... (இங்குள்ள உறுமால்களின் மீது என் கைகளை வைத்து ஜெபிக்க விரும்புகிறேன். அது வியாதியஸ்தர்க்கும் துன்பப்படுகிறவர்களுக்கும்), உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். 371. நீங்கள் என் பிரசங்கத்தைக் கேட்கவேண்டும் என்பதற்காக நான் இங்கு வரவில்லை. நான் களைப்புற்றிருக்கிறேன். நான் முன்பு போல் வாலிபனாக இல்லை. நமது நாட்கள் கணக்கிடப்பட்டுள்ளன என்பதை நானறிவேன். தேவனுடைய ராஜ்யத்திற்காக ஒவ்வொரு சிறு காரியத்தையும் நான் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். எனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாமற் போனாலும் அதை நான் செய்ய வேண்டும். 372. நான் இங்கு வரும் காரணம் என்னவென்றால், நான் இங்கு வரவேண்டும் என்று விரும்புவதே. உங்களை நான் நேசிக்கிறேன். நான் வேண்டுமென்று கடினச் சொற்களை உபயோகப்படுத்துவதில்லை. எனக்குள் ஒரு உணர்ச்சி ஏற்படுவதனால் அப்படி செய்கிறேன். இங்கு உறுதிப்படுத்தப்பட்ட காரியங்கள் தான் என்னை அவ்விதம் செய்யத் தூண்டுகின்றன. அதை நான் தயவாயும் அன்போடும் கூறுகிறேன். நமது ஆண்களையும் பெண்களையும் கடிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பவில்லை. சகோதரனே, சகோதரியே, நான் அப்படிச் செய்ய நினைக்கவில்லை. தேவனுடைய சீர்படுத்தலையும் அவருடைய சவுக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளக்கூடிய அந்த கூர்மையான இடத்திற்கு உங்களைக் கொண்டு செல்லவே நான் முயல்கிறேன். நீங்கள் இப்பொழுதே உள்ளே வர வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்கிறேன். அதை தள்ளிப்போட வேண்டாம். அப்படி தள்ளிப்போட்டால், நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க நேரிடும். 373. உங்கள் இருதயத்தை முழுவதுமாக தேவனுக்கு அர்ப்பணித்து, இந்த சபையின் முன்னிலையில் கர்த்தருடைய பட்சத்தில் வர விரும்புகிறவர்கள் அல்லது இந்த ஒலிநாடாவை நாடெங்கிலும் கேட்பவர்கள், உங்கள் தலைகளை வணங்கினவர்களாய்... நீங்கள் கரங்களை உயர்த்த வேண்டாம். நீங்கள் உண்மையில், மேலான பிரதிஷ்டையுள்ள ஜீவியத்துடன் தேவனிடம் வர விரும்பினால், இப்பொழுதே உங்கள் கரங்களை உயர்த்தும்படி கேட்டுக் கொள்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவருடைய நிந்தையை சுமப்பதற்காக உங்களை கிறிஸ்துவுக்குள் புதிதாக பிரதிஷ்டை செய்து கொள்கிறீர்கள், "நான் நிந்தையை சுமக்க சித்தமாயிருக்கிறேன்'' என்று கூறுங்கள். 374. என் இருகரங்களையும் நான் உயர்த்தியிருக்கிறேன். “இயேசு கிறிஸ்துவின் நிந்தையை என் மேல் ஏற்றுக் கொள்ள சித்தமாயிருக்கிறேன். 'பரிசுத்த உருளுபவர்' என்று அவர்கள் என்னை அழைக்கும் குறியை - அல்லது அவர்கள் உபயோகிக்கும் வேறு வகைச் சொற்களை - என் மேல் போட்டுக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறேன். அதை நான் பெருமையுடன் அணிந்து கொள் கிறேன். அதை நான் தேவனுக்காக செய்கிறேன்.'' 375. நீங்கள் எல்லோரும் அப்படியே செய்ய விரும்புகிறீர்கள் அல்லவா-? உங்கள் கைகளை உயர்த்தி, "தேவ கிருபையைக் கொண்டு அப்படியே செய்ய விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். அவருடைய நாமத்தின் நிமித்தம் நிந்தை அனுபவித்ததை ஒரு பெரிய கௌரவமாக சீஷர்கள் கருதினர். நீங்கள் ஹாலிவுட் நடிகரின் நிமித்தம், அல்லது தொலைகாட்சியின் நிமித்தம், அல்லது ஸ்தாபன அங்கத்தினரின் நிமித்தம் நிந்தை அனுபவிக்கப் போகின்றீர்களா, அல்லது இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்காக நிந்தை அனுபவிக்க விரும்புகிறீர்களா-? ''ஆண்டவரே, உமது வார்த்தையின் நிமித்தம் எனக்கு நிந்தையை தாரும். அவர் தேவனுடைய வார்த்தைக்காக நிந்தையை சுமந்தாரென்று அறிவேன். ஆண்டவரே, நானும் அதை சுமக்கட்டும்.'' பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலுவையை நான் மரணம் என்னை விடுவிக்குமளவும் சுமப்பேன் பின்பு கிரீடம் சூடிக் கொள்ள வீடு செல்வேன் 376. என்றாவது ஒரு நாளில் நமக்கு கிரீடம் சூட்டப்படும். அந்த கிரீடம் இப்பொழுது செய்யப்பட்டுக் கொண்டு வருகிறது. பூமிக்குரிய இந்த நமது வாழ்க்கை முடிவுற்றவுடன், அது நமக்காக ஆயத்தமாயிருக்கும். 377. பீடத்திற்கருகில் ஜனங்களை வரவழைக்க இங்கு இடமில்லை. உங்கள் இருக்கைகள் பீடமாக அமையட்டும். ''விசுவாசித்தவர்கள் எவர்களோ....'' நாம் ஜெபம் செய்வோம். 378. பரலோகப் பிதாவே, வாலிபரின் கரங்களும், வயோதிபரின் கரங்களும் எல்லோருடைய கரங்களும் உயர்த்தப்பட்டதாக எனக்குத் தோன்றினது. ஆண்டவரே, ஒவ்வொரு முறையும் இந்த ஒலிநாடா போடப்படும் போது, ஜனங்கள் தங்கள் அறைகளில் முழங்காற்படியிட்டு கரங்களை உயர்த்து-வார்களாக. தகப்பனும் தாயும் ஒருவர் கரங்களை ஒருவர் பிடித்துக் கொண்டு, ''அன்பே, நாம் நீண்ட காலமாக ஸ்தாபனத்தின் அங்கத்தினர்களாக இருந்து விட்டோம். இப்பொழுது நாம் கிறிஸ்துவினிடத்தில் வருவோம்" என்று கூறட்டும். ஆண்டவரே, இதை அருளும். 379. இங்குள்ள ஜனங்களை ஆசீர்வதியும், ஆண்டவரே, அவர்களுக்கு ஒரு பிரதிஷ்டை ஜீவியத்தை தரும்படி வேண்டிக்கொள்கிறேன். அவர்களில் அநேகர் நல்லவர்கள். அவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் இப்பொழுது தான் சத்தியத்தை அறிந்து கொண்டனர். ஆண்டவரே, உம்முடைய சத்தியத்தை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். ''உமது வசனமே சாத்தியம்.'' 380. ஆண்டவரே, யோவான் 17-ம் அதிகாரத்தில் நீர் கூறியுள்ளபடி, 'உம்முடைய சத்தியத்தினால் அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்.'' 381. ஆண்டவரே, உம்முடைய வசனம் இன்றும் சத்தியமுள்ளதாயிருக்கிறது. அது எக்காலத்துக்கும் சாத்தியமுள்ளதாயிருக்கிறது. ஏனெனில் அது தேவனாய் இருக்கிறது. ஆண்டவரே, உம்முடைய சத்தியத்தினால் அவர்களைப் பரிசுத்தமாக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். அவர்களை எல்லா கோட்பாடுகளினின்றும் ஸ்தாபனங்களின்றும் பரிசுத்தமாக்கும், சுத்தமாக்கும். உலகக் காரியங்கள் எல்லாவற்றினின்றும் அவர்களை சுத்தமாக்கி, வார்த்தையின் பேரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவியத்தை அருளும். ஆண்டவரே, அவர்கள் இப்பொழுது உம்முடையவர்கள். நீர் அவ்விதம் செய்வதாக வாக்களித்துள்ளீர். உம்முடைய ஊழியக்காரன் என்னும் நிலையில் அவர்கள் சார்பில் என் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.... 382. நாம் தலைவணங்கினவர்களாய், தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் போது இப்பாடலைப் பாடுவோம். இயேசு எல்லா கிரயத்தையும் செலுத்தி விட்டார் எல்லாவற்றிலும் நான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன் (அதை யோசித்துப் பாருங்கள்) பாவம் சிவந்த கறையை விட்டது. அவரோ அதை பனியைப் போல் வெண்மையாகக் கழுவினார். 383. நேற்று நான் ஒரு இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு மனிதன் என் ''சூட்டுக்கு அளவு எடுத்தார். இந்த சபையிலுள்ள ஒரு சகோதரன் அதை எனக்கு வாங்கிக் கொடுத்தார். அவர், நீங்கள் அணிந்திருந்த "சூட்' தேகத்திற்கு உஷ்ணம் உண்டாக்கும்படி இருந்தது. எனவே குளிர்ச்சி தரும் சூட்' ஒன்றை நான் வாங்கி கொடுக்க முன் வந்தேன் என்றார். 384. அளவு எடுத்த அந்த மனிதன், "உங்கள் வலது தோள் கீழே சரிந்திருக்கிறது. முன்பொரு நாளில் நீங்கள் அதன் மேல் பாரமான சுமையை சுமந்திருப்பீர்கள்'' என்றார். 385. நான், "ஆம், பாவமாகிய சுமை. ஆனால் இயேசு எல்லா கிரயத்தையும் செலுத்தி விட்டார்'' என்று எண்ணிக் கொண்டேன். அதை நாம் பாடும் போது கவனித்துக் கேட்போம். இயேசு எல்லா கிரயத்தையும் செலுத்தி விட்டார். எல்லாவற்றிற்கும் (என் ஜீவனுக்கும்) நான் அவருக்கு கடன்பட்டிருக்கிறேன். (பாவம் என்ன செய்தது-?) பாவம் சிவந்த கறையை விட்டது. அவரோ அதை பனியைப் போல் வெண்மையாகக் கழுவினார். 386. தேவனே, இந்த ஆழ்ந்த தியானத்தின் போது எங்கள் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே, வார்த்தை எங்கள் இருதயங்களில் ஆழமாக ஊறட்டும். ஜனங்கள் இரவு உணவிற்குப் பிந்தி விட்டனர். ஆனால் இது எங்களுக்கு மேலான ஆகாரமாய் உள்ளது. இது எங்களுக்கு ஜீவன். 'என் வார்த்தை அப்பம்'' என்று நீர் கூறியுள்ளீர். பசியுற்ற எங்கள் ஆத்துமாக்கள் அதைக் கொண்டு தான் விருந்து உண்டு வருகின்றன. 387. ஆண்டவரே, எங்களை வனையும். என்னையும் அவர்களுடன் சேர்த்து வனையும், நான் அவர்களுடன் செல்ல விரும்புகிறேன். ஆண்டவரே, விசுவாசத்தினால் நான் இப்பொழுது கல்வாரிக்கு சென்று கொண்டிருக்கிறேன். நான் இந்த சபையாருடன் கூடச்செல்கிறேன். ஆண்டவரே, என்னை வனையும், ஆண்டவரே, அநேக முறை நான் தவறு செய்திருக்கிறேன். 388. அண்மையிலும் கூட பிரசங்கம் செய்வதை நான் விட்டுவிட எண்ணினேன். ஜனங்கள் என் பிரசங்கத்தைக் கேட்க மறுக்கின்றனர். அவர்கள் செய்ததையே செய்து கொண்டிருந்தால். நான் ஏமாற்றமடைந்து என்னில் ஒரு தன்மையை (Complex) உருவாக்கிக் கொண்டேன். ஓ, தேவனே, 2 ஞாயிற்றுக் கிழமைகளுக்கு முன்பு, நீர் அந்த அடையாளத்தை எனக்கு அளித்த போது, நானும் வேதத்தை வாசித்து, நீர் மோசேக்கு என்ன கூறினீர் என்று அறிந்து கொண்ட போது, அந்த சொப்பனத்தில் காணப்பட்டபடியே, அந்த மலை அவனுக்கும் அடையாளமாயிருந்தது. அந்த மலையின் முடிவுக்கு வந்தபோது, நான் அநேக வியாதியஸ்தர்களை விட்டு விட்டேன் என்பதை அறிந்து கொண்டேன். என் ஊழியம் தீர்க்கதரிசியின் ஊழியம் மாத்திரமல்ல வார்த்தையைப் போதிக்கும் ஊழியம் மாத்திரமல்ல, அது வியாதியஸ்த ர்களுக்கும் ஜெபிக்கும் ஊழியம் என்பதை காண்பித்தீர். ஒரு மனிதன் மரித்து தரையில் விழ நீர் அனுமதித்து, அது உண்மை என்பதை நிரூபிக்க, அவரை மறுபடியும் உயிருடன் கொண்டு வந்தீர். ஆண்டவரே, நீர் எப்பொழுதும் உம்முடைய வார்த்தையை உறுதிபடுத்துகிறவராயிருக்கிறீர். 389. இப்பொழுது ஆண்டவரே, உமது சிங்காசனத்தின் முன் நான் நிற்கும் இத்தருணத்தில் உமது வார்த்தையை உறுதிப்படுத்தித் தாரும். இவர்கள் ஒவ்வொருவரையும் உமது கையிலெடுத்துக் கொண்டு, உலகக் காரியங்கள் அனைத்தையும் அவர்களை விட்டகற்றும். ஆண்டவரே உமது, சமூகத்தில் இருக்கும் போது, என்னையும் கையிலெடுத்துக் கொள்ளும். வார்த்தையை எடுத்துக் கொண்டு, எங்கள் இருதயங்களைப் பிழியும். தேவனே, இப்பொழுதே உலகத்தையும் அதன் கவலைகளையும் எங்களை விட்டகற்றும். ஓ, தேவனே, நாங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாயிருந்து, அன்பும் தயவும், இனிமையும் காண்பித்து, ஆவியின் கனிகளை ஈனும்படி செய்யும் ஆண்டவரே, அப்படி செய்ய மாட்டீரா-? நாங்கள் உம் சிங்காசனத்தின் முன்பாக இருக்கிறோம். எங்கள் ஒவ்வொருவர் மேலும் பாவம் தன் சிவந்த கறையை விட்டுள்ளது. ஆனால் ஆண்டவரே, உமது இரத்தம் அதைப் போக்கி, பனியைப் போல் வெண்மையாக்க முடியும். நாங்கள் உமக்காகக் காத்திருக்கும் இந்நேரத்தில் இதை அருளுவீராக. எங்களைக் கையிலேந்திக் கொள்ளும். நாங்கள் உம்முடையவர்கள். எங்கள் ஜீவியத்தை உமக்கென்று பிரதிஷ்டை செய்கிறோம். ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் ஒவ்வொருவருக்கும் இதை அருளுவீராக. 390. ஆண்டவரே, என் இருதயத்தைப் பிழியும். என் தவறுகளை நான் காண்கிறேன். இந்நேரம் முதற்கொண்டு என்னால் இயன்ற வரை உமக்குதவி செய்ய நான் ஜீவிப்பேன். நான் செல்ல விரும்புகிறேன், உமக்காக புதிதாக என்னுடைய ஜீவியத்தை இங்கே இக்காலையில் அர்ப்பணிக்க விரும்புகிறேன். 391. இந்தக் குற்றச்சாட்டை என் போதக நண்பர்கள் மேல் கொண்டு வந்து, இந்த கடினமான காரியங்களைக் கூறின பிறகு, என் ஜீவியத்தை இன்று காலை புதிதாக பிரதிஷ்டை செய்ய விரும்புகிறேன். ஆண்டவரே, உமது ஏவுதலினால் இதை செய்தேன். நான் இவ்விதம் செய்ய வேண்டுமென்று என்னிடம் கூறினீர் என்று உணருகிறேன். இந்த பாரம் இப்பொழுது என் தோள்களை விட்டு நீங்கி விட்டது. அது நீங்கியதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். பிதாவே, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, எல்லோரையும் நீர் இரட்சிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். 392. சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு, எழுப்புதல் உண்டாகி, ஒரு மகத்தான வல்லமை சபையின் மத்தியில் காணப்படுவதாக. அப்படி ஜெபம் செய்வது கடினமல்ல. ஏனெனில் அதை நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். கர்த்தாவே, எங்கள் மத்தியில் எங்களுக்காக மகத்தான கிரியைகளை அந்த மூன்றாம் இழுப்பு செய்யுமென்று அறிந்தவர்களாய் அதை எதிர் நோக்கி இருக்கின்றோம். 393. ஆண்டவரே, நான் உம்முடையவன். எனக்குத் தெரிந்த மட்டில் என்னை பிரதிஷ்டை செய்து கொண்டவனாய், இந்த பலி பீடத்தின் மேல் என்னை கிடத்துகிறேன். ஆண்டவரே, உலகத்தை என்னை விட்டகற்றும். அழிந்து போகக்கூடியவைகளை என்னை விட்டகற்றி, அழிந்து போகக் கூடாதவைகளை தேவனுடைய வார்த்தையை - எனக்களியும். நான் வார்த்தையுடன் நெருங்கி ஜீவித்து, வார்த்தை என்னிலும் நான் வார்த்தையிலும் இருக்கத்தக்கதாக அந்த விதமாக அருள் புரியும். அதிலிருந்து நான் விலகாதிருப்பேனாக. ராஜாவின் பட்டயத்தை நான் மிக நெருக்கமாக இறுகப்பிடித்துக் கொள்ளச் செய்யும். கர்த்தாவே, இதை அருளும். 394. எங்கள் எல்லோரையும் ஒருமித்து ஆசீர்வதியும். நாங்கள் உமது ஊழியர். இன்று காலை எங்கள் இருதயங்களில் எங்களைப் புதிதாக பிரதிஷ்டை செய்து கொள்கிறோம். ஊழியத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் உம்முடையவர்கள். இயேசு எல்லா கிரயத்தையும் செலுத்திவிட்டார் (சகோ. நெவில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக…